தொடர்கள்
அழகு
கோயிலைத் தூய்மையாக வைத்திருப்போமே - பாலக்காடு ஸ்ரீநிவாசன்

முன்பெல்லாம், கோயில் அர்ச்சகர் தினப்படி வேளைக்கேற்றவாறு தேவையான விளக்குகளை ஏற்றி வைத்திடுவார். பொதுமக்கள் அதற்கான நெய் மற்றும் எண்ணெயை வாங்கிக் கொடுப்பார்கள். அதற்கு முன் தினங்களில், அதாவது, ராஜாக்கள் ஆண்ட காலத்தில், கோயில்களில் தினப்படி விளக்கு ஏற்றுவதற்காகவே மானியங்களை வழங்கியதாக சரித்திர சான்றுகள் உண்டென கேட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம்.

தற்போது, கோயில்களில் பக்தர்கள் தங்கள் கையினால் நெய் விளக்கோ எண்ணெய் விளக்கோ ஏற்றி வழி பாடு செய்வது வழக்கமாகிவிட்டது. அதற்கு முக்கிய காரணம் பெரும்பாலும் ஜோதிடர்கள் தாம்.

இதை மனதில் கொண்டு தற்போதெல்லாம் அனைத்து கோயில்களில் பொதுமக்கள் விளக்கு ஏற்ற இடம் ஒதுக்க ஆர்ம்பித்துவிட்டனர். இல்லையெனில், கண்ட இடங்களில் அகல் விளக்கேற்றி வைக்க அங்கெல்லாம் எண்ணெய் சிந்தி விழ பொதுமக்கள் சந்நிதிகளைச் சுற்றிவர மிகவும் கடினமாக இருந்தது. அந்த இடங்களை சுத்தம் செய்வதிலும் சிரமம் இருந்து வருகிறது.

சென்ற வாரம், உடுப்பியில் ஸ்ரீசந்த்ரமௌலீஸ்வரர் கோயிலுக்கு தரிசனம் செய்ய சென்றிருக்கையில் அங்கு கீழ் கண்ட விளக்கேற்றும் அமைப்பைக்காண நேரிட்டது.

அதன் சிறப்பெனச் சொல்ல வேண்டும் எனில், தேவையான இடம் சிறியது, பளிச்சென இருக்கும் எவர்சில்வர் உலோகத்தால் ஆன கட்டமைப்பு என காண்பதற்கு அழகாக இருக்கிறது.

2025101417362316.jpg

பொதுமக்கள் தாங்கள் கொண்டு வரும் எண்ணெயை அந்த எண்ணெய் இடும் வாயிலி(கள்)ல் ஊற்றினாலே போதும். எரியும் விளக்கு திரியும் நன்றாக பாதுகாப்பாக காற்றோட்டமாக இருப்பதால் நன்கு எரிகிறது. சிறுவர்கள் கையில் பட்டுக்கொள்வார்களோ என்ற பயமும் இல்லை. ஒவ்வொருவரும் விளக்கேற்ற தீக்குச்சிகளை பயன்படுத்தத் தேவையில்லை. அந்த விளக்கு திரி குழியில் இருந்து வழியும் எண்ணெய் கீழே சரிவில் உள்ள ஓட்டைக்குள் சென்று அங்கே வைக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தில் அடைந்து விடும்.

இதனால், கோயிலும் எண்ணெய் பிசிக்கிலிருந்து தப்பிக்கிறது, சுத்தமாக இருக்கிறது. சந்நிதிகளை பொது மக்கள் வழுக்கி விழாமல் சுற்றி வரலாம்.

20251014173653959.jpg

நமது கோயில்களில் இதை அமல் படுத்தலாமே!!!!