தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20260023170618501.jpg

ஒரு கிலோ கஞ்சாவுடன் தனியார் ஏஜென்சி ஊழியர் கைது.

போதையில்லா தமிழகம் அப்படின்னு சொன்னாங்க ?

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார் டி.டி.வி. தினகரன்.

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா !!

பாஜக கூட்டணி மூழ்கும் கப்பல் செல்வப் பெருந்தகை.

உங்க கூட்டணி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்குதா நினைப்போ ?

யாருடன் கூட்டணி இன்னும் முடிவு செய்யவில்லை பிரேமலதா விஜயகாந்த்.

ஒன்னும் பிரச்சனை இல்ல பொறுமையா முடிவு செய்யுங்க தேர்தல் முடிஞ்ச உடனே சொல்லுங்க போதும் !!

புதிய மாவட்ட தலைவர்கள் எந்த கட்சிக்கும் அடி பணிய கூடாது பிரவீன் சக்கரவர்த்தி.

உங்கள தான் டெல்லியில் வாயை மூடிக்கொண்டு பேசணும்னு சொல்லி இருக்காங்களே ?

மக்கள் பவனுக்குள் கமலாலயத்தின் குரல் ஏன் கேட்க வேண்டும் ? ஆர் எஸ் பாரதி.

அவங்க தானே எஜமானர் ? அறிவாலயத்தின் குரலா கேட்கும் ?

பேரவையின் மரபுகளை மாற்றக் கோருவது ஆளுநருக்கு அழகு அல்ல, - பேரவை தலைவர்.

ஆமா அப்படித்தான் நீங்க சொல்லி ஆகணும் வேற வழியில்லை !!

விஜய் படம் வாரதக்கு நாங்க காரணம் இல்லை- எச்.ராஜா

ஆமா ஆமா கரெக்ட் தான் நம்பிட்டோம் !!

தமிழ்நாடு நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் ஓய்ந்து விட மாட்டேன்- சசிகலா.

அக்கா பாவம், சீனிலேயே இல்லை என்ற விஷயம் கூட தெரியல ?

அரசியலில் எதுவும் நடக்கலாம் எங்களுக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. -டாக்டர் ராமதாஸ் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் அருள்.

பாவம் இப்படி எல்லாம் பேச வேண்டி இருக்கு !!

தமிழக சுற்றுலா முதலீட்டாளர் மாநாடு பிப்ரவரி 2 மற்றும் மூன்றாம் தேதி நடைபெறும்.

முதலீடு எல்லாம் வெறும் பேப்பர்ல தான் இருக்கு அப்படின்னு மக்கள் பவன் அறிக்கை விட்டிருக்காங்க படிக்கலையா !!

சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு.

இதுக்கு தான் காலையில் கிளம்பி வந்தார் போல தெரியுது !!

இரு மொழி கல்வி திட்டம் இரு விழிகளுக்கு நிகரானது -ஆளுநர் உரையில் பெருமிதம்.

இப்படி எல்லாம் எழுதினா எப்படி படிப்பாரு , அதுதான் ஓடிட்டாரு !!

அரசு ஊழியர்களின் எதிர்காலத்தை சிதைத்தது அதிமுக அமைச்சர் அன்பில் மகேஷ்.

அது சரி பண்றேன்னு சொல்லிட்டு நீங்க ஏமாத்திட்டீங்க என்பது தான் அரசு ஊழியர் குற்றச்சாட்டு !!