தொடர்கள்
அனுபவம்
" கலக்கல் பொங்கல் விடுமுறை பயணம் " - ஸ்வேதா அப்புதாஸ் .

தமிழகத்தில் ஒரு ஜாலியான இனிமையான விடுமுறை என்பது பொங்கல் விடுமுறை தான் என்பது அருமையான ஒன்று .

20260022234735146.jpg

நாமும் பொங்கல் விடுமுறை பயணத்தை மேற்கொண்டோம் .

திருச்சியை நோக்கி 14 ஆம் தேதி பயணித்தோம் .

கோவையில் இருந்து மக்கள் தங்களின் சொந்த கிராமங்களுக்கு படையெடுத்து கொண்டிருந்தனர்

கரூர் நகரம் படு பிசியாக இருந்தது .

கரும்பு ,மா இலை , ஆவாரம் பூ என்று அனைத்து பெருள்களையும் வாங்கி சென்று கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது .

நாம் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்க கிராமங்கள் களைகட்டி கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது .

திருச்சி அருகில் செல்ல சற்று போக்குவரத்து நெரிசல் ஆங்காங்கு காவல் துறை இருந்ததால் பிரச்சனை இல்லாமல் பயணிக்க முடிந்தது .

இரவில் எதிரே வரும் வாகனங்களில் எல் இ டி முகப்பு விளக்கை ஒளிறவிட்டு செல்ல நம்மை போல பலருக்கு கண் கூசி சிரமப்பட்டது அவர் அவர்களுக்கு மட்டும் தான் தெரியும் எந்த காவல் துறைக்கும் ஆர் டி ஓ க்கும் தெரியாது ?!.

இரவு பயணத்தில் எல்லா ஓட்டுனருக்கும் தொடரும் மிக பெரிய கொடூர சிரமம் !.

அந்த இரவில் திருச்சி நகர் படு பிசியாக இருந்தது .

நாம் தங்கின ஹோட்டலில் மொத்தம் 250 அறைகள் அதே சமயம் வெறும் 9 அறைகளில் தான் கெஸ்ட் தங்கியிருந்தனர் .

ஹோட்டலே காலி பணியாளர்கள் ஹாய்யாக இருந்தனர் .

பல ஊழியர்கள் பொங்கல் லீவில் சொந்தவுருக்க சென்றுவிட்டனராம் .

20260022234829164.jpg

15 ஆம் தேதி காலை நேரத்தில் எழுந்து திருச்சியின் மிக முக்கிய செயின்ட் ஜோசெப் கல்லூரி வளாகத்தில் உள்ள லூர்துஅன்னை ஆலயத்திற்கு சென்றோம் .விரல் விட்டு எண்ண கூடிய பக்தர்கள் திருப்பலியில் இருந்தனர் .

20260022234924531.jpg

கல்லூரி வளாகம் மிகவும் மிடுக்காகவும் அழகாக அமைதியாக காட்சியளிக்க ஒரு நத்தை பிரீயாக நகர்ந்து கொண்டிருந்தது .

20260022235019674.jpg

பொங்கல் காலை திருச்சி நகரே வெறிச்சோடி காணப்பட்டது .

20260022235055801.jpg

நாம் மலைக்கோட்டை நோக்கி சென்றோம் கூகிள் மேப் சற்று குழப்பமான வழியை காட்ட மிக சிரமப்பட்டு அக்ரகாரத்தினுள் காரை ஓட்ட வேர்த்துவிட்டது .

20260022235147900.jpg

அதே வேளையில் வீடுகளில் பொங்கல் கோலங்கள் பளிச்சென்று வரவேற்க அதன் மேல் நம் கார் நகர நம் சிரமத்தை புரிந்து கொண்ட மாமிகள் " ஒன்றும் பயப்படாம சிரமம் இல்லாமல் போங்கோ " என்று கூறி புன்னகையுடன் வழிகாட்டினார்கள் .

அந்த குறுகிய தெருக்களை கடந்து வர அப்பாடா என்று இருந்தது .

20260022235239467.jpg

பின்னர் மலைக்கோட்டை முக்கிய தெருவில் காரை நிறுத்திவிட்டு நிம்மதியாக படியேறினோம் .

470 படிகளை ஏறி உச்சியில் பிள்ளையார் கோயில் வரை சென்று எட்டி பார்க்க திருச்சி நகரே நம் கண் முன் .

20260022235505914.jpg

பொங்கல் திருநாள் என்பதால் கூட்டமே இல்லை .

ஒர் சில வெளிநாட்டினர் மற்றும் குறைவான மக்கள் சென்று வந்தனர் .

