கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலையில் ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டது.
மாநிலங்களுக்கு நிலையான வருவாய் ,தொழில் செய்பவர்களுக்கு நிறைய பலன்கள் என்று எல்லோரும் பாராட்டும்படி உண்மையில் பிரதமர் சொன்னது போல் பொதுமக்களுக்கான தீபாவளி பரிசு .
ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்ட போது சில மாநிலங்கள் தங்களுக்கான வரி வருவாயை நாங்கள் இழப்போமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.
ஜி.எஸ்.டி கவுன்சில் என்ற அமைப்பு எல்லா மாநிலங்களின் பங்களிப்பு கொண்ட அவர்களின் ஆலோசனைகளை கேட்கும் ஒரு அமைப்பாக அது இருந்ததால் அவர்களுக்கு அந்த அச்சம் சில மாதங்களிலேயே காணாமல் போனது. இதற்கு உதாரணமாக ஜி.எஸ்.டி வரி வசூல் மாதாமாதம் அதிகரித்துக் கொண்டே போனது. கடந்த ஏப்ரல் மாதம் ஜி.எஸ்.டி வரி வசூல் 2.37 லட்சம் கோடி ரூபாய்.
ஜி.எஸ்.டி டிஜிட்டல் நடைமுறையில் மின்னணு விலைப்பட்டியல் மின்னணு பில் வந்த பிறகு வரி ஏய்ப்பு என்று சொன்னாலும் சில பெரிய நிறுவனங்கள் ஜி.எஸ்.டி வரியை நுகர்வோர்களிடம் வசூலித்தாலும் அதை முறையாக பில்லில் காண்பிப்பதில்லை.
எஸ்டிமேட் என்ற பெயரில் ஜி.எஸ்.டி வரியை அரசாங்கத்துக்கு செலுத்தாமல் ஏமாற்றுகிறார்கள் என்ற புகார் வர தொடங்கியது.
மத்திய நிதி அமைச்சர் இப்படி முறைகேடு செய்பவர்கள் யார் என்று விவரத்தை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவியுங்கள் உடனடி நடவடிக்கை நிச்சயம். நாங்கள் தொழில் நிறுவனங்களுக்கு அவர்கள் பிரச்சனைகளை தெரிந்து கொண்டு நிறைய சலுகைகளை வழங்கி இருக்கிறோம். இதற்கு முக்கிய காரணம் ஜி.எஸ்.டி யில் எந்தக் குழப்பமோ குளறுபடியோ வரக்கூடாது என்பதற்கு தான் என்று சொன்னார்.
ஜி.எஸ்.டி இன்னும் எளிமையாக்கப்பட்டிருக்கிறது.
நான்கு வரி விகிதங்களில் இருந்து இரண்டு வரி விகிதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
இதன் மூலம் அத்தியாவசிய பொருட்கள், பயணம் மற்றும் மின்னணு பொருட்களுக்கான ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டியின் டிஜிட்டல் வசதி காரணமாக சிறிய வியாபாரிகளுக்கு 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை வரிச்சுமை குறைந்துள்ளது.
வரி செலுத்துபவர்கள் எண்ணிக்கை 1.50 கோடியாக உயர்ந்துள்ளது.
எல்லாவற்றையும் விட அதிகாரிகளை சந்தித்து பேரம் பேச வேண்டும் என்ற நிலைமை மாறி வெளிப்பட தன்மையை ஜி.எஸ்.டியின் மாற்றம் வியாபாரிகளுக்கு தந்திருக்கிறது.
பிரதமர் ஜி.எஸ்.டி பற்றிய தனது உரையில் வரிக்குறைப்பு மூலம் பொதுமக்கள் கணிசமான அளவு சேமிக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்.
குடும்பத்தில் சேமிப்பு என்பது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான முதல் படி , இதைத்தான் பிரதமர் கோடிக்கணக்கான ஏழை நடுத்தர குடும்பங்களின் சேமிப்பு உயரும் வளர்ச்சி அதிகரிக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
எதிர்க்கட்சிகள் கூட இதற்கு பிரதமர் மட்டும் சொந்தம் கொண்டாடுகிறார் உரிமை கொண்டாடுகிறார் என்று தான் சொல்கிறார்களே தவிர இந்த ஜி.எஸ்.டி வரி குறைப்பில் குறிப்பிட்டு சொல்லும் படி அவர்களால் எந்த குற்றச்சாட்டு சொல்ல முடியவில்லை.
ஜி.எஸ்.டி வரி வருவாய் என்பது மாநிலங்களுக்கு கணிசமான ஒரு வருமானம்.
இது எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களும் அந்த பலனை அனுபவிக்கப் போகிறது.
இதன் மூலம் அவர்கள் கடன் சுமை குறைய வாய்ப்பு.
ஜி.எஸ்.டி வரி குறைப்பு அறிமுகப்படுத்திய அன்றே முப்பதாயிரம் மாருதி கார்கள் விற்பனையாக இருக்கின்றன. ஜி.எஸ்.டி பலனுக்கான ஒரு உதாரணம் .
மத்திய அரசு இதை தொலைநோக்குப் பார்வையுடன் மக்களின் தேவைகளை மனதில் வைத்தும் திட்டமிட்டு இந்த மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது.
Leave a comment
Upload