தொடர்கள்
நொறுக்ஸ்
டப்பாவாலாக்களின் அடுத்த அசத்தல்!

20180423212636229.png

மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் ஊழியர்களின் வீடுகளில் இருந்து மாத ஊதிய அடிப்படையில், டிபன்கேரியரில் மதிய உணவு கொண்டு செல்லும் பணியில் நீண்ட காலமாக இருக்கும் டப்பாவாலாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இவர்களுக்கென அங்கு ஒரு தனி சங்கமும் இயங்கி வருகிறது. இவர்களது ஆற்றலும், நிர்வாகத்திறனும், நேரந்தவறாத உணவு டெலிவரியும் உலகப் புகழ் பெற்றவை.

இந்நிலையில் இவர்கள் தங்களது உணவு சப்ளை செய்யும் பணிகளின்போதே, தாங்கள் செல்லும் பல்வேறு நிறுவனங்கள் தொடர்பான கடிதங்கள் மற்றும் பார்சல்களை கொண்டு சேர்க்கும் கூரியர் பணிகளையும் இனி மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளனர். இதன்மூலம் ஒவ்வொருவருக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து டப்பாவாலா சங்கத்தை சேர்ந்த ஒருவர் கூறும்போது, "இந்த புதிய கூரியர் முயற்சி தொடர்பாக ஒரு சிலருக்கு பயிற்சி அளித்து, கடந்த சில நாட்களாக மும்பை மற்றும் ஒருசில பகுதிகளில் நடைபெற்ற சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளது. இப்பணி தொடர்பாக ஏற்கெனவே சில -காமர்ஸ் நிறுவனங்களுடன் எங்கள் சங்கத்தில் ஒப்பந்தம் செய்திருக்கிறோம். எங்கள் பணி மிக விரைவில் உணவு சப்ளையுடன் கூடிய கூரியர் டெலிவரியாக சிறப்பாக நடைபெறும் என்றார் மகிழ்வோடு.

- ஸ்ரீ