
அமெரிக்கா இஸ்ரேல் கூட்டு போர் ஈரான் மீது ஒரு மாதத்திற்கு மேலாக நடத்தி வருகிறது.

போரில் குழந்தைகள், பெண்கள் என ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாவதை கத்தோலிக்க கிறித்துவ தலைவர் போப் விரும்பவில்லை.

ஈரான் மீதான போரை முழுவதுமாக நிறுத்த வேண்டும், இறைவனின் பெயரால் உடனே நிறுத்துங்கள் என்று போப் அமெரிக்க-இஸ்ரேல் வலியுறுத்தினார்.
ட்ரம்ப் தான் செய்வது தான் நியாயம் தன்னை எதிர்த்து கேள்வி கேட்பவரையோ அல்லது அறிவுரை வழங்குபவர்களை பிடிக்காது.

போப் ஆண்டவர் லியோ குற்றம் , பயங்கரவாதம் மற்றும் வெளியுறவு கொள்கையில் மிகவும் பலவீனமாக இருக்கிறார்.என் நிர்வாகத்தினை குறை கூறும் போப் கரோனா ஊரடங்கு காலத்தில் கத்தோலிக்க பாதிரியார்கள் அனுபவித்த பயத்தினை பற்றி பேச வேண்டும்.ஈரானை பேச்சுவார்த்தை அழைத்தாலும் ஒத்துழைக்க மறுக்கின்றனர்.ஈரான் அணு ஆயுதம் வைத்து கொள்ளட்டும் என்று நினைக்கும் போப் எனக்கு வேண்டாம்.நான் வெள்ளை மாளிகையில் இருந்திருக்கவில்லை என்றால் போப் வாடிகனில் இருந்திருக்க மாட்டார்.அரசியல்வாதி போல் செயல்படாமல் போப் ஆண்டவராக அவர் கவனம் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க ஊடகங்களில் ட்ரம்ப் பேட்டி வெளியானது.

ட்ரம்ப் தன்னை இயேசு பிரானாக சித்தரித்து ஏ.ஐ படத்தினை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அதில் நோய்வாய்பட்டவரின் மீது இயேவை போல் உடை அணிந்திருக்கும் ட்ரம்ப் கைவைத்து இருப்பது போன்றும் ,அமெரிக்க கொடி , ராணுவ விமானங்கள் அந்த புகைப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. கடும் எதிர்ப்பிற்கு உள்ளான புகைப்படம் சமுக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டது.

நான் யாருடன் விவாதத்தில் ஈடுபடபோவதில்லை, என் கருத்துக்கள் யாரையும் புண்படுத்தும் நோக்கத்தினை கொண்டதும் இல்லை. ட்ரம்பின் நிர்வாகத்திற்கு அஞ்சும் ஆள் நான் கிடையாது என்று போப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா அதிபர் மனநிலையினை சோதிக்க வேண்டும் என்று அமெரிக்காவில் பலத்த குரல்கள் ஓலிக்க தொடங்கி உள்ளது.
ட்ரம்ப் கேலி செய்து உலக முழவதும் கார்டூன்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வலம் வருகிறது.

ரஷ்யா, பாகிஸ்தான் நாடுகள் ஈரான் உடன் அமெரிக்கா சமரச பேச்சு வார்த்தை நடத்த உதவுகிறோம் என்று அறிவித்துள்ளது.

23ம் புலிகேசியாக மாறியுள்ள ட்ரம்ப் அடுத்து என்ன சொல்லப்போகிறார் என்று பார்ப்போம்.

Leave a comment
Upload