தொடர்கள்
பொது
தேஜோவதி - ரைவத மலை மஹாத்மியம் - கொல்கத்தா இராதாகிருஷ்ணன்

20251012193726112.jpg

மண்டல காலம் இதோ ஆரம்பித்துவிட்டது. தேஜோவதி என்ற சாஸ்தா பற்றிய களஞ்சியத்திலிருந்து பகிர்வு தொடர்கிறது. இதற்குமுன் முடிந்த இதழில் நாம் குறிப்பிட்டிருந்த இறுதி பகுதியை இங்கு வாசகர்களுக்கு தொடர்ந்து படிக்க பகிர்கிறோம்.

ஸ்ரீமஹாசாஸ்தாவிற்கு ஆலயம் அமைத்தல்:

ரேவதியாகிய அம்முனிபுத்ரியும், தமது விருப்பத்தினை நிறைவேற்றிவிட்டு ரைவத மலையில் நித்யகல்யாண சுந்தரமூர்த்தியாய் எழுந்தருளியிருக்கும் பகவானுக்கு பிரம்மாண்டமான ஆலயம் நிர்மாணித்து தனது கணவனுடன் சேர்ந்து பகவான் ஸ்ரீமஹாசாஸ்தாவை பக்தி சிரத்தையுடன் ஆராதித்தாள்.

தொடர்வோம். மண்டல மகர காலத்தைக் கொண்டாடுவோம்.

அந்த முந்தைய இதழின் (18.5.2024) லிங்க் இதோ.

https://www.vikatakavi.in/magazines/370/12930/thejovathi.php

சந்தானப்ராப்தி அருளும் பகவான்:

ரேவதியும் அவள் கணவர் துர்த்தம சக்கரவர்த்தியும் ஆராதித்து வரும் அப்பூஜையில் மகிழ்ந்த பகவான். ஸ்ரீமஹாசாஸ்தா அவர்களுக்கு காட்சியளித்து “என் பாதகமலங்களில் மெய்யன்போடு ஆராதிக்கும். தம்பதிகளே! உங்கள் பூஜையில் நான் மிகவும் மனம் மகிழ்ந்தேன், அத்தகைய உங்களுக்கு பெரும். பாக்கியசாலியான ஒரு மகன் பிறப்பான். அவனும் எனதருளால் மன்வந்திரம் ஒன்றினுக்கு அதிபதியாகும். பெரும் பேற்றினைப் பெற்று சகல உலகத்தாராலும் போற்றப்படுவான்,’ என அருளாசி புரிந்தார்.

பின்னாளில், பகவான் ஸ்ரீமஹாசாஸ்தா அருளியபடி துர்த்தம சக்கரவர்த்திக்கும் ரேவதிக்கும் ஒரு குமாரன் பிறந்தான். அவனுக்கு ரைவதன் என நாமமிட்டு வளர்த்து வந்தனர். இவரே பகவான் ஸ்ரீமஹாசாஸ்தாவின் அனுக்கிரகத்தால் பதினான்கு மன்வந்திரங்களில் ஒரு மன்வந்திரத்துக்கு அதிபதியாகும் பேரினைப் பெற்று இவரது திரு நாமத்தால் அந்த மன்வந்திரம் ரைவத மன்வந்திரம் என அறியப்படுகிறது. இது ஐந்தாவது மன்வந்திரம். ஒரு மன்வந்திரம் என்பது 5,18,40,000 (ஐந்து கோடியே பதினெட்டு லட்சத்து நாற்பதாயிரம்) ஆண்டுகளாகும். தற்பொழுது நடைபெறுவது வைவஸ்வத மன்வந்திரம் ஆகும். இது ஏழாவது மன்வந்திரம் ஆகும்.

அபீஷ்ட தாயகர்

மந்திர மஹோததி கூறுவதாவது

ஸாத்யம் ஸ்வபாசேன விபத்ய காடம்

நிபாத்யசந்தம் கலு ஸாதகஸ்ய

பாதாப்ஜயோர் தண்டதரம் த்ரிநேத்ரம்

பஜேத சாஸ்தாரம் அபீஷ்டஸித்யை

தன்னை வழிபடும் பக்தர்கள் விரும்புவதை தன் பாசத்தால் கட்டி இழுத்து தருபவரும், கையில் தண்டம். ஏந்தியவரும், மூன்று கண்களை உடைய சாஸ்தாவை எனது விருப்பங்கள் நிறைவேற வணங்குகிறேன்.