மலைக்கோட்டை முழுவதும் படுசுத்தமாக வைத்திருக்கிறார்கள் .

20260022235604434.jpg

உள்ளே குளிர்ச்சியாக இருந்தது . கீழே இறங்கி வர பொங்கலும் புளியோதரையும் ரெடியாக இருக்க வாங்கி சுவைத்தோம் சூப்பர் ருசி .

வெளியே வர அழகிய பொங்கல் கோலங்கள் நம் கண்ணை பறித்தது .

20260022235640128.jpg

ஒரு பாட்டி தன் புதிய கையேந்தி பவனில் கைவண்ணத்தில்

இட்டிலி சுட்டு அந்த கால ஸ்டைலில் துணியில் இருந்து எடுத்து கொண்டிருந்தார் .

அங்கிருந்த பிரபல நகைக்கடை வாயிலில் பொங்கல் பொங்கிக்கொண்டிருந்தது .பெண்ஊழியரும் ஆண்ஊழியரும் சேர்ந்து ' 'பொங்கலோ பொங்கல்' என்று கூவ பொங்கல் களை கட்டியது .

அங்கிருந்து நாம் தங்கின ஹோட்டலுக்கு வந்து காலை பிரேக் பாஸ்டை உண்டோம் அங்கும் பொங்கல் சூப்பர் !.

பின்னர் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு விசிட் செய்தோம் .

20260023114026289.jpg

பொங்கல் அன்று உலக புகழ் பெற்ற ஸ்ரீரங்க கோபுரம் நம்மை பிரமிக்க வைத்தது .

20260022235843990.jpg

நிறைய வெளிநாட்டினர் ஆச்சிரியதுடன் கோபுரத்தையும் கோயிலையும் சுற்றி மெய்சிலிர்த்து பார்த்தனர்

20260023000242447.jpg

பொங்கல் சிறப்பு பூஜைகள் சிறப்பிக்க பட்டுக்கொண்டேருந்தது .

ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையம் அனைத்து வசதிகளுடன் பயன்பாட்டில் இருப்பது சூப்பர் !.

20260023000042754.jpg

மதியம் திருச்சிக்கு குட் பை சொல்லிவிட்டு வேளாங்கண்ணி நோக்கி பயணித்தோம் .

தஞ்சாவூர் , திருவாரூர் நகர் மற்றும் கிராமங்களில் பொங்கல் திருநாள் களைகட்டியிருந்தது.

எருதுகள் மாட்டு பொங்கலுக்கு ரெடியாகிக்கொண்டேருந்தன.

பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன .

20260023000344751.jpg

மாலை 6 மணிக்கு வேளாங்கண்ணியினுள் நுழைந்தோம் போக்குவரத்து நெரிசல் வாகனங்கள் ஊர்ந்து சென்று கொண்டிருந்தன .

காவல் துறை வாகனங்களை ரயில் நிலைய சாலைவழியாக திருப்பி விட்டு க்கொண்டிருந்தனர் .

நாம் ஒரு வழியாக தங்கும் விடுதிக்கு சென்று வாகன நெருக்கடியில் சிக்கினோம் .

ஹோட்டல்களில் கார்கள் நிறுத்த மிக பெரிய போராட்டம் நடைபெற்றது .

பின்னர் எங்களுக்கு அறை கொடுக்கப்பட்டு அறையில் மங்கின லைட் பின் அறையை மாற்றி தங்கினோம் .

வேளாங்கண்ணி பேராலயத்திற்கு செல்ல பொங்கல் கரும்புடன் பக்தர்கள் வந்து கொண்டிருந்தனர் .

நாங்கள் அன்னையின் பொங்கலை மிஸ் செய்துவிட்டோம் .

20260023000454944.jpg

தமிழக நகரங்கள் வெறிச்சோடியிருக்க சொந்த கிராமங்களில் மக்கள் கூட்டம் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது இதில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் நாகூர் தர்கா சென்று வேளை கிராமத்திற்கு வந்து ஆரோக்கிய அன்னையிக்கு மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டதை பார்க்க முடிந்தது .

20260023000555640.jpg

இரவு ஒன்பது மணிக்கு மேல் பேராலயத்தினுள் பக்தர்கள் அனுமதியில்லை என்பதால் ஏகப்பட்ட கூட்டம் அதற்குள் வந்து செல்கின்றனர் .

வேளாங்கண்ணியில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் நிரம்பி வழிந்தன .

பேராலய தங்கும் விடுதிகளில் கூட்டம் சொல்லவே வேண்டாம் .

