
வரும் பிப்ரவரி 24 முன்னாள் பெண் முதல்வர் செல்வி ஜே ஜெயலலிதா அவர்களின் 78ஆவது பிறந்த நாள் வருகிறது. சிறந்த ஆளுமை.
அவரைப் பற்றிய நினைவில் அவருடன் ஏற்பட்ட சுவையான அனுபவத்தை பகிர்வதில் மகிழ்ச்சி.
ஜெயலலிதா மேடம் அந்த சமயத்தில் படங்களில் நடிப்பதை நிறுத்தி துக்ளக் பத்திரிகைகளில் கட்டுரை எழுதிய சமயம் அது.
மறைந்த முன்னாள் முதல்வர் திரையலகில் கோலோச்சியவர். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் போன்றவர்களுடன் கதாநாயகியாக நடித்தவர்.
1977 ல் நான் பிரபல எழுத்தாளரான இந்துமதி அவர்கள் நடத்திய அஸ்வினி என்ற மாத பத்திரிகைக்கு கதை, கவிதை, கட்டுரை எழுதிநேரில் சென்று அலுவலகத்தில் கொடுப்பேன். என்இளவல் வேணுகோபாலன் எழுதித்தரும் கதை, கவிதையும் கொடுப்பேன்.

அப்போது, இந்துமதி அவர்களின் பத்திரிகை அலுவலகம் காங்கிரஸ் கட்டிடத்தின் மாடியில் இருந்தது.
அந்த அறையில் இந்துமதி மேடத்திற்கென ஒருரூம், வெளியே பார்வையாளர் உட்கார ஒருரூம் .ஒரு பியூன் உட்கார்ந்திருப்பார்.
ஒரு நாள் காலை இந்துமதி மேடத்தைப் பார்த்து பேசிக்கொண்டிருந்த போது ஜெயலலிதா மேடம் வந்தார்கள். ஜெயலலிதா மேடம் வந்ததும் நான் வெளியே வந்துவிட்டேன். என்னிடம் இந்துமதி, ஜெயலலிதாவைப் பார்த்து யார் இவர் எனக்கேட்டதும், நான் உடனே சுமதி என் சுந்தரி என்றேன் அதைக்கேட்ட இந்துமதி திகைக்க, பின் இருவரும் சிரிக்க, நான் நாளை வருவதாகச் சொல்லி வெளியேறினேன்.
கீழே வந்து சைக்கிள் எடுக்க சென்றதும், அலுவலகப் பியூன் சார், உங்களை மேடம் இன்று மாலை 4.00மணிக்கு வரச்சொன்னாங்க என்றார்,
அப்போது மாடியில் இருந்து என் பெயர் சொல்லி அழைத்த சப்தம் கேட்டு நான் மேலே பார்க்க நாலுமணிக்கு வா என்று இந்துமதி அவர்கள் சொன்னதும், என் வேலைகளை முடித்து நாலு மணிக்கு சென்று விட்டேன் இந்துமதியின் அலுவலகத்திற்கு.
“ஜெயலலிதா மேடம் எழுதிய கட்டுரை நாலுபக்கம் இதோ. இதனை சரி பார்த்துக்கொடு” என்றார்.
சுடச்சுட போண்டா, காபி குடித்து விட்டு வீட்டுக்குப்போய் அன்றிரவே அதைப்படித்தேன்.
கையெழுத்து சூப்பராக இருந்தது, அதில் திருத்தம் செய்ய வேண்டிய நிலை, அதாவது ஒற்றுப்பிழைகளான க்,ச்,ல, ற போன்றவைகளே, நான் அந்தப்பேப்பருடன் மேலே ஒருபேப்பரை ஸ்டேப்பிளரை வைத்து, அந்த மேலே உள்ள பேப்பரில் எந்த வரியில் திருத்தம் என எழுதி இரண்டு நாட்கள் பொறுத்துக் கொடுத்ததும், “இப்படித்தான் திருத்துவதா?” என கேட்டதும்,
“மேடத்தின் முத்து முத்தான கையெழுத்து அதில் கைவைக்க மனமில்லை என்றேன்.
இந்துமதி இதைக்கேட்டு சிரித்த பிறகு, ஜெயலலிதா மேடத்திற்கு போன் செய்து உன் கட்டுரை திருத்தம் செய்து வந்திருக்கிறது.
“யார் சொல்லுங்கள்”, என்றதும் என்பெயரைச்சொல்ல, ”சுமதி என் சுந்தரி என்றவனா? என்றதும், இந்துமதி “ஆமாம்” என்றது “சரி இந்து” எனப்போனை வைத்துவிட்டார்.
அப்போது xerox வசதி இல்லை இருந்திருந்தால் நான்காபி எடுத்து இருப்பேன். இந்துமதி மேடம் சரி இந்த கட்டுரையில் உன்பெயரும் போடுகிறேன் என்றதும் நான் வேண்டாம் மேடம் பத்திரிகையில் இரண்டு பக்க கட்டுரைக்கு இரண்டு பேர் வேண்டாம் என்றபடியே வந்து விட்டேன். இந்த விஷயம் நடந்து 50ஆண்டுகளாகிறது,
சென்ற ஆண்டு இந்துமதி மேடம் கணவர் காலமானபோது நான் விசாரித்தேன். ஆமாம், கணவரின் உடல் நலம் பற்றி சொன்னவர், கொஞ்ச நாள் கழித்து பேசும்போது ஜெயலலிதா கட்டுரை பற்றி ஞாபகமாகப்பேசினார்.

Leave a comment
Upload