தொடர்கள்
தேர்தல் திருவிழா
யாமிருக்க பயமேன் - கண்ணாழ்வார்

விஜய் ஆட்சி அமைப்பாரா என்று அரசியல் தலைவர்கள் ஆவலுடன் காத்து இருந்தனர்.

ரஜினிகாந்த் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நடந்தது.

டெல்லியின் தூதராக வந்த ரஜினிகாந்த் ஸ்டாலினிடம் பேசினார்.

20260408201231299.jpeg

ஆங்கில நாளிதழ்க்கு விஜய் ஆட்சி அமைக்கட்டும் என்று ஸ்டாலின் பேட்டி கொடுத்தவர்.தன்னுடைய திட்டங்களை நிறுத்தாமல் விஜய் முதல்வரானதும் செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இரண்டு நாட்கள் விஜய் பதவி ஏற்பு தள்ளிப்போனது.

திருமாவளவன் உட்பட திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தாலும் அதிகாரபூர்வ கடிதம் கொடுக்கவில்லை.

மு.க.ஸ்டாலினின் இந்த மூவ் ரஜினிகாந்த் அமைத்து கொடுத்த பாதையில் சென்றதால், ஸ்டாலினுடைய கிச்சன் கேபினெட்டில் பெரும் சர்ச்சை வெடித்ததாக தகவல் .

எடப்பாடி சென்னையில் வெயில் அதிக உஷ்ணமாக இருப்பதால், பாண்டிச்சேரியில் தங்கி இருந்த தன்னுடைய எம்.எல்.ஏக்களை சென்னைக்கு வர சொல்லி விட்டார்.

காங்கிரஸ் கட்சிக்கும் அமைச்சர் பதவி.

திருமாவளவனுக்கு நீண்ட நாள் கனவு ஆட்சியில் பங்கு,அதிகாரத்தில் பங்கு என்பது நிறைவேற போகிறது.

தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து திடமான முடிவுகளை எடுத்து சாந்தமாக அறிவித்தார்.

தமிழக மீடியாக்கள் டிஆர்பி ரேட்டிங்கை ஏற்ற தங்களது கற்பனை குதிரை தட்டி விட்டனர்.

ஜோசப் விஜய் ஆகிய நான் … தமிழகத்தின் முதல்வராக …என்ற குரல் ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பதவியேற்பு விழா ரெடி .

கவர்னரின் அதிகார பூர்வமான அறிவிப்பிற்கு த.வெ.க காத்திருக்கிறது.

யாமிருக்க பயமேன் என்ற வாசகம் நினைவுக்கு வருகிறதா ??

ஜோசப் விஜய்க்கு டெல்லி மூவ் கை கொடுக்குமா?!.