
ஆட்சியில் பங்கு அதிக தொகுதிகள் என்று காங்கிரஸ் கட்சியில் ஒரு கோஷ்டி சற்று உரக்க குரல் கொடுக்கவும்......
ஆட்சியில் பங்குக்கு வாய்ப்பே இல்லை என்று திமுக பதில் சொல்வதும்.....
சர்ச்சையாகிக் கொண்டிருந்த நிலையில் எல்லா கோஷ்டி தலைவர்களையும் டெல்லிக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார் ராகுல் காந்தி.
பெரும்பாலான காங்கிரஸ் நிர்வாகிகள் திமுக நம்மளை மதிப்பதில்லை. உங்களிடம் பேசி சரி செய்து கொள்ளலாம் என்ற நினைப்பில் அவர்கள் இருக்கிறார்கள்.
தொகுதி சம்பந்தமான எங்கள் கோரிக்கைகளை கூட அவர்கள் நிறைவேற்றுவதில்லை.
அதிக தொகுதிகள் ஆட்சியில் பங்கு என்பதற்கு இதுதான் சரியான தருணம்.
காங்கிரஸ் இல்லாமல் அவர்களால் ஆட்சி பிடிக்க முடியாது.
நமக்கு அதிக தொகுதிகளும் ஆட்சியில் பங்கும் தர விஜய் தயாராக இருக்கிறார் என்று ஒரு தரப்பும்....
திமுகவுடன் கூட்டணி என்றால் நாம் கணிசமான இடங்களை பெறலாம்.
விஜய் கட்சி இப்போது ஆரம்பித்த கட்சி எனவே அவருடன் கூட்டணி வேண்டாம் என்று இன்னொரு தரப்பும் கருத்து சொல்லியது.
எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த ராகுல் காந்தி, விஜய் என்னுடைய தலைமையில் கூட்டணி என்று சொல்கிறார் 150 ஆண்டு பாரம்பரியம் உள்ள காங்கிரஸ் நேற்று ஆரம்பித்த கட்சித் தலைமையில் கூட்டணி வைக்க விரும்புகிறீர்களா என்று கேட்டார்.
கட்சியை வளர்க்க நீங்கள் என்ன செய்தீர்கள் ?,
எத்தனை பொதுக் கூட்டங்கள் இதுவரை போட்டிருக்கிறீர்கள் ?,
நானே பொதுக்கூட்டங்களுக்கு வருகிறேன் என்று உங்களிடம் பலமுறை சொல்லி இருக்கிறேன்.
என்னை அழைத்துக் கூட நீங்கள் கூட்டம் போடவில்லை.
கட்சியை வளர்க்காமல் இருந்துவிட்டு நீங்கள் திமுகவை குறை சொல்வது எந்த அளவுக்கு சரி.
கூட்டணி தொகுதி பங்கீடு எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
இப்போதைக்கு நீங்கள் எதுவும் பேசாதீர்கள் கட்சியை வளர்க்கும் வேலையை பாருங்கள் என்று சொல்லிவிட்டு ஆட்சியில் பங்கு என்பது சரிதான்.
திமுகவுடன் தான் கூட்டணி தொடர வேண்டும் ஆட்சியில் பங்குக்கு நான் முடிந்த மட்டும் அழுத்தம் தருகிறேன் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம் அதன் பிறகு நமது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி யோசிப்போம் என்று சொல்லி அனுப்பி இருக்கிறார் ராகுல் காந்தி.
இந்த கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை திமுக ஆதரவு நிர்வாகிகள் முதலமைச்சருக்கு சுட சுட தகவல் சொல்லிவிட்டார்கள்.
திமுகவை எதிர்த்து யார் கருத்து சொன்னது உள்பட எல்லாவற்றையும் நேரலையாக அவருக்கு சொல்லிவிட்டார்கள்.
அதனால் தான் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நமது கூட்டணி கட்சியிலே சிலர் நமக்கு எதிராக கருத்து சொல்கிறார்கள் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களை எச்சரிக்கை செய்திருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.
தமிழக நிர்வாகிகள் சந்தித்த இரண்டு தினங்களுக்குப் பிறகு கனிமொழியும், டி.ஆர்.பாலு, ராகுல் காந்தியை சந்தித்து இருக்கிறார்கள் அவர்களிடம் ஆட்சியில் பங்கு நாற்பது தொகுதிகள் என்று ராகுல் காந்தி உறுதிப்பட தெரிவித்த போது துணை சபாநாயகர், சில வாரிய தலைவர்கள் ,உள்ளாட்சியில் அதிக இடங்கள் தருகிறோம் என்று இருவரும் சொல்ல....... இது என்னுடைய கோரிக்கை என்று என் அண்ணனிடம் சொல்லுங்கள் என்று சொல்லி அனுப்பி இருக்கிறார்.
திமுகவும் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறது.
ஒரு பக்கம் பாஜக கூட்டணியில் வேகமாக வேலை நடக்கிறது.
தொகுதி பங்கீடு பற்றி பேச காங்கிரஸில் குழு அமைத்தும் அவர்களை அழைத்துப் பேச திமுக யோசிக்கிறது ....
எல்லாம் ஆட்சியில் பங்கு என்ற ஒரு வார்த்தை செய்யும் மாயம்.

Leave a comment
Upload