தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

பூஜா ஹெக்டே

20260023163522882.jpg

"சில ஆண்டுகளுக்கு முன்பு என் அனுமதியின்றி கேரவனில் நுழைந்து என்னை தொடமுயன்றார் ஒரு பிரபல நடிகர். அவரை கன்னத்தில் அறைந்தேன்" என்கிறார் நடிகை பூஜா ஹெக்டே. ஆனால், அந்த அரை வாங்கிய பிரபலம் யார் என்று சொல்லவில்லை. .

அஞ்சலி நாயர்

20260023161214476.jpg

சாந்தனு, பாக்கியராஜ், அஞ்சலி நாயர் நடித்த படம் மெஜந்தா .இப்போது இந்த படத்தின் டீசர் வெளியிட்டு இருக்கிறார்கள். இதற்கு மிகுந்த வரவேற்பு. .

ருக்மணி வசந்த்

20260023161350212.jpg

ருக்மணி வசந்த் புகைப்படக் கலைஞர் சித்தார்த் நாக் என்பவரை காதலிக்கிறார். ருக்மணி வசந்தத்தின் அழகிய புகைப்படங்களை எடுத்தவர் இவர்தான். இப்போது இருவரும் சேர்ந்து இருந்த புகைப்படத்தை சமுக வலைதளத்தில் வெளியிட்டு இவர் தான் என் காதலர் என்று அறிவிப்பு செய்திருக்கிறார் நடிகை.

பிரியங்கா மோகன்

20260023162042339.jpg

நடிகர் கவின் ஜோடியாக பிரியங்கா மோகன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடன இயக்குனர் சாண்டி இணைந்திருக்கிறார்.

மிருணாள் தாக்கூர்

20260023203636601.jpeg

மிருணாள்தாகூர், தனுஷ் காதல் விரைவில் திருமணம் என்று தொடர்ந்து பேச்சு வர தொடங்கி இருக்கிறது. இதை இருவரும் மறுக்கவில்லை ... இதுதான் நிறைய பேருக்கு புரியவில்லை.

அருள்வான்

20260023203821300.jpeg

அருள்நிதி, ரம்யா பாண்டியன் நடிக்கும் புதிய படத்திற்கு அருள்வான் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

தெலுங்கு பக்கம்

தமிழ் பட இயக்குனர்கள் இப்போது தெலுங்கு படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் காரணம் தயாரிப்பாளர்கள் பேரம் பேசாமல் கேட்ட பணத்தை தருகிறார்களாம். .

இரண்டு பேர் ஜோடி

20260023164146703.jpg

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா மற்றும் மீனாட்சி சவுத்ரி நடிக்க இருக்கிறார்கள்.

தமன்னா

இப்போது நடிகைகள் பிளாஷ்பேக் அனுபவங்களை சொல்வது பழக்க வழக்கமாகிவிட்டது. தமன்னாவும் அப்படி ஒரு அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். "நான் 20 வயதில் ஒரு புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது நெருக்கமான காட்சியில் நடிப்பதற்கு இயக்குனர் வற்புறுத்தினார். அது எனக்கு அசவுகரியமாகப்பட்டது.உடனே இயக்குனர் கதாநாயகியை மாற்றுங்கள் என்றார். இதைக் கேட்டு நான் மனம் தளரவில்லை. உறுதியாக இருந்தேன். இறுதியில் இயக்குனர் என்னிடம் மன்னிப்பு கேட்டார் " என்று சொல்லியிருக்கிறார் தமன்னா.

மமீதா பைஜூ

20260023163051446.jpg

தனுஷ் உடன் முதல் முறையாக மமீதா பைஜு ஜோடியாக நடிக்கிறார். இயக்கம் விக்னேஷ் ராஜா -தயாரிப்பு ஐசரி கணேஷ்.