
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்க உச்சநீதிமன்றத்தில் தயாரிப்பாளர் தரப்புமேல் முறையீடு செய்த போது இந்த வழக்கை உச்சநீதிமன்றம் கண்டிப்பாக விசாரிக்காது. சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து அன்றே தீர்ப்பு வழங்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி 20-ஆம் தேதி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் இருவர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது தணிக்கை வாரியத்திற்காக கூடுதல் செலி சிட்டர் ஜென்ரல் ஏ.ஆர்.எல் சுந்தரேசன் வாதிட்டார்.
வாரியம் பதிலளிக்க உரிய கால அவகாசம் கொடுக்கவில்லை. தயாரிப்பு நிறுவனத்தால் தொடரப்பட்ட வழக்கில் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்யுமாறு வலியுறுத்தவில்லை என்று குறிப்பிட்டார்.
தயாரிப்பு நிறுவனம் சார்பாக சதீஷ் பராசரன், படத்தை ஆய்வு செய்த சான்றிதழ் வாரிய குழு ஒரு மனதாக பரிந்துரை வழங்கிய பிறகு அந்த முடிவு எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
அதனை மறு ஆய்வுக்கு அனுப்பி வைக்க முடியாது என்பதுதான் எங்கள் வாதம். இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்ட நிலையில் ஒரே ஒரு உறுப்பினர் வேறு விதமாக முடிவு எடுத்தாலும் பெரும்பான்மை உறுப்பினர்கள் முடிவு ஏற்க வேண்டும் என்பதுதான் இதுவரை வாரியத்தில் இருக்கும் நடைமுறை. என்றது.
தயாரிப்பாளர் தரப்பு. உச்சநீதிமன்றம் அன்றே தீர்ப்பு வழங்க வேண்டும் என்று அறிவுரை சொல்லி இருந்தாலும் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது தலைமை நீதிபதி அமர்வு.
சிபிஐ விசாரணைக்கு அழைக்கப்பட்ட விஜய்யிடம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறுங்கள் எல்லாம் நல்லபடி நடக்கும் குற்றப்பத்திரிக்கையில் உங்கள் பெயர் சேர்ப்பதற்கான எல்லா முகாந்திரங்களும் இருக்கின்றன.
ஜனநாயகன் படம் குற்றப்பத்திரிக்கையில் உங்கள் பெயர் இதெல்லாம் தவிர்ப்பதற்கு ஒரே வழி தேசிய ஜனநாயக கூட்டணி தான் என்பதை பாலி⁰ஷாக சொல்லியிருக்கிறார்கள் சி.பி.ஐ அதிகாரிகள். இதன் நடுவே காங்கிரஸ் யாமிருக்க பயமேன் என்று விஜய்க்கு கை கொடுக்க தயாராக இருக்கிறது இப்போதைக்கு விஜய் யோசிக்கிறார் அவ்வளவுதான்.

Leave a comment
Upload