மந்திரங்களின் அகராதியான மந்திர மஹோததி கூறும் இந்த வடிவத்தை அதற்குரிய மூலமந்திரத்துடன். முறையாக உபாசிப்பவர்கள் அடைய முடியாதது ஒன்றுமே இல்லை. அவர்கள் கோரும் வரம் அனைத்தையும். பகவான் சாஸ்தா உடனடியாக கொண்டு தருவார்.

மேற்கூறிய ஸ்லோகத்தில் வர்ணித்துள்ள படியான தோற்றத்துடன் பகவான் எட்டு பரிவார கணங்கள் புடை. சூழ ரைவதகிரியில் நித்யவாசம் புரிவதக் கூறப்படுகிறது.

இவ்வையனுக்குரிய முப்பத்திரண்டு அக்ஷரங்களை உடைய மூல மந்திரத்தினால் தினமும் மூன்று வேளை. ஜபம் செய்து, ஒரு லக்ஷம் முறை ஜபம் செய்யும் சாதகன் கோரிய அனைத்து வரங்களையும் அடைவான்.

இந்த ரைவத மலையில் வீற்றிருக்கும் பகவான் ஸ்ரீமஹா சாஸ்தா பக்தர்கள் கோரும் வரங்கள் அனைத்தையும் அவர்கள் காலடியில் கொண்டுவந்து கொட்டும் அபீஷ்ட தாயகராய் விளங்குகிறார்.

ரைவத மலைக் காவலர்கள்

கையினில் தண்டத்தினை ஏந்தி நாயகனாக இங்கு வீற்றிருக்கும் பகவானுக்கு திசை நாயகர்களாக. விளங்கும் எட்டு பரிவார வீரர்களான கோப்தா, பிங்களாக்ஷன், வீர சேனன், சாம்பவன், த்ரிநேத்ரன், சூலி, தக்ஷன், பீமரூபி ஆகியோர் திக் பாலகர்களாக புடைசூழ ஸ்ரீமஹா சாஸ்தா அபீஷ்ட தாயகராக ரைவத. மலையில் நித்ய வாசம் புரிகிறார்.

மேலே கூறிய இந்த் ஏட்டு கணங்கள் தவிர மேலும் பற்பல பூத கணங்கள் பகவான் ஸ்ரீமஹா சாஸ்தாவின். ஆணைக்கு உட்பட்டு அவரது கட்டளைகளை ஏற்று அவருக்கு சேவை புரிகின்றனர்.

மேலும் வீரன், முன்னடியான், சங்கிலிவீரன், ஜடாமுனி, இருளன் மனை மரத்தான், நொண்டி, பெரியண்ணன், நெருப்பினை கக்கும் வாயை உடையவன் போன்ற பூத கணங்களாலும், குதிரை வாகனம், நாய் வாகனம். இவைகளைக் கொண்ட சேனாதிபதிகளாலும் போற்ற்ப்படும் பகவான் ஸ்ரீ மஹா சாஸ்தா கருணையே. உருவாக அன்பர்களின் ஆபத்துக்களை அகற்றி எல்லா உயிர்களையும் காத்து வருகிறார்.

இவர்களைத் தவிர கருப்பன், மாடன், பூதத்தான், யக்ஷி, பாவாடைராயன், வீரன் போன்றோரும் பகவான். ஸ்ரீமஹா சாஸ்தாவின் ஆணைக்கு உட்பட்ட கணங்கள் ஆவார்கள்.

பகவானின் பூதப்படையைச் சேர்ந்த பூதங்களிலேயே பலவித பூதங்களை காணலாம். பெரும் பூதம், கரும் பூதம், கட்ட பூதம், நட்ட பூதம், ஒட்ட பூதம், இட மலை பூதம், காஞ்சர பூதம், ஊமை பூதம், குண்டாந்தடி பூதம், வெஞ்சிலை பூதம், வடமலை பூதம், தலைமலை பூதம், பாதாள பூதம், ஆனந்த பூதம், வெள்ளைக்கல் பூதம், கருஞ்சடை பூதம், பெரும்படை பூதம், நீரடி பூதம்,பாதாள பூதம் என பற்பல பூதங்கள் பகவான் ஸ்ரீமஹா சாஸ்தாவின் ஆணைக்காக காத்து நிற்பர்.

பகவான் ஸ்ரீமஹா சாஸ்தாவிடம் கோடி பூத் சேனைகள் உள்ளனர்.

