தொடர்கள்
விகடகவியார்
தேர்தல் பரிசு பொருள் ஏற்படுத்திய மரணம்-விகடகவியார்

20260317180145352.jpeg

தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு பணம் சில சமயம் பொருள்களாக எவர்சில்வர் குடம், அண்டா, புடவை, மூக்குத்தி தந்து வாக்காளர்களை கவர்வது வழக்கம்தான்.

திமுகவின் அமைச்சர்கள் பெரும்பாலும் பொங்கல் சமயத்தில் இது போன்ற பரிசுப் பொருட்களை தந்து வாக்காளர்களிடம் தங்களுக்கு ஓட்டு போட கேட்டுக் கொண்டார்கள்.

சிலர் தேர்தல் தேதி அறிவித்த பிறகு ரகசியமாக பரிசுப் பொருட்கள் வழங்கி வாக்கு சேகரித்தார்கள்.

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக பரிசுப் பொருட்கள் வழங்கி வாக்கு சேகரித்தது.

வாழைக்கட்டை என்ற கிராமத்தில் ஏப்ரல் 13-ஆம் தேதி திமுக பரிசு பொருட்கள் வழங்கியது. சிந்துஜா என்ற ஒரு பெண்மணிக்கு மட்டும் பரிசுப் பொருட்கள் வழங்கவில்லை.

அந்தப் பெண்மணி எனக்கு பரிசு பொருட்கள் ஏன் வழங்கவில்லை என்று கேட்டபோது திமுகவினர் யாருக்கு பரிசு பொருட்கள் வழங்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம் என்று சொல்லி அந்தப் பெண்மணியை தகாத வார்த்தையில் திட்டி இருக்கிறார்கள்.

சிந்துஜாவின் உறவினர்கள் அவரை ஆபாசமாக திட்டியதாகவும் அடித்ததாகவும் சொல்கிறார்கள். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மறுநாள் காலை சடலமாக அவர் மீட்டெடுக்கப்பட்டார்.

சிந்துஜாவின் உறவினர்கள் திமுகவினர் தாக்கியதால் தான் அவர் இறந்துவிட்டார் என்று போலீஸிடம் புகார் செய்தார்கள். முதலில் புகாரை பதிவு செய்ய யோசித்த காவல்துறை சாலை மறியல் போராட்டம் என்று பிரச்சனை பெரியதானதும் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆறு திமுகவினரை கைது செய்து இருக்கிறது.

காவல்துறை அவர்கள் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் வாய் தகராறு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்கிறார்கள்.

இந்த சம்பவத்தை குறிப்பிட்டு பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் தேர்தல் நடைமுறைக்கு விரோதமாக 8000 பரிசு பொருள் என்று கூப்பன் வழங்கி ஏமாற்றுகிறார்கள்.

காவல்துறை எப்படி தற்கொலை என்று முடிவு செய்தது மருத்துவர்கள் இன்னும் அதை உறுதிப்படுத்தவில்லை என்கிறார் அண்ணாமலை.

திமுகவினர் அடித்து அவரை கொலை செய்து விட்டார்கள் என்பது அவர் வாதம்.

மணச்சநல்லூர் வேட்பாளர் பரதன் மணச்சநல்லூரில் தேர்தல் விதிமுறைகள் மீறிபரிசுப் பொருட்களை திமுகவினர் வழங்குகிறார்கள்.

நான் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்கிறார்.

உள்ளூர் திமுகவினர் உயிரிழந்த பெண்ணும் திமுக தான் தாக்குதல் நடத்தியவர்களும் திமுக உறுப்பினர்கள் தான். முன் பகை காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது என்கிறார்கள்.

தேர்தல் ஆணையம் ஜனநாயகத் திருவிழா என்று தேர்தலை வர்ணிக்கிறது.