தொடர்கள்
ஜோதிடம்
கேளுங்கள் சொல்லப்படும்

20180425192442598.png

பெருங்குளம் ராமகிருஷ்ணன்


கேளுங்கள் சொல்லப்படும் www.vikatakavi.in/jothidam


J.ஹரி, சென்னை

கேள்வி:

எப்போது வேலை நிரந்தரமாகும்?

20180425144709847.png

பதில்:

திருவோணம் நக்ஷத்ரம் - மகர ராசி - மிதுன லக்னம். 37 வயதாகும் உங்களுக்கு தற்போது குரு திசையில் சுக்கிர புத்தி நடக்கிறது. வரும் செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு உங்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும். இடமாற்றம் உண்டு. தினமும் அம்பாளை வணங்கி வரவும்.


உமையாள் சிவராமன், சென்னை

கேள்வி:

எனக்கொரு மகள் இருக்கிறாள். ஆண் வாரிசு உண்டா?

20180425144732911.png

பதில்:

உங்கள் ஜாதகப்படி தற்போது 34 வயதகிறது. ரேவதி நக்ஷத்ரம் - மீன ராசி - மிதுன லக்னத்தில் ஜெனித்துள்ள உங்களுக்கு சனி திசையில் ராகு புத்தி நடக்கிறது. கண்டிப்பாக உங்களுக்கு ஆண் வாரிசு உண்டு. வரும் 2019ம் ஆண்டில் பிப்ரவரி மாதத்திற்கு பிறகு முயற்சி செய்தால் பலிதமாகும். தினமும் குலதெய்வத்தை வணங்கி வரவும்.


கீதா - சென்னை

கேள்வி:

இது என் மகன் பிரகாஷின் ஜாதகம் - இன்னும் சரியாக சாப்பிட மறுக்கிறான்?

20180425144754288.png

பதில்:

மகம் நக்ஷத்ரம் - சிம்ம ராசி - கன்னியா லக்னத்தில் பிறந்துள்ள தங்கள் மகனுக்கு தற்போது 5 வயதாகிறது. சுக்கிர திசை நடந்து கொண்டிருக்கிறது. கண்டிப்பாக 6 வயதிற்கு பிறகு உணவு உட்கொள்வான். சுக்கிர திசை நடப்பதால் சுவைக்கு முக்கியத்துவம் அளிப்பான். எனவே கவலை வேண்டாம்.


கேசவ் - பெங்களூர்

கேள்வி:

எனது திருமணம் எப்போது நடக்கும்?

20180425144814869.png

பதில்:

புனர்பூசம் நக்ஷத்ரம் - மிதுன ராசி - விருச்சிக லக்னத்தில் ஜெனித்துள்ள உங்களுக்கு 31 வயதாகிறது. சனி திசை குரு புத்தி நடக்கிறது. லக்னத்திலேயே சனி இருப்பதால் உங்களுக்கு திருமணத் தடை ஏற்படுகிறது. ஒருமுறை ராமேஸ்வரம் சென்று ஸ்நான ஸங்கல்பம் செய்து 23 தீர்த்தங்களிலும் நீராடி விட்டு வரவும். தினமும் முன்னோர்களை வணங்கவும். வரும் செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு திருமணம் இனிதே நடைபெறும். வாழ்த்துக்கள்.


கல்பனா - திருச்சி

கேள்வி:

எனக்கு எப்போது குழந்தை பிறக்கும்?

20180425144841641.png

பதில்:

கிருத்திக நக்ஷத்ரம் - ரிஷபம் ராசி - மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்களுக்கு 36 வயதாகிறது. ராகு திசையில் சூரிய புத்தி நடக்கிறது. வரும் புரட்டாசி மாதம் நிகழும் குருப் பெயர்ச்சிக்குப் பிறகு கட்டாயம் சந்தாணம் பாக்கியம் கிட்டும். தினமும் அருகிலிருக்கும் காவல் தெய்வத்தை வணங்கவும். உங்கள் முன்னோர்களின் ஆசீர்வாதத்தால் கட்டாயம் அருமையான குழந்தை பிறக்கும்.