தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

ருக்மணி வசந்த்

20260408190034355.jpeg

நடிகர்கள் பஞ்ச் வசனங்கள் பேசியும் ஆக்க்ஷன் காட்சிகளில் நடித்தும் சமாளிக்கலாம். என்னைப் போன்ற மாடல்களுக்கு அந்த சலுகை இல்லை. ஒரு வார்த்தை கூட பேசாமல் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த வேண்டும். இது மிகப்பெரிய சவால் ஆகும். இன்றைய சினிமாவில் நான் கற்றுக் கொண்டு வரும் விஷயம் இதுதான் என்கிறார் ருக்மணி வசந்த்.

கீர்த்தி சுரேஷ்

20260408190633448.jpeg

சமீப காலமாக கீர்த்தி சுரேஷ்க்கு தமிழில் அவர் நடித்த படங்கள் எதிர்பார்த்து வெற்றியை தரவில்லை என்பதால் தற்சமயம் தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்துகிறார்.

பூனம் பாஜ்வா

20260408190922998.jpeg
சூரிய அஸ்தமனத்தில் குட்டி டவுசரில் பூனம் பாஜ்வா போஸ் கொடுக்கும் படம் தற்சமயம் வலைதளத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

கீர்த்தி ஷெட்டி

20260408191516897.jpeg

தென்னிந்திய சினிமா பாலிவுட் இரண்டிலும் பிரபலமாக இருக்கும் கீர்த்தி ஷெட்டி பிரபல பேஷன் இதழுக்கு கவர் ஸ்டாராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் .கீர்த்தி ஷெட்டி தேவதையாக ஜொலிக்கும் புகைப்படங்கள் வைரலாகி கொண்டு இருக்கிறது.

கவுரி கிஷன்

20260408192600756.jpeg

எல் ஐ கே படத்தில் கல்கி கதாபாத்திரத்தில் லிப்லாக் காட்சிகளில் தாராளம் காட்டிய கவுரி கிஷன் தற்சமயம் தாய்லாந்து சுற்றுலா சென்று இருக்கிறார் .அங்கு நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் நடிகை.

த்ரிஷா

2026040819295582.jpeg

த்ரிஷா கூட நடிச்சு 23 ஆண்டுகள் ஆச்சு. போன வாரம் ஒரு படம் முடிச்சோம், அதுக்கப்புறம் இப்போ மீண்டும் சந்திச்சு நடிக்குற மாதிரி இருந்தது என்கிறார் சூர்யா.