தொடர்கள்
கதை
யார் பணக்காரர்? முனைவர் என். பத்ரி

20260023233412325.jpeg

அன்று சனிக்கிழமை. அந்தப் பெருமாள் கோவில் வாசலில் ஏகப்பட்ட கூட்டம். நானும்இந்த கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு கோவிலுக்கு உள்ளே போகத் தயாரானேன்.

கோவிலின் வாசலில் ஒரு நடுத்தர வயது பெண் கையில் குழந்தையுடன் பிச்சைஎடுத்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்க்க ரொம்பப் பாவமாக இருந்தது. அவளுக்கு ஒரு ஐம்பது ரூபாய் கொடுக்க என் மனம் ஆசைப்பட்டது.ஆனால் கூட்டத்தின் இடது புறத்தில்இருந்த நான் அவளின் அருகே செல்வதை ஒரு சவாலாக உணர்ந்தேன்.முடிவை மாற்றிக்கொண்டேன்.

’நான் கோவிலை விட்டு வெளியே வரும்போது அவள் வலது புறத்தில்இருப்பாள்.அப்போது அவளுக்கு உதவலாம்’என்று எண்ணிக் கொண்டே கோவிலுக்குள் போய்சுவாமியைக் கும்பிடும் என் முயற்சியில் அக்கறைக் காட்டினேன். இப்பொழுது இந்தக்கூட்டத்தில் பர்ஸை எடுத்து பணத்தைக் கொடுக்கச் சென்றால், நான் எனது பர்ஸைஇழக்கலாம் அல்லது எனக்கு சுவாமியைக் கும்பிட இன்னும் அதிக நேரம் ஆகலாம் என்றுஎண்ணியபடி கோவிலுக்குள் சென்றேன்.

உள்ளே எனக்கு வேண்டியதை ஆண்டவனிடம் பிச்சையாகக் கேட்டேன். உள்ளேகடவுளுக்கு முன்னால் நான். ஆனால், வெளியே மக்களுக்கு முன்னால் அவள்.பெரிய வேறுபாடு எங்களுக்குள் இருப்பதாய் நான் உணரவில்லை. ஏறத்தாழ ஒரு ஒரு மணி நேரத்திற்கு பிறகுஅவசர அவசரமாக சுவாமியைக் கும்பிட்டு விட்டு வெளியே வர முற்பட்டேன்.

நான் கோவிலுக்கு வரும்போதுதான் இவ்வளவு பேரும் வர வேண்டுமா? மனதில்மற்றவர்களை நொந்துக் கொண்டேன்.அவர்களும் என்னை அப்படித்தானே நினைத்துக்கொள்வார்கள்.அவரவர் வேலை அவரவருக்கு.சனிக்கிழமை என்றாலே கோவில்களில் கூட்டம்வழக்கமானது தானே? மனதை சமாதானப்படுத்திக் கொண்டேன்.

ஒரு வழியாக கோவிலைவிட்டு வெளியே வந்தேன்.அந்தப் பெண்ணை என் கண்கள்தேடின. கையில் அவளுக்கு தயாராக வைத்திருந்த 50 ரூபாய் நோட்டை அழுத்தமாக பிடித்துக்கொண்டு அதை அவளுக்குத் தரத் தயாராக இருந்தேன். எங்கு தேடியும் அவளைக்காணவில்லை.

அங்கு பக்கத்தில் ஒரு திருநங்கை ஒருவர் நின்று கொண்டிருந்தார். என் மனம் ஏனோஅவளைக் கேட்கச் சொன்னதால், நான் அந்தப் பெண்ணைப் பற்றி அவரிடம் கேட்டேன்.அந்தத் திருநங்கை அவள் சென்ற பாதையை காட்டினார். அங்கே சாலை ஓரத்தில்அமைந்திருந்த ஓர் உணவகத்தில் அவள் தனது குழந்தைக்கு உணவை ஊட்டிக்கொண்டிருந்தாள் யாரோ அவளுக்கு காசு கொடுத்து இருக்கிறார்கள். அவளிடம் போய்பணத்தைக்கொடுக்கச் சென்று கொண்டிருந்தேன். அதற்கு முன்னால் அந்தத் திருநங்கையிடம் நான் கொடுத்த அந்த 50 ரூபாய் நோட்டினை இப்பொழுது அந்த பிச்சைக்காரிக்கு அவர் கொண்டு வந்து கொடுத்தார்.

’இந்தா இதை இந்த அய்யாதான் கொடுத்தாரு. இதையும் அது கூட வைத்துக் கொள்’என்றாள். ஏற்கெனவே அவளுக்கு அவள் தான் காசு கொடுத்து இருக்கிறாள் அந்த காசில்தான்அவள் தன்னுடைய குழந்தையின் பசியை ஆற்றிக் கொண்டிருக்கிறாள்.

தனக்காக எதையும் வைத்துக் கொள்ளாமல் மற்றவருக்கு கொடுக்கும் அந்ததிருநங்கை ஒரு பெரிய பணக்காரியாக என் கண்களுக்கு தென்பட்டாள்.ஆண்டவனைகும்பிட்ட என்னுடைய கைகளால் அவளையும் கும்பிட்டு விட்டு நான் அங்கிருந்து புறப்பட்டேன்.

"யார் பணக்காரர் ??" மனதின் குரலுக்கு பதில் தெரிந்திருந்தது.