
அவிநாசி தனி தொகுதி அதிமுக செல்வாக்கு பெற்ற தொகுதி.
சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த தனபால் இந்த தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்று இருக்கிறார்.
தொகுதி பங்கிட்டில் இந்த முறை அவிநாசி தொகுதியை கேட்டு பெற்றது பாஜக.
இந்த தொகுதியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் போட்டியிட விருப்பம் தெரிவித்தது தான்.
2011 சட்டப்பேரவை தேர்தலில் ராசிபுரம் தனித் தொகுதியிலும்,
2021 சட்டப்பேரவை தேர்தலில் தாராபுரம் தனி தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்த முருகன்,
2024 நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு ஆ.ராசாவிடம் வெற்றி வாய்ப்பு இழந்த அமைச்சர் எல்.முருகன் தான் இந்த முறை போட்டி போடுகிறார்.
அமைச்சர் எல்.முருகனை எதிர்த்துப் போட்டியிடும் கட்சி வேட்பாளர்கள் எல்லோருமே பெண்கள் தான்.
திமுக சார்பாக போட்டியிடும் 26 வயது ஆன கோகிலா மணி எம்.பி.பி.எஸ் முடித்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றியவர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா ஆங்கில இளங்கலை பட்டதாரி.
தமிழக வெற்றி கழக வேட்பாளர் கமலி எம்ஏ, பிஎட் படித்த தனியார் பள்ளி ஆசிரியர். அமைச்சரை எதிர்த்துப் போட்டியிடும் இந்த மூன்று பெண் வேட்பாளர்களும் 30 வயதிற்கு குறைவானவர்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.
கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக இந்த தொகுதியில் அதிமுக தான் வெற்றி வாய்ப்பை பெற்றிருக்கிறது
பெருமளவு கிராமப் பகுதிகளை கொண்ட இந்த தொகுதியில் அத்திக்கடவு அவினாசி திட்டம் 60 ஆண்டு கோரிக்கை 3000 கோடி செலவில் அதிமுக தான் நிறைவேற்றியது.
அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நாங்கள் தான் நிறைவேற்றினோம் என்று ஸ்டிக்கர் ஒட்டுகிறது திமுக.
தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் அத்திக்கடவு அவிநாசி திட்டம் ஒரு தோல்வி அடைந்த திட்டம்.
தண்ணீரே வருவதில்லை என்று பிரச்சாரம் செய்கிறார்.
அவினாசி நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகம்.
இந்த நகரத்திற்கு புறவழிச்சாலை வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கை.
மூன்று குடிநீர் திட்டங்கள் கொண்டு வரப்பட்டும் அவிநாசி மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்பட வில்லை.
மத்திய அமைச்சராக இருந்து முருகன் தமிழ்நாட்டுக்கு செய்த சாதனை தான் என்ன என்று கேள்வி கேட்கிறது.
திமுக. அவிநாசி அதிமுக கோட்டை என்ற பிம்பத்தை உடைக்க திமுக கடும் முயற்சி செய்கிறது.
தனபாலை புறக்கணித்து பாஜகவுக்கு இந்த தொகுதியை ஒதுக்கியதில் அதிமுகவில் சிலருக்கு வருத்தம்.
தனபால் மகன் தமிழக வெற்றி கழகத்தில் ஐக்கியம் ஆகிவிட்டதால் தனபாலுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கவில்லை என்கிறது அதிமுக.
முருகன் மத்திய அமைச்சர் பதவியை விட சட்டமன்ற உறுப்பினராகி மாநில அரசியல் தீவிரம் காட்ட திட்டம் போடுகிறார்.

Leave a comment
Upload