தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20260317081909206.jpeg

234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் - முதல்வர் ஸ்டாலின்.

பணபட்டுவாடா ஜாஸ்தி போல தெரியுது !!

தமிழகத்தில் அதிமுக ஆட்சி மலரும் --அன்புமணி ராமதாஸ்.

ஒரு காலத்தில் வருங்கால முதல்வர் என்று சொல்லிக்கிட்டு இருந்திங்க !!

ஒ.பி.எஸ்க்கு பாடம் புகட்டாவிட்டால் அரசியலில் தர்மம் இருக்காது - டி.டி.வி தினகரன்.

இதுதான் தேர்தல் தர்மநியாயம் !!

வாக்குகளை பிரிக்கவே விஜய் போட்டி கம்யூனிஸ்ட் தலைவர் சண்முகம்.

எந்த கூட்டணி வாக்கு என்பதையும் தெளிவா சொல்லலாம் இல்லே !!

தமிழகத்தில் பிராச்சாரம் செய்ய ராகுல் காந்தி விரும்பவில்லை அண்ணாமலை கருத்து.

இவர் கனவில் வந்து சொல்லி இருப்பாரோ !!

வீடு புகுந்து கல்லூரி மாணவிக்கு சரமாரி வெட்டு.

தமிழ்நாடு அமைதி பூங்கா ன்னு சொன்னா நம்ப மாட்டேங்கிறாங்க !!

திமுகவில் இருந்து வெளியேறியது ஏன், நடிகை குஷ்பு பதில்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறியதை சொல்ல மாட்டாங்க !!

தேர்தலுக்குப் பின் அதிமுக தேய்ந்து பாஜக வலிமை பெறும் திருமாவளவன்.

உங்களுக்கும் பாஜக பாதிப்பு ரொம்ப ஜாஸ்தியா இருக்கு !!

ஆட்சி அதிகாரம் எங்களுக்கு இரண்டாம் பட்சம் தான் முதல்வர் ஸ்டாலின்.

அப்ப இந்த முறை நீங்க உதயநிதி ஸ்டாலின் முதல்வர் துணை முதல்வர் கிடையாதா !!

நெசவாளர் குடும்பத்திற்கு ஆண்டுக்கு முப்பதாயிரம் வழங்கப்படும் விஜய் அறிவிப்பு.

எல்லா கட்சி ஏதாவது வழங்கிட்டே இருப்பீங்க போல தெரியுது கொஞ்சம் உழைக்க விடுங்கப்பா !!

ஜனநாயகத்தை காக்க ஒன்று பட வேண்டிய கட்டாயம் ஈரோடு பிரச்சாரக் கூட்டத்தில் கர்நாடக துணை முதல்வர் கருத்து.

முதல்ல கர்நாடகாவில் நீங்கள் முதல்வர் கூட ஒன்று படுங்க மற்றதெல்லாம் அப்புறம் !!

திமுக திட்டங்களை நம்பாமல் கூப்பன்களை நம்புகிறார் ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ்.

அதானே திராவிடமாடல் ஆட்சி மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லையா !!

பாஜகவிடம் வாடகைக்கு விட்டிருந்த அதிமுகவை பழனிச்சாமி விற்று விட்டார் உதயநிதி ஸ்டாலின்.

சாட்சி கையெழுத்து இவர்தான் போட்டு இருப்பாரோ ?

எம்ஜிஆரிடம் மூன்று முறை தோற்றவர் கருணாநிதி அண்ணாமலை.

ரொம்பத்தான் அதிமுக பாசம்.