தொடர்கள்
தொடர்கள்
துட்டு சமாச்சாரம் - 09 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20180425174418965.jpg20180425174624791.jpg20180425174712267.jpg20180425174741500.jpg

பணத்தை சேமிப்பதும், சேகரிப்பதும் இன்றைய சூழ்நிலையில் ஒரு பெரிய சவாலான செயல். அதனை சமாளிக்க நமக்கு கொஞ்சம் அதிக அறிவு தேவை படுகிறது. பணம் பற்றிய சமாச்சாரம் அல்லவா. அதனால் அவ்வளவு அலட்சியமாக இருந்துவிட முடியாது. அதற்கான அறிவை நாம் கண்டிப்பாக வளர்த்துக்கொள்ள வேண்டும். பணம் மற்றும் வரவு செலவு விஷயங்களில் நமது நுண்ணறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு நிறைய படிக்க வேண்டும். இதோ சில புத்தகங்கள் உங்களுக்காக .

தி மில்லியனர் நெக்ஸ்ட் டோர் [ The Millionare Next Door ]

Author : Thomas J. Stanley and William D. Danko

இருவது வயதை கடந்து வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தொடங்கும் இளம் வயதினர் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் . யதார்த்தமான சில சின்ன சின்ன அறிவுரைகளை எழுதியிருக்கிறார். உதாரணத்துக்கு உங்களின் செலவு, வருமானத்தை விட கம்மியாக இருக்கவேண்டும். பெருமைக்காக பொருட்களை வாங்காதீர்கள். உங்கள் சேமிப்புகளை பிரித்து வையுங்கள். ஒரே நிறுவனத்தில் உங்கள் சேமிப்புகளை முடக்காதீர்கள். இவைகள் கேட்பதற்கு சாதாரணமாக தோன்றலாம். ஆனால் இளைஞர்களுக்கு அவர்களுடைய பொருளாதார பழக்கங்களை நல்ல விதமாக உருவாக்கிக்கொள்ள இது உதவும்.

தி இன்வெஸ்ட்மென்ட் ஆன்சர் [ The Investment Answer ]

Author : Goldie and Murray

இந்த புத்தகம் முதலீடுகளுக்கான ஒரு கையேடு. குறிப்பிட்ட ஐந்து வகை விஷயங்களை கொண்டு ஆராய்ந்து முடிவு செய்து முதலீடு செய்ய வேண்டும். அதாவது தனியாக முதலீடு செய்யலாமா அல்லது ஒரு முதலீட்டு நிபுணரின் உதவி கொண்டு முதலீடு செய்யலாமா. தங்கத்தில், பாண்டு பாத்திரத்தில், நிறுவன பங்குகளில் இதில் எதில் முதலீடு செய்யலாம் என்பதை ஆராய்ந்து நம் பணத்தை முதலீடு செய்யவேண்டும். முதலீடு என்பது யாவரும் விரும்பும் ஒரு பொருள் இல்லை. அதனை பற்றிய அறிவும், அதனை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இன்று குறைந்து வருகிறது. இந்தப் புத்தகம் அந்த குறையை போக்குகிறது.

தி ஆட்டோமேட்டிக் மில்லியனர் [ The Automatic Millionare ]

Author : David Bach

டேவிட் பட்ச எழுதிய இந்த புத்தகம் சேமிப்புக்கு நேரடியான சில விதிகளை கொண்டுள்ளது . உதாரணத்துக்கு நீங்களே உங்களுக்கு பணம் கொடுத்துக் கொள்ளுங்கள். புரியவில்லையா? நீங்கள் செய்யும் வேலைகளுக்கு நீங்களே உங்களுக்கு பணம் கொடுத்துக் கொள்ளவேண்டும். பொதுவாக நாம் நமது குடும்பக்கடையில் ஒரு பொருள் வாங்கினால் நாம் அதற்குப் பணம் குடுக்க மாட்டோம். நம்ம கடை தானே அதுக்கு எதுக்கு பணம் கொடுக்கணும் என்று நினைப்போம். ஆனால் இவர் நாம் நம் வீட்டில் செய்யும் நமது வேலைகளுக்கே பணம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். வேடிக்கையாக இருக்கிறதா? ஆனால் அது இவரின் கொள்கை. இது போல் பலவகை ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இவர் கூறுவதை நாம் பயன் படுத்தினால் நாம் நம்மையறியாமல் பெரும் பணக்காரராகிவிடுவோம் .

ரிச் டாட் புவர் டாட் [ Rich Dad Poor Dad ]

Author: Robert Kiyosaki

பணக்கார தந்தை, ஏழை தந்தை - இதுவே இப்புத்தகத்துக்கான தலைப்பு. இப்புத்தகம் எழுதியவரின் தந்தை அதிகம் படித்தவர், புத்திசாலி.. ஆனால் ஏழை. மற்றொருவர் பள்ளிக்கூட படிப்பை பாதியில் நிறுத்தியவர். ஆனால் மிகப்பெரிய செல்வந்தர். இவர்கள் இருவரின் வாழ்க்கை முறையையும் கொண்டு ஒரு பணக்கார தந்தை எப்படி யோசிப்பார்.. ஒரு ஏழை தந்தை என்ன செய்வார் என்பதை கதை வடிவில் எளிதில் புரியும் வண்ணம் சொல்லியிருப்பது சிறப்பு. இதனை கொண்டு எப்படி பணத்தை பெருக்க வேண்டும், எப்படி சேமிக்க வேண்டும். பொருளாதாரத்தில் வீரியமாக இருக்க என்ன செய்யவேண்டும் என்று மிக அழகிய நடையில் எழுதியுள்ளார். இவர் ஒரு விளையாட்டையும் கண்டுபிடித்துள்ளார். இதனை விளையாடுவதன் மூலம் நமக்கு பொருளாதார சிந்தனைகள் மேம்படும்.

(தொடரும்)