
மூன்றாவது ஆண்டாக இந்த முறையும் ஆளுநர் உரையை படிக்காமல் வெளிநடப்பு செய்திருக்கிறார் ஆளுநர்.
வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து ஏன் இந்த வெளிநடப்பு என்பதற்கு 13 காரணங்களை ஆளுநர் சார்பாக மக்கள் பவன் வெளியிட்டுள்ள ஆளுநர் அறிக்கையில் உண்மைக்கு மாறான பல தகவல்கள் உள்ளன,அந்த அறிக்கையை நான் வாசிக்க விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, தலித் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை அதிக அளவு போக்ஸே வழக்குகள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் பரவலான பழக்கம் பள்ளி மாணவர்களிடம் அதிகரித்துள்ளன. நமது மாநிலத்தில் ஒரே ஆண்டில் 20000 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்..
ஆளுநர் என்பவர் மாநிலத்தின் தலைமை நிர்வாகி. இவ்வளவு குற்றச்சாட்டுகளை சொல்லும் ஆளுநர் இது பற்றி அதிகாரிகளை அழைத்து என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று விசாரித்து அவர்களை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் இடத்தில் இருப்பவர் தான் ஆளுநர். அதை செய்யாமல் வெறும் குற்றச்சாட்டை மட்டும் சொல்வது ஏதோ அரசியல் காரணங்களுக்காகவும் திமுக மீது காழ்புணர்ச்சியில் என்ற குற்றச்சாட்டு உண்மையாகிவிடும்.
அவர் சொன்னது உண்மையாக இருந்தால் அதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் ஆளுநருக்கு உண்டு அதற்காகத்தான் அவர் மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் வாங்குகிறார் இதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும் உணர வேண்டும்.

Leave a comment
Upload