தொடர்கள்
கதை
கர்மா- பா.அய்யாசாமி

20260631091218558.jpeg
ம்மா..மகனுக்கு காலேஜ் பீஸ் கட்டணும்னு பணம் கேட்டிருந்தேனே,
சார் என்ன சொன்னாங்கம்மா என்று கேட்ட வீட்டில் வேலை செய்யும் கோமதியிடம்,

இப்போது அவரோட அப்பாவின் சிகிச்சையிலே பிசியாக இருக்காருமா...
நீயே போய் அவரிடம் கேளு நானும் அவரிடம் சொல்கிறேன் என்றாள் சாந்தி.

இருவரின் உரையாடல்களையும் கேட்டுக்கொண்டே அங்கே வந்த சங்கர்,

அவன் நன்றாகப் படிக்கக் கூடியவன், நல்லா படித்து முன்னே வரணும்,உங்க கஷ்டம் தீரவேண்டும் அதற்கு உதவி செய்யணும்னுதான் எங்கள் ஆசை கோமதி,
ஆனால் இப்போது நிதி நிலைமை சரியில்ல அப்பாவின் உடல் நிலை மோசமாகி வருகிறது, கிட்னியிலே கல்லும் சிறு அடைப்பும் இருக்கிறதாம்,உடனே அறுவை சிகிச்சை வேறு செய்யணும், சுமாராக ஒன்னரை இலட்சங்கள் செலவாகும் என்று சொன்ன சங்கர் "பார்க்கிறேன்" என்று சொல்லி விட்டுச் சென்றார்.

நீ ஏதும் மருத்துவச் செலவு செய்யாதே சங்கர், என் டெபிட் கார்டைக் கொண்டு பணம் எடுத்துக்கொள் என்றபடி வந்தார் சங்கரனின் அப்பா வைத்தா.

அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்பா என்ற சங்கரிடம்..

பென்சன் பணத்தை வச்சுண்டு நான் என்னடா செய்யப் போகிறேன் என்றார்.

சங்கர் வேலைப் பார்ப்பது ஒரு பன்னாட்டு நிறுவனம் என்பதால்,காப்பீடு மூலம் தனியார் மருத்துவமனையில் தனக்கும்,தன்னைச் சார்ந்தவர்களுக்கும் உயர் சிகிச்சைகளைப் பெறமுடியும். அந்த வகையில் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் விசாரிக்கும்பொழுது,

"சார் உங்கள் காப்பீடு மூலமாக இந்த சிறுநீரகச் சிகிச்சைக்கு இரண்டு லட்சம்வரை இழப்பீடு கிடைக்கும்,அதனை இரண்டு வகையில் நீங்கள் பெறமுடியும்.

ஒன்று zero cash அதாவது மருத்துவமனையே செலவுகளைச்செய்து காப்பீட்டு நிறுவனத்திலிருந்து பெற்றுக்கொள்வோம்

மற்றொன்று நீங்கள் செலவுகளைச் செய்துவிட்டுத்திரும்ப பெறுதல் என்று விளக்கம் சொன்னார்கள்.

Zero cash method
ஓகே என்று சங்கர் சொன்னதும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் இறங்கினார் மருத்துவமனையின் மேலாளர்.

உங்கள் தந்தையின் சிகிச்சை இழப்பீடு 1.5 இலட்சம் வரை கிடைக்கும் என்றவர் தேவையான ஆவணங்களை கேட்டுப்பெற்றுக்
கொண்டார்.நாளை மறுநாள் அறுவை சிகிச்சை என நாள் குறித்தபின்னே மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்
வைத்தா.

"உங்கள் இழப்பீட்டு வேண்டுகோள்,
இரண்டு இலட்சம் ஏற்கப்பட்டுள்ளது" என காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து குறுஞ்செய்தி வந்தது சங்கருன் அலைப்பேசிக்கு.

ஒன்னரை இலட்சம்தானே ஆகும் என மருத்துவர் சொன்னார்,ஏன் இரண்டு இலட்சங்கள் என மேலாளரைக் கேட்டதற்கு, அது அப்படிதான் வழக்கம், நீங்க கொடுக்க வேண்டாம்,காப்பீடு நிறுவனம்தான் எங்களுக்கு அளிக்கிறது என்றார்.

