தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20260213153154542.jpeg

முறைகேடு புகார் எதிரொலி பதினைந்து ஒப்பந்தப் புள்ளிகள் ரத்து தாம்பரம் மாநகராட்சி அதிரடி.

கமிஷன் சரியா வந்திருக்காதோ ?

தமிழக பொறுப்பு கவர்னராக இன்று ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி ஏற்பு.

இவராவது பொறுப்பா நடந்துக்கட்டும் !!

பெண்கள் ஆண்களை விட புத்திசாலிகள் ராகுல் காந்தி.

நீங்க சொன்னா கரெக்டா இருக்கும் !!.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் மிக்க மகிழ்ச்சி வைகோ.

ஆமா, வெளில போய் அப்படித்தான் சொல்ல சொன்னாங்க !!

மக்கள் பணியில் மகத்தான ஐந்தாண்டுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதனை மலரை வெளியிட்டார்.

எந்த மக்கள்னு தெளிவா சொல்லலாம் இல்ல !!

திமுக ஊழல் கட்சி என்று பிரதமர் மோடி விமர்சிப்பதா, செல்வ பெருந்தகை கண்டனம்.

விசுவாசமா இருக்காராம்!!

ஓபிஎஸ் தொகுதியில் மலை கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செல்போன் சிக்னல் கிடைப்பதில்லை என்று புகார்.

இது ரொம்ப முக்கிய அடிப்படையான பிரச்சனை ஆச்சே !!

அதிமுக கூட்டணியில் யாரையும் சேர்க்கத் தயார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

ஆனால், வர்றதுக்கு தான் யாரும் தயாராக இல்லை !!

ஆர். என். ரவி மேற்குவங்க புதிய ஆளுநராக இன்று பதவியேற்றார் .

மம்தா அக்கா கிட்ட ஜாக்கிரதையா இருங்க ஏற்கனவே ரெண்டு மூணு ஆளுநர்கள் வம்பே வேண்டாம் என்று ஓடி போய்ட்டாங்க !!

மத்திய பாஜக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு அதிக நிதி திருச்சி பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேச்சு.

நீங்க தந்தோம்னு சொல்றீங்க, அவங்க இல்லைன்னு சொல்றாங்க எதுதான் உண்மை.

தமிழகத்தில் நான் இருந்த காலம் பொற்காலம் முன்னாள் ஆளுநர் ஆர் .என். ரவி.

ஆனால் திமுகவுக்கு போராத காலம் !!

எல்லாவற்றையும் விட்டு விட்டு அரசியலுக்கு வந்துள்ளேன் விஜய்.

பொண்டாட்டியையும் சேர்த்து !!

சிபிஐ சம்மன் அனுப்பியது ஆச்சரியமாக உள்ளது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

ஆமா உங்களை எப்பவும் கைது தானே பண்ணுவாங்க , சம்மன் எல்லாம் அனுப்ப மாட்டாங்களே !!