மணிதாசர் பாடல்களில் பூதப் படைகள்

மணிதாசரும் பகவான் ஸ்ரீமஹா சாஸ்தாவின் பூதப்படைகளைப் பற்றி

நட்ட பூத நடு விளக்கு எடுக்க

வெஞ்சிலை பூதம் எதிரேற்று கட்டியம் கூற

வெள்ளக்கல் பூதம் விருது சொல்ல”

“நன்றாம் வெள்ளக்கல் பூதம் நாடும் பெரும் பூதமும்

மண்ணில் அதிக வீரம் பொருந்தும் கரு பூதமும்”

ஈமலை, வடமலை, தலைமலை முதலான

பூதங்கள் ஓடிவரவே”

“கோட்டை தலை மலையன்

குண்டாந்தடி பூதம்”

“சாக்ஷி வெள்ளக்கல் பூதம்”

“இண்டலப் பிள்ளையும் காஞ்சர பூதமும்”

“பரதநாட்டிய மாட பாதாள பூதம் கூட…”

“சாமுண்டி முதலான பூதங்கள்….”

“வெள்ளக்கல் பூதமும் வேதாள பூதமும்…”

“கருஞ்சடை பூதமும் பெரும்படை பூதமும்…..”

“நீரடி பூதம் சங்கிலி பூதம்”

என்றெல்லாம் பாடுவார்.

ஸ்ரீ பூதநாதன் வர்ணனை :

பூதசேனைகளுக்கெல்லாம் தலைவரான பூத நாதனைப் பற்றி மணிதாசர் வர்ணிக்கும் அழகு :

“ நீருண்ட மேகமது போலவே திருமேனியழகும்

நீண்டு வளர் மீசையழகும்

நெற்றியில் கஸ்தூரித் திலகமும் மணி மகுடமும்

நேர் புருவ விழியின் அழகும்

பார் கொண்ட நவரத்தினம் ஒளிர் பொற்பதக்கமும்

பல்வரிசை போல் அழகும்

பகைவரை வெல்லவே பிடித்திடும் கதையுடன்

பெருவழி சிவந்த அழகும்

நேர்கொண்ட கச்சையது கட்டியே சரிகையுடன்

நின்று வளர் பாதமழகும்

நித்யமும் பக்தர்களை வாழ்கவென்று அருள் செய்யும்

நிறைந்த சங்கிலியின் அழகும்

சீர்கொண்டடிக்கடி சிரித்து அட்டகாசம் செய்யும்

சிறந்த முகசோபை அழகும்

ஸ்ரீலலிதை காணவே ஜெய பூத நாதனும்

தெருவில் வரும் பவனி பாரீர்”

பூதனாதன் தனது பரிவாரங்களுடன் அட்டகாசமாக வரும் அழகை மணிதாஸர் வர்ணிக்கும் அழகு :

“ஆட்டகாசத்துடன் பூதனாதேஸ்வரன்

ஆனந்தமாகி வரவே

அழகாய் இசக்கியும் யக்ஷியும் கருப்பனும்

சாவலனும் அவருடன் சேர்ந்து வரவே

இஷ்டமுடன் வெகுகோடி பூதங்களும்

கட்டியம் கூறியே சரகுருட்டியும்

பின் தொடர்ந்து வரவே அஷ்டதிக்கும்

அதிர பதினெட்டு வாத்தியமுடன்

ஐயனும் வருகின்றாரே”

பகவான் ஸ்ரீ மஹா சாஸ்தாவின் மற்ற பரிவார கணங்கள்

வல்லவன், காலத்தம்பிரான், அடியொட்டிக்காவலன், தடியன், கான்சலன், சுடலைமாடன், சாமுண்டி, வேதாளன், சரவன், சரகுருட்டி, குடமுருட்டி, பழியன், பூதராயன், பகடன், தடியன், வன்னிராயன், பட்டவராயன், குரளி, பாதாளி, ரண வீரன், க்ப்ப்ளி, செஞ்சடையான், மாகாளி, பகடையன், சிங்கன், சிங்கநாடன், முண்டன், கட்டாரி, திங்கச்சிரட்டி, இருளப்பன், தாணுவன், கரியன், காடிகவடியன், செந்துள்ளி, துர்கை, வெந்தியன், வடிவன், பொன்றவர்கள் பகவான் ஸ்ரீமஹா சாஸ்தாவின் மற்ற பரிவார கணத்தவர்கள் ஆவர்.

ரத்தவரிக்கண்ணன், சங்கிலித்தோளன், இசக்கி, பகடச்சின்னன், காத்தவராயன், சாட்டைக்கை முருகன், பட்டாணி வீர்ன், சுடலைமுத்து, நொண்டி வீரப்பன் போன்றோரும் ஸ்ரீமஹாசாஸ்தாவின் பரிவரங்களாவர்.

