தொடர்கள்
நெகிழ்ச்சி
பண்பாடு தவறாத குகேஷ் - பால்கி

2025101322341981.jpg

போட்டியில் வெற்றி தோல்வி சகஜம் தான். ஆனாலும், எக்கணத்திலும் தனது நிலை தவறாது பிசகாது தன்னிலையிலேயே நிற்பது தான் தனி மனித அழகு. பண்பாடு. அது, அவரது வளர்ந்த விதத்தைப் பிரதிபலிக்கும். அவரது சமூகத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்கும். இந்த எதிர்பார்ப்பு, வயதில் சற்று முதிர்ந்தவரிடம் எதிர்பார்ப்பது இயல்பு தான், ஆனால் அதையே ஒரு டீன் வயதினரிடம் இருந்து எதிர்பார்ப்பது....ஆச்சர்யம் தான். இருந்தும், இந்தியப் பண்பாடு காக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சியே.

தோல்வியில் துவளாது, வெற்றியில் எக்களிப்பில் மிதக்காது தனது தனி மனித ஒழுக்கத்தை செய்து காட்டிய நமது நாட்டுத் தமிழர், சதுரங்க ஆட்டத்தின் இவ்வருட, 2025 ஆம் ஆண்டின், உலக சாம்பியன், குகேஷ் நமது அனைவரின் பாராட்டையும் பெறுகிறார்.

வீடியோ பாருங்கள். நீங்களே உணருவீர்கள்.

நாள் : 6.10.2025.

குகேஷ் தோற்கிறார். வெற்றி பெற்ற சதுரங்க ஆட்டத்தில் இன்றைய மதிப்பீட்டில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஹிக்காரு நாக்கமுரா செக் மேட் என்ற விதமாக குகேஷின் மன்னன் கருப்புக் காயினை பார்வையாளர் மத்தியில் எறிந்து எக்களிக்கிறார்.

நாள் : 28.10.2025.

மீண்டும் போட்டி அவ்விருவருக்குமே.

கருப்புக் காய்களுடன் ஆடிய அமைதி, தன்னம்பிக்கை, திறமையே ஒருங்கிணைந்த நமது குகேஷ் அதே ஹிக்காருவை தோற்கடிக்கிறார். தோல்வியை ஒப்புக்கொண்ட ஹிக்காரு நாக்கமுரா மைதானத்தை விட்டு தான் ஆடிய காய்களை அடுக்கி வைக்காமலேயே நகர்கிறார். ஆனால், நமது குகேஷோ வெற்றி பெற்ற மமதை ஏறாது, தனது காய்களை மட்டுமின்றி தோற்றவரின் காய்களையும் அதற்குரிய இடங்களில் வைக்கிறார். அது தான் வளர்ப்பு.