நாம் பார்த்ததில் எந்த விடுதியிலும் சரியான பராமரிப்பு இல்லை .

தின கட்டணம் மட்டும் ஏறிக்கொண்டே இருக்கிறது.

பேராலயம் மற்றும் வளாகம் இரவில் முழுமையாக சுத்தம் செய்து மூடப்படுகிறது .

20260023000640601.jpg

பேராலயத்தின் முற்றத்தில் க்ரில் கதவு திறந்திருக்க ஜெபிக்கிறவர்கள் வாயிலில் நின்று அன்னையை பார்த்து ஜெபித்து விட்டு சென்றார்கள் .

20260023000710322.jpg

பேராலய அலுவலக முன் தங்கும் விடுதி கிடைக்காதவர்கள் அங்கே குடும்பத்துடன் உறங்கி இரவை கழித்தனர் .

20260023000807357.jpg

தினமும் காலை 6 மணிக்கு பேராலய மைய ஆலயத்தில் திருப்பலி நடக்கிறது இதில் பக்தர்கள் கூட்டம் மொய்த்துவிடுகிறது .

20260023000840968.jpg

அதிகாலை 4 மணிக்கே ஆலயத்திற்கு பக்தர்கள் வந்து விடுகின்றனர் .

வேளாங்கண்ணி பேரூராட்சி வேளை நகரை அவ்வப்பொழுது சுத்தம் செய்து பளிச் என்று வைத்துக்கொள்கிறது .

20260023000910505.jpg

கடந்த மாதம் பேரூரார்ட்சியும் காவல் துறையும் இணைந்து சாலையோர ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்தியதால் சற்று ஒழுங்காக காட்சியளிக்கிறது .

பேராலயத்திற்கு செல்லும் வழியில் சில சமயம் காலையில் சாலை கூட்டப்படுகிறது .

ஏன் என்று உற்று பார்க்க ஆரோக்கிய அன்னையை வழிபட சில முக்கிய வி ஐ பிகள் விஜயம் செய்து செல்கின்றனர் .

காலையிலும் , மாலையிலும் வேளை நகருக்கே பிரசித்தி பெற்ற சாலையோர சுட சுட ஆப்பம், புட்டு ரெடியாகி விற்பனை ஜரூர் !.

20260023001038477.jpg

வேளை கடற்கரை போகும் சாலையில் யாத்திரீகர்களின் வாகனங்கள் வந்து போவது ஏகப்பட்ட இடைஞ்சல் .

கடற்கரை கவனிப்பாரற்று மிக அசுத்தமாக இருப்பது முகம்சுளிக்க வைக்கிறது .

20260023001205872.jpg

அதே இடத்தில் இரவும் பகலும் செயல் படும் ஹோட்டலில் இன்ஸ்டன்ட் பரோட்டா விற்பனை படு பிசி .

20260023001618467.jpg

வேளாங்கண்ணி பேருந்து நிலையம் எந்த வசதியும் இல்லாமல் இருப்பது வருத்தமான விஷயம் .

20260023001329646.jpg

பேருந்துகள் உள்ளே நுழைவதும் வெளியே செல்வதும் ஏகப்பட்ட இடைஞ்சல் சற்று ஆபத்தும்கூட ...

ஸ்ரீரங்கம்போல அருமையான பேருந்து நிலையத்தை அனைத்து வசதிகளுடன் அரசு தாராள இடத்தில் கட்டினால் நல்லது என்று கூறுகிறார்கள் பக்த பயணிகள்

வேளாங்கண்ணி அகில உலகின் புன்னிய தலம் மற்றும் தென்னகத்தின் லூர்து நகர் .

பேராலயத்தில் ஆரோக்கிய அன்னையை தரிசித்து விட்டு பொருத்தனைகளை தனி இடத்தில் சமர்ப்பிப்பது சிறப்பு .

பேராலயத்தின் தொடர் ஆலயமான மார்னிங் ஸ்டார் அருகில் உள்ள 62 அடி உயர இருதய ஏசுவின் சுரூபத்தை பார்த்து அனைவரும் அசந்து போகின்றனர் .

20260023001420116.jpg

வேளாங்கண்ணியிக்கு பல சிரமங்களை கடந்து சென்றாலும் திரும்பி வரும்போது நம்மை அரவணைத்து உடன் வரும் ஒரே முகம் ஆரோக்கிய அன்னையின் திருமுகம் தான் .

20260023001541626.jpg

பொங்கல் விடுமுறை பயணம் அன்னையின் ஆசீருடன் நிறைவு பெற்றது .