
சீதையின் வனவாசம் பற்றிய உண்மை தத்துவம் என்ன? ராமன் தன் மனைவியை சீதாவைத் தீ குளிக்கச் சொன்னது ஞியாயமா? அவருக்கே சீதை மீது சந்தேகமா?
பதில்? சீதையை வெறுத்து ஒதுக்கவேண்டும் என்று நினைத்திருந்தால் சீதையைப் பிரிந்திருந்த காலத்தில் ராமர் ஏன் அழணும்? வால்மீகியும், அவரது ஆதி காவியத்தைத் தழுவி எழுதிய கம்பனும், உலகமே தூங்கினாலும், ராமனின் இரு கண்களும் தூங்கவேயில்லையாம். அப்படியே எழுகையிலும் சீதா சீதா என்றே புலம்பியவாறே எழுவானாம். அப்படி சீதைக்காக அழுது ஏங்கின ராமன் அவளை விட்டு விடுவானா? அப்ப இதுல ஒரு விஷயம் வெச்சிருக்கான்.
எதிர் வீட்டுக்காரன் நம் வீட்டுக் குழந்தையை அடிக்க விடுவோமா விடலாமா? நாமே நம் குழந்தையை அடித்து கூட்டி வந்துட்டா! அதனால், குழந்தை மீது நமக்கு பாசம் இல்லை என்பதாகி விடுமா? இங்கு, நாமே நமது குழந்தை அடித்துக் கூட்டி வந்துட்டா, வெளியோர் நம்ம குழந்தையை அடிக்க முடியாது இல்லையா? அது போல் தான் இங்கும்.
அப்படியே ராமர் சீதையை ராவணன் வீட்டிலிருந்து ஏற்றுக்கொண்டு விட்டால், பக்கத்தில் சுக்கிரீவன் இருக்கிறான். அவன் மனைவி ரூமா பல நாள் வாலியோடு இருந்தாள். அப்படியே ஏற்றுக்கொண்டுவிட்டான். இப்ப, அவன் என்ன நினைப்பான்.
ஓஹோ..அது போலத்தான் சீதையும் என்று நினைத்து விட மாட்டானா?
அந்த காலத்தில் இந்த மாதிரி பழிச்சொல் பேசுவோர் ஏராளம். நன்றாகவே கேட்பார்கள். அதனால், ராமன் என்ன பண்ணறான் என்றால், இவர்கள் எல்லாம் என்னென்ன சுடு சொற்கள் பேசுவார்ளோ அதையெல்லாம் நாமே பேசிடுவோம். இதைப் பார்க்கும் மற்றவர்கள் எல்லாம் என்னை, சீதையைப் போய் இப்படி பேசி விட்டேளே? என்று பின் வாங்கி விடுவார்கள்.
உண்மையில். தேவாதி தேவனாகிய ராமனே சீதைக்கு அக்னி பரிட்சை கேட்டால் அக்நி முதலான தேவர்கள், அவர்களே சீதையைத் தூய்மையானவள் என்று பிரகடனப்படுத்தி விடுவார்கள். அப்புறம் தகறாரே இருக்காது அல்லவா? எல்லோரும் தெளிவாகிவிடுவார்கள்.
ஆக, தேவர்கள் மூலம் சீதையின் தூய்மையை உலகிற்கு உணர்த்தவேண்டுமென்று நினைத்தான் ராமன்.
மேலும் பழி சீதை மேல் விழக்கூடாது. தன் மேல் வரட்டுமென்று இது மாதிரி நினைத்தான்.
ஆக,
இதை நாமெல்லாம் எங்கு புரிந்து கொள்கிறோம் என்றால், யுத்தம் முடிந்து, இலங்கைக்கு விபீஷணன் ராஜாவான பிறகு, ராமனின் கட்டளைப் படி , விபீஷணன், சீதையை பல்லக்கில் ஏற்றிக்கொண்டு ராமரும் அவருடனான ஏனையோர் இருக்கும் இடத்திற்கு அழைத்து வருகிறான்.
சீதையைப் பார்த்த ராமன், சீதா! உன்னைப் பார்க்கவே எனக்கு பிடிக்கவில்லை. எங்காவது போய்விடு.உன்னை ஏத்துக்கவே எனக்கு விருப்பமில்லை. நீ எப்படி இருக்கிறாய் தெரியுமா? கண்ணில் தோஷமுள்ளவனுக்கு நெருப்பு எப்படி கூசுமோ அப்படி இருக்கிறாய் என்று கூறிவிடுகிறார்.
அப்ப, நீங்களே சொல்லுங்க. யார் மேல தோஷம்? யாருக்கு problem?
கண் பார்வையில் தானே தோஷம், problem எல்லாம். அப்ப சீதை யாரு? விளக்கு, நெருப்பு. அப்படின்னா, உன் கற்பு என்பது நெருப்பு. உன்னை நெருங்க முடியாது. ஆனால் லோகத்தில் உள்ளவர் பார்வையில் தோஷமுள்ளதால் இந்த் அனெருப்பைப் பார்த்தல் கண்கள் கூசத் தானே செய்யும். அதனாலத்தான் உனாய்ப் பார்க்கவே பிடிக்கலை என்று ராமன் கூறுகிறான்.
இது இப்படியிருக்க, சீதையோ, லக்ஷ்மணா! நீ தீயை மூட்டு. அக்னி பிரவேசம் பண்ணுகிறேன்” என்கிறாள்.
ஒவ்வொன்றிலும் ஒரு தத்துவம் உள்ளது. இது புரிஞ்சிக்காம நாம மேலோட்டமா பட்டி மன்றம் நடத்திட்டு போயிடறோம்.
இங்கிருக்கும் தத்துவம் இது தான்.
மாய மானைத் தொடர்ந்த ராமனின் காப்பாத்து லக்ஷ்மணா என்ற அவலக் கூக்குரல் கேட்க, சீதை, லக்ஷ்மணனைக் கூப்பிட்டு , அண்ணனைக் காப்பாத்து போ என்று சொல்கிறாள்.
அதற்கு, லக்ஷ்மணனோ, அதற்குத் தேவையே இல்லை என்று கூறுகிறான். அப்போது சீதை, நீ ஏதோ வேறு எண்ணத்தில் இருக்கிறாய் போலிருக்கிறது. நீ போகவில்லையென்றால் நான் நெருப்பில் குதிப்பேன் என்கிறாள் கோபமாக.
இங்கு தான் நாம் ஒன்றை உணரவேண்டும், ஒரு பக்தனைப் பார்த்து சுடு சொல் பேசினாலோ, தண்டனை பெருமாள் கொடுத்துவிடுவார்.
அன்று பக்தனான லக்ஷ்மணனை பார்த்து சுடு சொல் செய்தாள் என்பதற்காக தானே தண்டனை அனுபவிக்க, லக்ஷ்மணனை கையால் நெருப்பு மூட்டச் சொல்கிறாள்.
சீதைக்கு விஷயம் தெரியாது என்று அர்த்தம் இல்லை. அடியவர்கள் அபசாரப்பட்டுவிட்டால் மனைவி என்றும் பார்க்காமல் ராமன், சீதையை தீயில் இறங்கு என்று கூறுகிறான்.
சீதையும் தீயில் இறங்குகிறாள். அக்னி தேவனும், சீதையை ராமனிடமே கொணர்ந்து,” இதோ உங்கள் சீதை என்று சொல்கிறார்.
இது தான் சரியான விளக்கம்.
தொடரும்...

Leave a comment
Upload