
மத்தியில் ஆளும் பாஜக அரசு தாங்கள் வெற்றி பெறவே புதிதாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தத்தை கொண்டு வந்திருப்பதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பெண்கள், சிறுபான்மையர் ஓட்டுக்களை தேர்தல் ஆணையம் நீக்கிவிடும் என்பது இவர்கள் குற்றச்சாட்டு.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்த பணியை தமிழ்நாட்டில் செய்ய இருப்பது தமிழக அரசின் அதிகாரிகள் தான். தவிர இந்தப் பணிக்கான வழிமுறைகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், மாநிலத்தின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் சேர்ந்து வரைவு வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்து மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை அடையாளம் காண வேண்டும்என்று குறிப்பிட்டிருக்கிறது. மேலும் அரசியல் கட்சியின் செயல்பாடுகளை அதிகரிக்கும் பொருட்டு தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களை ஒரு வாக்குச்சாவடி முகவர் வரைவு வெளியீட்டுக்கு பிறகு நாள் ஒன்றுக்கு 50 படிவங்களுக்கும் அதிகமாக வரைவு வெளியீட்டுக்கு ஒரு நாளைக்கு பத்து படிவங்களுக்கு அதிகமாகவும் வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கு அளிக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு உட்பட்டு மொத்தமாக விண்ணப்பங்கள் அளிக்க அனுமதி அளித்துள்ளது.
இது தவிர ஒவ்வொரு வாக்குச்சாவடி முகவரும் அந்த விண்ணப்ப படிவங்களில் உள்ள விவரங்கள் சரிபார்க்கப்பட்டது. அவை சரியானவை என்று மன நிறைவு அடைந்துள்ளதாக ஒரு உறுதிமொழி படிவத்தை இணைத்தளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
எனவே வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் அரசியல் கட்சிகளின் பங்களிப்புக்கு தேர்தல் ஆணையம் உரிய முக்கியத்துவம் தந்திருக்கிறது. அப்படி இருக்கும் போது தேவையில்லாத அரசியல் காரணங்களுக்காக தேர்தல் ஆணையத்தின் மீது பழி போடுவதை தவிர்த்து தேர்தல் ஆணையத்துக்கு அரசியல் கட்சியில் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இப்போது ஆளுங்கட்சியா இருக்கும் திமுக கூட சென்னை ஆர் கே நகரில் இடைத்தேர்தல் நடந்த போது வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியதை மறந்து விடக்கூடாது.

Leave a comment
Upload