
மே 4, 2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வந்தன.
களம் தடம் புரண்டது.
கூட்டத்தில் காண்பதெல்லாம் ஓட்டுக்களா என்ன? அப்படித் தான் ஆயிடிச்சி.
மிஞ்சிப் போனா பத்து வருமா என்று பேசிய நாக்களும் உண்டு.
கழகங்களின் ஆட்சி தமிழக அரசியலில் சஷ்டியப்தபூர்த்தி கண்டது. 1967ல் ஒன்றாயிருந்தவர் 1972ல் இரண்டாயினர். அதன் பின் ஏராள கழகத் துண்டுகள் வந்தன, போயின. எனினும் முதலிரண்டு தான் துண்டைப் போட்டு இடத்தை பிடித்து வைத்திருக்கிறது.
அந்த இரண்டு கழகங்களும் ஆடித் தான் போயிருக்கின்றன. நல்ல காலம், விஜய் கட்சியின் பெயரில் கழகம் என்ற வார்த்தை இருக்குமாறு பார்த்துக் கொண்டது ஒரு நூற்றாண்டு கால தமிழகத்தின் மரபைக் காத்துவிட்டார் என்றே சொல்லலாம். மய்யமா வெச்சிருந்தா மெழுகி துடைச்சு விட்டு போயிருப்பார்கள்.
பாரதிய ஜனதா கட்சியில் கழகம் என்ற வார்த்தை இல்லை என்பதாலேயே உள்ளே சரியாகப் புக முடியவில்லையோ? இருக்கலாம். பாரதிய ஜனதா கழகம் என்று மாற்றிவிட்டால். தமிழ்நாட்டில் உள்ளே வர இது தான் ஐடியா என்று யாரேனும் சொன்னால் அமித் கேட்க வாய்ப்பிருக்கிறது.
இப்ப, ஹாட்டா போயிட்டிருக்கிற டாப்பிக், விஜய் Vs கவர்னர் தான்.
நடப்பன எல்லாமே நானூறு சானலில் லைவாத் தான் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். என்ன ஒண்ணுண்னா! செய்தி என்பது ஒபினியனோடு சொல்லப்படுவதால், சொல்பவருக்கும் புரிவதில்லை, அதைக் கேட்கும் மக்களுக்கும் புரிவதில்லை.
இதனால் கேட்பவரிடையே பிளவு ஏற்பட்டுவிடுகிறது. தெரிந்தும் தெரியாமலும் மக்கள் கட்சிகளாகி விடுகின்றனர்.
தற்போதைய நிலையை எப்போதும் போல வடிவேலர் துணையிருக்க வைரலாகிக் கொண்டிருக்கும் மீம்ஸ் வீடியோவைப் பார்த்து குலுங்காத ஆட்களே இருக்க் மாட்டார்கள்.
மீம்ஸ் போடுபவர்கள் ரூம் போட்டு யோசிப்பார்களோ?
பொறுப்புத் துறப்பு: இது இப்போது (08.05.2026. காலை 11.30 மணிக்கு) நிலைமை.

Leave a comment
Upload