
1975 ஆண்டு…
தமிழக அரசின் பால்வளத் துறையில் தற்காலிக வேலை. பனகல்பூங்கா அருகிலுள்ள பெட்ரோல் பங்க் அருகிலுள்ள ஒரு கட்டிடத்தில் கீழே ப்ரிவியூ தியேட்டர், மாடியில் பால்வளத்துறை அலுவலகம். அங்கே தான் எனக்கு வேலை.
எனக்கு சினிமா பார்க்க நிறைய ஆசை, ப்ரிவியூ தியேட்டரில் விளம்பரம் இல்லாமல் பார்க்க எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும், அதன் மூலமாக திரைத்துறை முக்கியர்களுடன் தொடர்பு அதே நேரம் அந்த ஸ்டூடியோவில் பணியாற்றும் நபர்களுக்கு பால் கார்டு வாங்கித்தருவது போன்ற செயல்கள்.
தியேட்டர் மேனேஜர் மூலமாக சாரதா, ஏவிஎம், ஜெமினி, ஸ்டூடியோ தொடர்பு கிடைத்தது.
இப்படியாகத் தொடர்ந்தது, சினிமாவுடன் தொடர்பு.
ஆனால் நான் படம் பார்த்து விமர்சனம் செய்வதை சிலரால் ஏற்க முடியாது. என் நண்பனும் நானும் சகலகலா வல்லவன் பார்க்க ஏவிஎம் ஸ்டூடியோ போகமுடிவுசெய்தோம்.
சகலகலா வல்லவன் படம் பிரிவ்யூ பார்த்தேன். படம் முடிந்ததும், “ஏற்கனவே வந்த பெரிய இடத்துப்பெண் கொஞ்சம் மாற்றிய படம் இது. அது பிளாக் & வொயிட். இது கலர் படம் அதில் கட்டோடு குழலாட பாடல், இதில் கட்டவண்டி என நான் என் நண்பனுடன் பேசியதைக் கேட்ட ஏவிஎம் சரவணன், என்னை அவருடைய ரூமுக்கு அழைத்தார்.
இந்த சமயத்தில் என்நண்பன் பயத்தின் மிகுதியால் என்னை விட்டு போய் விட்டான்.
அவரின் டேபிள் எதிரே நான் டேபிளில் உட்கார்ந்ததும் டேபிள் டிராயரை இரண்டு முறை இழுத்து சாத்தினார். நான், ”அவரிடம் போட்டோ சரியாக வந்ததா? என்றதும் அவர் ஆச்சரியமாக, “எப்படி?” என்றார்.
நான், “உடனே உங்களுடைய டேபிள் டிராயரில் கேமிரா இருப்பது எனக்குத் தெரியும். மேலும் HAMS CLUB, தவிர HELLO MADRAS என்ற மாத பத்திரிகை நடத்துகிறீர்கள்,” சொன்னதும் ஸ்டன்னாயிட்டார். கொஞ்ச நேரம் பேசிவிட்டு வந்தேன்.
வெளியில் வந்தால் என் நண்பன் இல்லை, அங்கிருந்து மேற்கு மாம்பலம் வரை நடராஜா சர்வீஸ் தான்.

Leave a comment
Upload