ருக்மணி வசந்த்

தனுஷின் 56-வது படத்தில் ருக்மணி வசந்த் நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் பிரச்சனையால் அவர் நடிப்பது சந்தேகம் என்பதால் தற்சமயம் தனுஷுக்கு ஜோடியாக சாரா அர்ஜுன் நடிக்க இருக்கிறார்.
கீர்த்தி ஷெட்டி

"எனக்கு தமிழ் மொழி ரொம்ப பிடிக்கும். அதை கற்றுக்கொள்ள வேண்டும் என்று சின்ன வயதில் ஆசை இருந்தது. எங்கள் அம்மா கோயம்புத்தூரில் படித்தவர். வீட்டில் தமிழில் பேசுவார்கள். ஆனால், எனக்கு கற்றுக் கொடுக்கவில்லை. அது அவர்களுக்குள் ஒரு ரகசிய மொழி மாதிரி இருந்தது. இப்போது தமிழ் படங்களில் நடிப்பதன் மூலம் அந்த அழகான மொழியை கற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது " என்கிறார் நடிகை கீர்த்தி ஷெட்டி.
கயாடு லோஹர்

" சோஷியல் மீடியா ரொம்ப மோசம். சில பிரபலங்கள் முதலில் சொன்னபோது அதை நான் கவனித்தேன். இப்போது அது எனக்கே நிகழ்கிறது எதையும் பார்க்க கூடாது. அது ஒரு தீய பழக்கம் விரைவில் அதில் இருந்து விடுபடும் நிலையை அடைய வேண்டும் என நினைக்கிறேன் "என்கிறார் நடிகை காயடு லோஹர்.
ராதிகா

கோபி நாயினார் இயக்கத்தில் 'காலனி' என்ற படத்தில் நடிக்கிறார் ராதிகா. அவரது மகனாக அறிமுக நடிகர் லியோ நடிக்கிறார். இவர்களுடன் அஞ்சலி நாயர், எம் எஸ் பாஸ்கர், சேத்தன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஜான்வி கபூர்

ராம் சரணுக்கு ஜோடியாக பெத்தி என்ற படத்தில் ஜான்வி கபூர் நடித்துள்ளார். படத்தின் தோற்றம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. விரைவில் தமிழிலும் அறிமுகமாக இருக்கிறார் இதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது.
** ஒரு சிறந்த ஆன்மீக அனுபவத்திற்காக திருப்பதியில் விஐபி தரிசனத்தில் செல்லாமல் 3500 படிக்கட்டுகள் ஏறி சென்று சாமி தரிசனம் செய்தேன் என்கிறார் ஜான்வி கபூர்
ராஷ்மிகா

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுனா தீபிகா படுகோனே நடிக்கும் ராக்கா படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ராஷ்மிகா.
மிருணாள் தாக்கூர்

தெலுங்கு பட விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், மிருணாள் தாக்கூரிடம் "எங்களது தெலுங்கு திரையுலகுக்கு நீங்கள் வேண்டும். உங்களை இங்கேயே கட்டிப் போட வேண்டும் என்றால் தெலுங்குத் திரைப்படத் துறையில் இருந்து ஒருவரை நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அதுதான் என் ஆசை அதற்கு எனது ஆசீர்வாதம் கூட "என்று சொல்ல மிருணாள் தாகூர் வெட்கத்தில் முகத்தை மூடிக்கொண்டு சிரித்தார். தற்சமயம் இந்த வீடியோ வைரல் ஆகி கொண்டிருக்கிறது.
சி பி சக்கரவர்த்தி

ரஜினிகாந்தை வைத்து கமலஹாசன் தயாரிக்கும் படத்துக்கு தலைவர் 173 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. முதலில் இப்படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்ட சுந்தர் சி கதையை மாற்றம் செய்யச் சொல்ல அது பிடிக்காததால் வெளியேறினார். அடுத்து சி பி சக்கரவர்த்தி சொன்ன ஒன் லைன் கமல் ரஜினி இருவருக்கும் பிடித்தது. ஆனால், அவர் கதையை டெவலப் செய்தபோது சில விஷயங்கள் ஒத்து வராததால் சிபி சக்கரவர்த்தியும் வெளியேறினார்.
மஞ்சு வாரியார்

மிஸ்டர் எக்ஸ் படத்தில் மஞ்சு வாரியார் நிறைய சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறார். இதனால் எனக்கு சின்ன சின்ன காயங்கள் இப்போது கூட இருக்கின்றன. அது எல்லாம் எப்போதும் ஒரு ஞாபகார்த்தமாக நான் வைத்துக் கொள்வேன் என்கிறார் மஞ்சு வாரியார்.
பிரக்யா ஜெய்ஸ்வால்

தமிழில் விரட்டு என்ற படத்தில் அறிமுகமானவர் பிரக்கியா ஜெயஸ்வால். தற்சமயம் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்சமயம் கோடை வெயில் காலம் என்பதால் மாலத்தீவு போயிருக்கிறார் நடிகை. அங்கு கடற்கரையில் பிகினியில் தாறுமாறான கவர்ச்சி காட்டி எடுத்துள்ள படங்களை சமீபத்தில் வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார். .

Leave a comment
Upload