தொடர்கள்
வலையங்கம்
இது ஒரு பாடம்

2026040818580825.jpeg
நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல் என்பது மாநிலத் தேர்தல் என்று பார்க்காமல் பாராளுமன்ற தேர்தல் போல் தான் முடிவுகள் வந்திருக்கின்றன. நமது நாட்டின் ஒட்டு மொத்த அரசியல் சூழல் பிரச்சனை ஆகியவற்றில் மக்களின் மனநிலை என்ன என்பதைத்தான் இந்தத் தேர்தல் காட்டி இருக்கிறது.
ஐந்து மாநிலங்களில் அசாமிலும் புதுச்சேரியிலும் ஆளும் கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. மேற்குவங்கம் கேரளா தமிழகம் மூன்றிலும் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. இந்த மூன்று மாநிலங்களிலும் மதச் சிறுபான்மையினர் ஓட்டு வங்கியை தக்க வைத்துக் கொள்ள ஆட்சியாளர்கள் இந்து விரோத போக்கை கையில் எடுத்துக் கொண்டார்கள். அதற்கான விலை தான் இந்த தேர்தல் முடிவுகள். அரசியல் ஆகாயத்துக்காக ஒரு சமூகத்தை இன்னொரு சமூகத்துக்கு எதிராக எடுத்துச் செல்வதைசாமானியர்கள் விரும்பவில்லைஎன்பதை தெளிவுபட சொல்லிவிட்டார்கள்.இதை புரிந்து கொள்ள வேண்டிய கட்சிகள் புரிந்து கொண்டால் அவர்களுக்கு நல்லது.