
அவசர முடிவுகள் எடுக்க மு க ஸ்டாலினுக்கு அதிகாரம் திமுக சட்டமன்ற குழு கூட்டத்தில் முடிவு
சட்டமன்ற உறுப்பினர் இல்லாத ஒருத்தருக்கு அதிகாரம் வழங்கி இருக்கீங்க?
மு க ஸ்டாலின் ,திருமாவளவன், சண்முகம், வீரபாண்டியன் திடீர் சந்திப்பு
ஞாபகமறதியா தொகுதி பங்கீடு பற்றி பேச போறாங்க!!!
பெரும்பான்மை சட்டமன்றத்தில் நிரூபிக்க வேண்டும், ராஜ்பவனில் அல்ல கமலஹாசன்
யாரோ தெளிவா புரியும்படி எழுதி தந்திருக்காங்க! !!
தமிழ்நாட்டில் விஜய் ஆட்சி அமைக்க திமுக எந்த இடையூறும் செய்யாது திமுக தலைவர் ஸ்டாலின்
அப்படியா?அப்புறம் ஏன் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி போனா திட்டறீங்க? !
தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைத்தது பதவி ஆசையில் இல்லை காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர்
அப்போ மந்திரி பதவி வேண்டாமா? !!
கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்ய முடியாமல் திணறும் காங்கிரஸ்
இப்படி இவங்க சங்கடப்படக்கூடாது என்று தான் பல மாநிலங்களில் மக்கள் காங்கிரஸுக்கு ஓட்டு போடல!!
அம்பேத்கர் பற்றிய புத்தகத்தில் முப்பது வினாக்கள் கேட்ட நீதிபதி
வக்கீல் எத்தனை கேள்விகளுக்கு பதில் சொன்னார் அத சொல்லுங்க ஜட்ஜ் ஐயா? !!
கடலில் கரையும் பெருங்காயமாக காங்கிரஸ் கட்சி கரையும் ஆர் எஸ் பாரதி
பகுத்தறிவு கட்சியான உங்களுக்கு தேர்தல் முடிந்த பிறகு தான் இந்த ஞானோதயமே வருது!!!

Leave a comment
Upload