தொடர்கள்
நொறுக்ஸ்
தனியார் கம்பெனியின் நிஜ ராக்கெட்!

20180424133940857.png

சீன நாட்டு தலைநகர் பீஜிங் நகரில் இயங்கும் ஒன் ஸ்பேஸ் எனும் தனியார் விண்வெளி நிறுவனம், ஒலியைவிட அதிவேகத்தில் சீறிப் பாயும் ராக்கெட்டை தயாரித்து விண்ணுக்கு அனுப்பியுள்ளது.

உலகளவில் பல்வேறு நாடுகளில் புதிதாக தயாராகும் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய விமானங்கள், ஏவுகணைகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட புதிய பயன்பாட்டு கண்டுபிடிப்புகளை உள்நாட்டிலேயே குறைந்த விலையில் தயாரித்து வெளியிட பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கும் சீன அரசு முன்னுரிமை அளித்துள்ளது. இதற்கென ஏராளமான நிதியுதவியும் செய்து வருகிறது.

தற்போது அந்நாட்டில் ஒரு தனியார் நிறுவனம் ஒலியைவிட அதிவேகத்தில் சீறிப் பாயும் ராக்கெட்டை தயாரித்து, அதற்கு சாங்குயிங் லியாங்ஜியாங் ஸ்டார் என பெயர் சூட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த தனியார் நிறுவன சிஇஓ ஷுசாங் கூறுகையில், இந்த ராக்கெட் சுமார் 9 மீட்டர் நீளமும் 7,200 கிலோ எடையும் கொண்டதாக அமைந்துள்ளது. இது, மணிக்கு 38,742 கிமீ வேகத்தில் விண்ணுக்கு பாயும். அதாவது, ஒலியைவிட 5.7 மடங்கு அதிக திறன் கொண்டதாக அமைந்துள்ளது. இந்த சீன ராக்கெட் கடந்த 19-ம் தேதி பீஜிங் நகரை ஒட்டியுள்ள சீன ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது. இதில் வயர்லெஸ் தகவல்தொடர்பும் இணைக்கப்பட்டு உள்ளது.

எங்களது நிறுவனம் முதன்முறையாக வணிக ரீதியிலான ராக்கெட் தயாரித்துள்ளது. இதன்மூலம் தங்களது நாட்டு செயற்கைக் கோள்களை விண்ணில் அனுப்பி வைக்க, எங்களை பல்வேறு நாட்டு பிரதிநிதிகளும் அணுகி வருகின்றனர் என பெருமையுடன் கூறுகிறார்.