64 யட்ஷணிகள்:

பகவான் ஸ்ரீ மஹா சாஸ்தாவின் பரிவாரங்களில் யட்ஷணி தேவிகள் மிகவும் முக்கியமானவர்கள். 64 யட்ஷணி தேவயரின் நாமாக்கள் :

காண யட்ஷணி மாதங்கேஸ்வரி யட்ஷணி

சாமுண்டா யட்ஷணி வித்யா யட்ஷணி

க்ஷோபனாவ யட்ஷணி காண பிஷாசினி

வித்யத்ஜிஹ்வாய யட்ஷணி ஹம்சுவ யட்ஷணி

சர்வகார்ய சித்திதா யட்ஷணி மஹாலட்சுமி யட்ஷணி

தனதா யட்ஷணி அசுபஷய காரிணி யட்ஷணி

ராஜ்யப்ராதா யட்ஷணி ரக்தகம்பளா யட்ஷணி

ஜயா யட்ஷணி சாவவித்யா யட்ஷணி

பத்மாவதி யட்ஷணி போகாய யட்ஷணி

மதனாய யட்ஷணி லக்ஷ்மி யட்ஷணி

விப்ரமா யட்ஷணி விஷாலா யட்ஷணி

பண்டார பூர்ணா யட்ஷணி வட யட்ஷணி

வொசித்ரா யட்ஷணி பத்மினி யட்ஷணி

சந்த்ரத்ர வாவட யட்ஷணி காலகப்ணிகா யட்ஷணி

ஷீரார்ணவா யட்ஷணி ஜயா அர்க்க யட்ஷணி

அபமார்க யட்ஷணி ராஜ்யதா துளசி யட்ஷணி

உச்சிஷ்ட யட்ஷணி சந்ராம்ருத யட்ஷணி

ஸ்வாமீஸ்வரீசாதனா யட்ஷணி மஹாமாய போஹாய யட்ஷணி

வாஷா சித்தி யட்ஷணி தனதாபிபல யட்ஷணி

த்யாகா யட்ஷணி சண்டவேகா யட்ஷணி

ஸாதனா யட்ஷணி புத்ரதா யட்ஷணி

பூத யட்ஷணி சுலோவனா யட்ஷணி

ஜலபாணி யட்ஷணி தகுஞ்ஜா யட்ஷணி

அங்கோல யட்ஷணி உதும்பர யட்ஷணி

நிர்குண்டீ யட்ஷணி பில்வ யட்ஷணி

காதாத்ரீ யட்ஷணி புத்ரதா அம்ர யட்ஷணி

தனதா யட்ஷணி சினி யட்ஷணி

ஜலவாசினி யட்ஷணி கனகவதி யட்ஷணி

சந்திரிகா யட்ஷணி அனுராகினி யட்ஷணி

ஸ்வர்ண யட்ஷணி மஹாஸனந்தா யட்ஷணி

நந்தா யட்ஷணி நடீ யட்ஷணி

மஹாபயா யட்ஷணி குச யட்ஷணி

யட்ஷணிகளின் அபூர்வ சக்திகள்

யட்ஷணிகள் தேவலோகத்தில் உள்ள யட்ஷ லோகத்தில் வசித்துவரும் நல்ல தேவதைகள் ஆவர்.

64 யட்ஷணிகளில் ஒவ்வொரு யட்ஷணிக்கும் ஒருவித சக்தியுண்டு.சில யட்ஷணிகள் நடந்தது, நடந்து கொண்டிருப்பது, நடக்கப்போவது ஆகிய முக்காலத்தையும் கூறும் ஆற்றல் உள்ளவை. சில யட்ஷணிகள் மாந்திரீகத்தில் அஷ்டகாம வித்தையும் செய்யும் சக்தி படைத்தவை.சில யட்ஷணிகள் மாயாஜால வித்தைகள் புரியும். சில யட்ஷணிகள் எப்படிப்பட்ட வியாதிகளையும் தீர்க்கும் சக்தி உள்ளவை.

தினமும் நூறு. பேருக்கு அன்னம் கொடுக்கும் யட்ஷணிகளும், புதையலைக்காட்டி எடுத்துக்கொடுக்கும் யட்ஷணிகளும், தானம் கேட்கும் பொருளை வரவழைக்கும் யட்ஷணிகளும் உண்டு.