இந்த படத்துக்கெல்லாம் விளக்கம் தேவையில்லை.

கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள் எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் ஒன்று சேருவார்கள் என்று.
ஜெயாவும் கருணாநிதி பரிவாரங்களும் ஒன்று சேர்வார்கள் என்று.
ஆடு பகை குட்டி உறவா என்பது ஒரு சொலவடை......
ஆனால் தி.மு.கவில் இருக்கும் பெரிய தலைகள் எல்லாம் அதிமுகவிலிருந்து வந்தது தான்.....
மேலும் பல பிசினஸ் டீலிங்க்ஸ் இரண்டு கழகங்களுக்கும் இருக்கிறது என்பது சாமானியனுக்கும் தெரிந்த விஷயம் தான்.......
பதவி என்று வந்தால்..... கொள்கை, கோட்பாடு, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு...எல்லாம் காற்றில் பறக்கும் என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது....
All is fair in Love and War என்பது தான் கழகங்களின் கோட்பாடு.
கழகங்களை தாண்டி மூன்றாவது நபர் தமிழ்நாட்டில் காலூன்றுவது ஏற்றுக் கொள்ள முடியாது என்பது தெரியவருகிறது....அது பாஜக உள்ள வந்துவிடும் என்ற சர்க்க்ரை தடவிய வார்த்தைகளில் அனைத்து கழகங்கள் இல்லாதவற்றுக்கும் பொருந்தும்.
பார்க்கலாம் மையத்தை கரைத்தது போல எல்லாவற்றையும் செய்யலாம் என்ற கழக கட்டமைப்பு ஜெயிக்குமா ???
தமிழ்நாட்டுக்கு இது புதுசு. காத்திருந்து தான் ஆக வேண்டும்.

Leave a comment
Upload