தொடர்கள்
அரசியல்
விசில் - சத்தம் வருமா ??? - விகடகவியார்

20260409062300982.jpg

முதல்வன் படத்தில் முதல்வர் ரகுவரன் நான் உட்கார்ந்திருக்கிற நாற்காலியின் நான்கு கால்களும் எனக்கு சொந்தமில்லை என்பார். அந்த டயலாக் தமிழக வெற்றி கழக தலைவர் முன்னாள் நடிகர் ஜோசப் விஜய்க்கு பொருந்தும்.

திமுக ஒரு தீய சக்தி என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். அந்த தீய சக்தியுடன் கூட்டணி வைத்தவர்கள் முதல்வர் பதவியில் அமரப் போகிறார்.

118 என்பது மிகவும் ஆபத்தான நம்பர் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

ஆதரவு சம்பந்தமாக நீங்கள் திமுக தலைவர் ஸ்டாலினிடம் அனுமதி கேட்டீர்களா என்ற கேள்விக்குகம்யூனிஸ்ட் தலைவர் வீரபாண்டியன்நாங்கள் எதற்கு அவரிடம் அனுமதி கேட்க வேண்டும் என்றவர் திமுகவுடன் கூட்டணி தொடர்கிறது என்றும் சொல்கிறார்.

சட்டசபையில் அல்லது சட்டசபைக்கு வெளியில் ஜோசப் விஜய் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தால் அப்போது கம்யூனிஸ்ட் கட்சிகளில் நிலைப்பாடு என்ன என்று தெரியவில்லை.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அதன் துரோகம் எப்போதும் தொடர்கதை தான். வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து நன்றி சொல்லலாம் என்று செல்வப் பெருந்தகை சொன்னபோது அங்கெல்லாம் போக வேண்டாம் நாம் தமிழக வெற்றி கழகம் அலுவலகம் போவோம் எது கிரிஷ் சோடங்கர்சொல்லியிருக்கிறார் .

தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று சொல்லியிருந்த பிரவீன் சக்கரவர்த்தியை விஜய் கட்டிப்பிடித்து சால்வை அணிவிக்கிறார். கூட்டணி இல்லை என்றதும் திமுக காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடிஇருக்கிறது .சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திலும் திமுக காங்கிரஸ் கட்சியை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.

அரசியல் சூழ்நிலையால் பாராளுமன்றத்தில் எங்கள் இருக்கைகளை மாற்றித் தாருங்கள் என்று பாராளுமன்ற குழு தலைவர் கனிமொழி சபாநாயகருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி மீது காட்டிய அதே கோபத்தை விஜய்க்கு ஆதரவு என்று சொன்ன மற்ற கட்சிகள் மீது திமுக காட்டவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

இவை எல்லாவற்றையும் விட தமிழக அரசியல் நிகழ்வுகள் எல்லாவற்றையும் பாரதிய ஜனதா மௌனமாக வேடிக்கை பார்ப்பது தான் மிகவும் ஆபத்தானது.

118 உறுப்பினர்களின் இரண்டு உறுப்பினர்கள் ஆதரவு இல்லை என்றாலே ஆட்சி கவிழ்ந்து போய்விடும்.

பாரதிய ஜனதாவை பொருத்தவரை தமிழக வெற்றி கழகம் இன்னொரு ஆம் ஆத்மி கட்சி என்று தான் நினைக்கிறது. தமிழக வெற்றி கழகம் தேர்தல் அறிக்கையில் வாரி வழங்கி இருக்கிற வாக்குறுதிகளுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி தேவைப்படும்.

தமிழக அரசின் வரி வருமானம் 2.1 லட்சம் கோடி. இது ஊழியர் சம்பளம் மற்றும் இதர நல திட்டங்கள் அடிப்படை வசதிகளுக்கு போதுமானதாக இதுவரை இருந்ததில்லை. இவற்றையெல்லாம் ஜோசப் விஜய் எப்படி சமாளிப்பார் என்பது கேள்விக்குறி.

இவை எல்லாவற்றையும் விட விஜய் ரசிகர்கள் இன்னும் கட்சித் தொண்டர்களாக மாறவில்லை. அதற்கு தேவையான விவேகம் அவர்களிடம் இருப்பதாக தெரியவில்லை. சினிமா மாதிரி விஜய் என்ற ஒற்றை நபர் எல்லா பிரச்சனையும் தீர்க்க முடியாது.

சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதே இன்னும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கே தெரியவில்லை. திமுக தலைவர் ஸ்டாலின் ஆறு மாதம் அவர்களை நாங்கள் எந்த விமர்சனம் செய்ய மாட்டோம் என்று சொல்லி இருக்கிறார்.

ஆறு Explanation பிறகு திமுக அதிமுக என்ற அனுபவசாலிகள் நிறைந்த நிர்வாகிகளை ஜோசப் விஜய் எப்படி சமாளிக்க போறார் என்பது சந்தேகம்.

திமுகவின் பலம் இன்றும் என்றும் செய்தித் தொடர்பு தான். அவர்கள் சின்ன விஷயத்தை கூட பெரிதாக ஊதி பெரிது படுத்துவார்கள். இதையெல்லாம் தமிழக வெற்றி கழகம் சமாளிக்க கூடிய அளவுக்கு சாதுரியமிக்க தலைவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

திமுக ஆட்சியில் இல்லையென்றால் ஏராள போலி போராளிகள் வீதிக்கு வந்து போராடுவார்கள் என்பதும் விஜய் புரிந்து கொள்ள வேண்டும்.