இருந்தாலும் அது மக்கள் பலர் செலுத்திய பணம் அல்லவா,தேவைக்கு கிடைத்தாலே போதுமே என்றார் சங்கர்.

அவனின் அனைத்து கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டதோடுரூபாய் ஐம்பாதாயிரம் கூடுதலாக பெறுவது என தீர்மானமானார் மருத்துவ மேலாளர்.

அவரிடம் வழக்காடித் தோற்ற சங்கர் தந்தையின் உடல் நிலையையும்,
நேரத்தையும் கருத்தில் வைத்து அமைதியானார்.

நான் எதிர்பார்த்த மாதிரியே நல்ல வண்டிப்பா, இரண்டாவது கைதான் விற்பனைக்கு வந்திருக்கு,விலையும் ஐம்பதாயிரம்தான் என்ற தன் ஆசை மகனிடம், உனக்குப் பிடித்திருந்தால் வாங்கிக் கொள், நாளையே பேமெண்ட் செய்திடலாம் என்றார் மருத்துவமனையின் மேலாளர்.

சிகிச்சை முடித்து நல்லபடியாக வீடு திரும்பிய வைத்தா,

சங்கர்! எத்தனை ரூபாய் மருத்துவச் செலவாச்சு? என கேட்டார்.

எனக்கு ஒன்றும் செலவில்லையப்பா..
காப்பீடு மூலமாக ஒன்னரை இலட்சம் ஆனது என்றார் சங்கர்.

தவறாக நினைக்காதே சங்கர்,அந்த பணத்தை
என் வங்கியிலிருந்து எடுத்து கோமதிக்கிட்டே
கொடு என்றார்.

அப்பா அதை நான் பார்த்து கொடுத்துக்கிறேன், நீங்க ஏன் கொடுக்கணும்?!

என்னடா நீ நான் என பிரிச்சு பேசறே? என்றார்.

இல்லைப்பா..நீங்க ஏன் சிரமப் படணும்?

ஏதோ போராதக்காலம், நமக்கு ஒரு மருத்துவச் செலவு வந்திடுச்சு. அது இத்தோட போச்சேனு எனக்கு சந்தோசம்தான். செய்த செலவை நீ திரும்பவும் வாங்கினால் அது இயற்கையை மீறியச் செயலாகும் என்றார்.
அது வேறு வகையில் பெரிதாக நமக்கே திரும்ப வரலாம் என்றார்.

ஏம்பா!
நாங்க வருடாவருடம் காப்பீடு கட்டுவதே நம்ம உடல் நிலை காப்பதற்காகத்தானே,
அதை திரும்ப வாங்கினால் தப்பு ஒன்றுமில்லையே என்றார் சங்கர்.

வேண்டாம்பா.. சிகிச்சைக்கு தொகை இல்லாமல் அவதிப்படுபவர்கள் எத்தனையே நபர்கள் இருக்கிறார்கள்
ஆகையால் அந்த தொகை நமக்கு வேண்டாம்,
நீ வேண்டுமானால் கோமதியின் பிள்ளைக் கல்விக்கு கொடுத்துவிடு, அந்த தொகையுனைப் பிறருக்கு உதவுவதுதான் சிறந்தது என்றார் வைத்தா.

சரிங்கப்பா அப்படியே செய்துடுவோம் என்ற சங்கர், கோமதியையும் அவளது மகனையும் வீட்டிற்கு அழைத்து கல்வி உதவித் தொகையினையும்,
கல்லூரிக்குத் தேவையான ஆயத்த ஆடைகளையும் வழங்கி மகிழ்ந்தனர்.

மருத்துவமனை மேலாளருக்கு செல்போனில் அவரது மகனிடமிருந்து அழைப்பு வந்தது, தான் ஆசை ஆசையாய் வாங்கிய வண்டி, கடைத் தெருவில் நிறுத்தியது களவுப் போய்விட்டது என.