
07.05.2026 வரை நடந்து முடிந்த 50 மேட்சுகளில்
11 மேட்சுகள் 494 ரன்கள் எடுத்து ஆரஞ்சு கேப் வாங்கியிருப்பவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஹென்ரிச் க்ளாசன்.

17 விக்கெட்டுகள் எடுத்து பர்ப்பிள் கேப் வாங்கியிருப்பவர் பெங்குளூரின் புவனேஷ்வர் குமார்.

108 டாட் பந்துகள் போட்டு அசத்துபவர் குஜராத்தின் முகமத் சிராஜ்.
11 மேட்சுகள் ஆடிய ஹைதராபத் அணி ஏழு மேட்சுகள் ஜெயித்து 13 புள்ளிகளோடு முன்னணியில் இருக்க, 10 மேட்சுகள் ஆடி லக்னௌ அணி 3 மேட்சுகளில் மட்டுமே ஜெயித்து 6 புள்ளிகளோடு இறுதி ரேங்க் 10ல் நிற்கிறது.
சென்ற வாரம் நடந்த மேட்சுகள் யாவும் கிட்டத்தட்ட ஆறு முதல் பத்து ரேங்க் வாங்கினவர்களைத் தூக்கி விடும் மேட்சுகளாகவே நடந்திருக்கிறது.
ஏதோ சொல்லி வைத்தாற்போல் நடக்கிறது.
பின்ன என்னங்க?
முதல் நாலு வார முதல் ரேங்க் எடுத்த பஞ்சாப் தனது கடைசி 3 மேட்சுகளில் தோற்றிருக்கிறது.
பெங்களூரு தனது கடைசி இரு மேட்சுகளில் தோற்றிருக்கிறது. அதிலும் லக்னௌவிடம் வெறும் 9 ரன்கள் குறைவாக எடுத்ததால் தோல்வி.
வைபவ் சூரியவாண்ஷியின் ராஜஸ்தான் டீம் இப்பல்லாம் ஒரு மேட்ச் ஜெயித்தால் ஒரு மேட்ச் தோற்று ஈடு கட்டுகிறது போல் தோன்றுகிறது.
மும்பையும் கொல்கட்டாவும் தங்களுடைய ஆட்டங்களை மறந்து விட்டனரோ என்றே தோன்றுகிறது.
இது இப்படியிருக்க , சில வேண்டாத விஷயங்களுக்கு நமது ஐபிஎல் நட்சத்திரங்கள் பிரகாசிக்கிறார்கள். பணம் வந்தவுடன் கலாச்சாரம் சந்திக்கு வந்துவிடுகிறதோ இவர்களுக்கு.
ஹார்திக் பண்டியா,

இஷான் கிஷான்,

யஷஷ்வி ஜைஸ்வால்,

அர்ஷ்தீப் சிங்க்

ஆகியோர் நண்பிகளுடன் உலா வருவது அதிகரித்து வருகிறது. பிசிசியை இதைத் தடுக்க கடிவாளம் இட யோசித்து வருகிறது.
ராஜஸ்தானின் கேப்டன் ரியான் பாராக் ஈ சிகரட் பிடித்ததற்காக 25% மேட்ச் தொகையை அபராதமாக கட்டியிருக்கிறார். அவரை தீவிர கண்காணிப்பில் வைத்திருக்கிறார்கள். மேற்கொண்டு ஒரு மேட்ச்சோ அல்லது இரண்டு மேட்ச்சுகளோ என அவரை விளையாட தகுதியற்றவராக்கி விடவும் பிசிசிஐக்கு யோசனை இருக்கிறதாம்.

அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரர்களின் சொதப்பல்கள்.
ரூ.27 கோடிக்கு வாங்கப்பட்ட ரிஷப் பந்த் எட்டு இன்னிங்க்சில் வெறும் 204 ரன்கள் எடுத்துள்ளார். அவரது அணி முதலாளி கோயங்கா தான் ரொம்ப முசுடாச்சே.
சூரியக்குமார் 16.36 கோடிக்கு வாங்கப்பட்டாலும் இதுவரை 162 ரன்களே எடுத்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றின் அதிக விலைக்குப் போன கேமரொன் கிரீன் 199 ரன்கள் எடுத்துள்ளார்.
ரூ.21 கோடிக்கு விற்றுப் போன நிகோலாஸ் பூரானின் மட்டை இதுவரை 145 ரன்களே அடித்துள்ளது.
ஹார்திக் பண்டயா ரூ 16.35 கோடிக்கு வாங்கப்பட்டார். அடித்த ரன்களோ128.
மும்பை இண்டியன்ஸ் டீம் தான் உலகிலேயே T20 மேட்ச்சுகளில் 50,000 ரன்கள் எடுத்த முதல் டீம்.
லக்னௌ அணியின் முதலாளி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ரூ15,600 கோடிக்கு 5% முதலீடு செய்துள்ளார்.

தொடரும்…..

Leave a comment
Upload