
வீட்டின் அழைப்பு மணி தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. சற்றே சலிப்படைந்த லதா வீட்டுத் கதவை திறந்துப் பார்த்தாள். ஒரு கொரியர் டெலிவரிபாய்.
கோபால் !!!
பொருளை வாங்கிய லதா,அவனிடம் இதற்கு ஏற்கனவே பணம் கொடுத்தாகிவிட்டது என்று வெடுக்கென அந்தபொருளை வாங்கினாள். அது ஒரு மருந்து என்று மட்டும் கோபால் புரிந்து கொண்டான்.
வீட்டின்கதவை, ’டமார்’ என்று மூடிக் கொண்டாள்.
இரண்டு வருடங்களுக்கு முன் வரை இவர்கள் இருவரும் ஒரே கம்பெனியில் வேலைபுரிந்தவர்கள். ஒருவரை ஒருவர் நன்கு விரும்பி வந்தவர்கள்.இவர்களுக்குள் திருமணம் விரைவில் முடியும் என்று இவன் உள்பட அலுவலகத்தில் எல்லோரும் நம்பிக் கொண்டுஇருந்தார்கள். அவளும் தான். ஆனால், திடீரென்று ஒரு நாள் தனக்கு மிகுந்த தலைவலி என்றுசொன்னவள் மருத்துவ மனைக்கு சென்றாள்.கோபால் பொறுப்பான பதவியில்இருந்தான்.உடனே அவளுடன் அவனால் போக முடியவில்லை. அந்த நிகழ்விற்குப் பிறகுஅவள் வேலையை விட்டு நின்று விட்டாள். லதா அவளுடைய ஊரிலிருந்து சென்னைக்குசென்று விட்டதாக அறிந்துக் கொண்டான்.தொடர் நஷ்டத்தால் அவனுடைய கம்பெனியும்மூடப்பட்டது. வேலை தேடி சென்னைக்கு வந்த கோபாலுக்கு கிடைத்தது கொரியர் சர்வீஸ்பாய் வேலைதான்.
’அவளைப் பார்த்தும் பேச முடியவில்லையே. அவளுக்கு நிஜமாகவே கல்யாணம்ஆகிவிட்டதா?கழுத்தில் தாலி உள்ளதா? பார்க்க ஏன் தவறினோம்?’
கோபாலின் மனதுக்குள் குழப்பம். அவள் ஏன் தன்னை மறந்து விட்டாள். அவளுடைய வீட்டுக்காரன் யார்? இந்த ஆராய்ச்சியில் அவனின் ஆர்வம் அதிகம் இருந்தது, ஆனால் எப்படிகண்டுபிடிப்பது?
அடுத்து இரண்டு நாட்களிலேயே தாம்பரத்தில் ஒரு மருத்துவமனைக்கு சென்றான்கோபால்.அங்கு நண்பன் ஒருவனுக்கு கொரியர் கொடுக்க வேண்டியிருந்தது. மருந்து வாங்கும்வரிசையில் நின்று கொண்டிருந்தாள் லதா. அவளைப் பார்த்த கோபால் அவளிடம் பேசத்தயங்கினான்.திரும்பவும் ஒரு முறை அவன் அவமானப்படத் தயாராக இல்லை.
அவள் மருந்தை வாங்கிக் கொண்டு சென்றாள். பிறகு நண்பனிடம் அப்பொழுது தான் லதா சென்றிருக்கவே அவளைப் பற்றி விசாரித்தான். ’இது ஒரு நோயாளியின் தனிப்பட்டவிவரம். இதை நான் உனக்குச் சொல்லக்கூடாது. இருந்தாலும் நீ நண்பன் என்பதால்உன்னிடம் சொல்லுகின்றேன். அவளுடைய மூளையில் ஒரு கட்டி. அனேகமாக புற்றுநோயாகஇருக்கலாம். இருந்தாலும் அவள் இதையெல்லாம் வெளியில் காட்டிக் கொள்வதில்லை. சிலசமயம் நான் கொரியரில் மருந்தை அனுப்பி விடுவேன்.சில நாட்களுக்கு முன் ஒரு மருந்தைஅனுப்பாததால், இன்று அவள் நேரே வந்து விட்டாள்.
’ஆமாம் உனக்கு அவளைத் தெரியுமா?என்று கேட்டவனிடம் எனக்கு தெரிந்தவள் மட்டுமல்ல.என்னை மறந்தவள்’ என்று சொல்ல நினைத்தான் கோபால்.
‘அவளுக்கு திருமணம் ஆகி விட்டதா? உனக்கு தெரியுமா? என்று கேட்டான்.அவளுக்கு திருமணமாகவில்லை. ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டு அவளுடையஅம்மாவை கஷ்டப்பட்டு பார்த்து கொண்டிருக்கிறாள்.
இப்போது அவளுடைய டாக்டரை பார்க்கத்தான் போகிறேன். நீயும் வருகிறாயா?’என்று கேட்டு வைத்தான் நண்பன். இவனுக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை.
மூளையில் கட்டி இருப்பவர்களுக்கு மறதிக்கு வாய்ப்பிருக்கிறது.
அவள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ தன்னை மறந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
லதாவை மறந்து விடு என்று மனம் சொன்னாலும், அவனது அறிவு ஒப்புக் கொள்ளவில்லை.
இனி லதாவுக்கு நாம் தான். முடிவு செய்து கொண்டான். !!!

Leave a comment
Upload