தொடர்கள்
தேர்தல் திருவிழா
தேர்தல் திருவிழா- கண்ணாழ்வார்

ஏப்ரல் 23

2026031617513880.jpeg

தமிழகத்தில் இன்னும் 4 நாட்களே சட்டமன்ற தேர்தலுக்கு உள்ளது.

திமுக,அதிமுக, ஜோசப் விஜய்,சீமான் கடும் வெயிலுக்கு இடையே அனல் பறக்கும் பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது.

20260316175226599.jpeg

திமுக ,அதிமுக , விஜய், சீமான் கூட்டங்களில் கட்டுங்கடங்காத கூட்டம் அதிகரித்து வருகிறது.

2026031618214144.jpeg

ஆளும் கட்சியின் தலைமை கிட்டதட்ட மக்கள் எப்படி வாக்களிப்பார்கள் என்று வயிற்றில் பட்டாம் பூச்சி பறக்க தொடங்கி விட்டது.

20260316175304630.jpeg

உதயநிதி காட்டிய ஒரு புகைப்படம் எடப்பாடி பதிலுக்கு பேசிய வார்த்தைகள் எல்லாம் தமிழகத்தில் ஹாட் டாபிக் மாறிவிட்டது.

2026031617534198.jpeg

திமுக தலைமைக்கு கிடைத்த கருத்து கணிப்பு படி சென்னையில் 10 மேற்பட்ட தொகுதிகள் உட்பட பல இடங்களில் தங்களின் வேட்பாளர்களுக்கு வாக்காளர்கள் ரெஸ்பான்ஸ் இல்லை என்று தகவல் , இதனால் மாப்பிள்ளை சார் களத்தில் இறங்கி விட்டமின் ப வை இறைக்கும் பணியை துவங்கிவிட்டார் என்ற உளவு துறை தகவல் டெல்லி வரை எட்டியதாக தகவல்.

துறைமுகம் தொகுதி வேட்பாளர் திமுக சேகர் பாபுவின் மகன்கள் கம்பெனிகளில் வருமான வரித்துறையினர் நடத்தும் அதிரடி ரெய்டு என பரப்ரப்பாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் வாக்களர்களுக்கு கூப்பன், பூஸ்ட், ஹார்லிகஸ் , பாத்திரங்கள் , தங்க மூக்குத்தி என பரிசு பொருட்கள் , விட்டமின் ப என் மகிழ்வித்து கொண்டிருப்பதாக தகவல் டெல்லிக்கு எட்டியுள்ளது.

20260316175423797.jpeg

திமுக எட்பாடியையும் , எடப்பாடி திமுக வையும் பிரசார கூட்டத்தில் கழுவி ஊற்றி பேசி வருகின்றனர்.

விஜய் எப்ப வருவேன் , எப்படி வருவேன் என்று அடிக்கடி தனது சுற்றுப்பயணத்தினை கேன்சல் செய்து வருகிறார்.விஜய் தேர்தல் அறிக்கையும் வெளியிட்டு விட்டார்.

20260317154232532.jpg

சீமான் தமிழக மக்களுக்கு முடிந்தால் தனக்கு ஓட்டு போடுங்கள் என்று நகைச்சுவையுடன் பேசி வாக்கு சேகரித்து வருகிறார்.

பறக்கும் படையை பரதேசி படை என்று சொன்னதும் வேகமான தேர்தல் ஆணையம் தற்போது வியாபாரிகளிடம் பணத்தினை பறிப்பதில்லை .

கடைசி நேர விட்டமின் ப விநியோகம் எப்படி நடக்கிறது என்பதை பொறுத்து தான் தேர்தல் ரிசல்ட் இருக்கும் என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கிறது.

காங்கிரஸ்,பிஜேபி தேர்தல் பிரசாரம் எப்படி செய்தார்கள் என்பதை ரிசல்ட் வந்தால் தான் உண்மை நிலவரம் தெரியும் என்கிறார்கள் பழுத்த அரசியல் நோக்கர்கள்.

2026031618225449.jpeg

தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் ஒரு வித எரிச்சல் மனநிலையில் இருக்கிறார்கள் , என்பதால் ஆளும் கட்சிக்கு சாதகமாக இந்த தேர்தல் அமையுமா என்பது பில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

பிரதமர் மோடி, அமித்ஷா, ராகுல் காந்தி தேசிய தலைவர்கள் தமிழகத்தில் அனல் பறக்கும் பிரசாத்தில் ஈடுபடவில்லை .

இந்தி கூட்டணியில் பீகார் சென்று தேர்தல் பிரசார்த்தில் கலந்து கொண்டதற்கு நன்றி கடனாக கூட வட இந்திய ஸ்டார் தலைவர்கள் தனக்கு உதவி செய்து பிரசாரத்திற்கு தமிழகம் வரவில்லை என்ற ஆதங்கம் ஸ்டாலினிடம் இருக்கிறது.

அதிசய தேர்தல் தமிழகத்தில் நடக்கிறது.

நான்கு முனைப்போட்டி இப்போது வேட்பாளர்களுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.

20260318063830443.jpeg

எந்த பூனை மக்களை நோக்கி பாயும் என்பது தான் ஆகப் பெரும் சஸ்பென்ஸ்.