
ோடியின் முதல் பிரச்சார பொதுக்கூட்டம் மதுரையில் நடத்த அனுமதி கடிதம் கூட கொடுத்து விட்டார்கள். ஆனால் ஏரி காத்த ராமர் பற்றி கேள்விப்பட்ட பிரதமர் மோடி சென்டிமென்ட் ஆக ராமர் ஆசியுடன் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை தொடங்க வேண்டும் என்பதற்காக மதுராந்தகத்தை தேர்ந்தெடுக்க அறிவுறுத்தினார். மதுராந்தகம் மோடி சாய்ஸ். அதன் பிறகு இடத்தை கண்டுபிடித்து பாதுகாப்புக்கான ஏற்பாடுகளுக்கு உகந்த இடம் என்று முடிவு செய்த பிறகு மதுராந்தகம் என்று அறிவித்தது தமிழக பாஜக.

ோடி தமிழகம் வரும் போது கிட்டத்தட்ட கூட்டணி முழுவதும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது இதற்காகவே தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இரண்டு நாள் முன்னதாக வந்துஅந்தப் பணியை கவனித்தார்.எடப்பாடி தலைமையில் தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று சொல்லப்பட்டாலும் கூட்டணியை ஒருங்கிணைக்கும் பணிகளை பாரதிய ஜனதா தான் செய்தது குறிப்பாக பீயூஷ் கோயல் .இதற்கு காரணம் அதிமுகவுடன் பேசும் போது அதிக தொகுதிகள் ராஜ்யசபா உறுப்பினர் என்றெல்லாம் பேரம் பேசவே எங்களுக்கு யார் வந்தாலும் சரிதான் கூட்டணியை நீங்களே முடிவு செய்யுங்கள் என்று சொன்னார் எடப்பாடி. அதனால் தான் எடப்பாடி சந்திக்காமல் டி.டி.வி தினகரன் பாஜக தேர்தல் பொறுப்பாளரை சந்தித்தார்.அப்போதே தனது முடிவை தெளிவாக சொல்லிவிட்டார். "நீங்க பழைய விஷயங்கள் எல்லாம் கிளற வேண்டாம். அதெல்லாம் முடிஞ்சு போன விஷயம் இதெல்லாம் வெறும் பங்காளி சண்டைதேர்தலுக்காக நாங்கள் சில முடிவுகள் எடுக்கத்தான் வேண்டும்"என்று தெளிவாக சொல்லிவிட்டார் எடப்பாடியும் டிடிவி தினகரன் வரவேற்று சமூக வலைதளத்தில் பதிவு செய்ய டிடிவி தினகரன் அதற்கு நன்றி என்று சொல்லிவிட்டார்

ேமுதிகவை பொருத்தவரை அவர்கள் பாமகவை விட அதிக தொகுதி ராஜ்யசபா மத்திய இணை அமைச்சர் தேர்தல் செலவு கோடிகளில் பணம் என்று அவர்கள் டிமாண்ட் நீண்டு கொண்டே போகவே இப்போது இதெல்லாம் முடிவு செய்ய முடியாது என்று அவர்களை தள்ளி வைத்திருக்கிறார்கள்.
மதுராந்தகத்தை பொருத்தவரை பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக பாரதிய ஜனதா போட்டி போட்டுக் கொண்டு தொண்டர்களைக் குவித்து தங்கள் செல்வாக்கை நிரூபித்து விட்டிருக்கிறார்.
எடப்பாடி சகோதரர் டிடிவி தினகரன் என்று அழைத்தார் டிடிவி தினகரன் அண்ணன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி என்று அழைக்கும் போதும் கைத்தட்டி அங்கீகரித்தார்கள் தொண்டர்கள்.

நயினார்நாகேந்திரன் பேசும்போது பிரதமர் மோடி வருகிறார் என்றதுமே சூரியன் மறைந்து விட்டது என்று பேசினார். உண்மையில் அங்கு வெயில் இல்லாமல் கிளைமேட் மேகமூட்டத்துடன் இருந்தது மதுராந்தகத்தில் சூரியன் இல்லை
பிரதமர் மோடி பேசும்போது அதிமுக எனக்கு குறிப்பிடாமல் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி அமையும் என பேசினார். தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என தொடர்ந்து எடப்பாடி பேசி வருகிறார்.

ொதுக் கூட்டத்தில் திமுகவை கடுமையாக சாடினார் பிரதமர் மோடி. தமிழகம் எவ்வளவு வேகமாக வளர்கிறதோ அவ்வளவு வேகமாக இந்தியாவும் வளரும். கோயில்கள், அறிவியல் தொழில்நுட்பம் மூலம்இந்தியாவுக்கு பெருமை சேர்த்து உள்ளது தமிழ்நாடு. தமிழ்நாடு மாற்றத்திற்கு தயாராகி உள்ளது என்ற செய்தியை மதுராந்தகத்தில் கூடிய உள்ள மக்கள் கடல் உணர்த்துகிறது.
யுபிஏ ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டது. என் டி ஏ ஆட்சியில் பதினோரு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மக்களின் நலனுக்காக மத்திய அரசு 11 லட்சம் கோடி அளித்திருக்கிறது.
முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணியை அறிமுகம் செய்த போது அவரை செல்லமாக முதுகில் தட்டினார் பிரதமர்
வளர்ந்த தமிழ்நாட்டை உருவாக்க இளைஞர்களின் சக்தி மிகவும் முக்கியமானது தமிழ்நாட்டின் மக்களின் எதிர்காலத்தை வரும் தேர்தல் தீர்மானிக்கும். திமுக ஆட்சி மோசமான ஆட்சி. போதைப் பொருள்கள் ஊக்கிவிக்கும் ஆட்சி இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டில் விரைவில் டபுள் எஞ்சின் ஆட்சி வரும் என்று பேசினார்




Leave a comment
Upload