தொடர்கள்
ஏக்கம்
கொக்கரக்கோ- ஸ்வேதா அப்புதாஸ்

கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள கொக்கரக்கோ ஹோட்டலுக்கு கடந்த மே மாதம் மதிய உணவு பார்சல் வாங்க சென்றோம்.

20260630115631828.jpeg
மே மாத மதிய வெயில் வேர்த்து கொட்டிக் கொண்டியிருந்தது.
உணவு பார்சலுக்கு டோக்கன் வாங்கி செல்ல ஹோட்டலின் இடது புறம் ஒரு பெரிய ஹால் அங்கு தான் பார்சல் டெலிவரி செய்யப்பட்டது.
நாம் ரிசப்ஷன் ஏசி ரூம்மில் அமர்ந்து பின் பார்சல் ரெடியான பின் வெளியே சென்று பெற்று கொள்வதற்குகள் கோடை வெப்ப சூடு மூச்சு திணறி விட்டது நமக்கு.
பார்சல் சப்ளை செய்யும் ஊழியர்கள் 12 மணிமுதல் மாலை வரை அந்த சூட்டில் வேர்த்து மூச்சு திணறி சப்ளை செய்ய அவர்களின் கஷ்டம் நம் இதயத்தை துளைத்து விட்டது.
நமக்கு அதிகம் வேர்க்க ஆரம்பித்து விட்டது.

20260630115726517.jpeg
இந்த சூட்டில் அந்த ஊழியர்கள் எப்படி பார்சல் சப்ளை பணியை செய்கிறார்கள் மிகவும் கஷ்டம் என்று உணர்ந்து நம் கவலை,
நம் ஆதங்கத்தை அந்த ஹோட்டலில் உள்ள கவுண்டரில் எடுத்து கூறினோம் மேலிடத்தில் சொல்கிறோம் என்றார்கள்.
அங்கு பணிபுரியும் மேற்பார்வையாளர் பரணியை சந்தித்து பார்சல் வழங்கும் ஊழியர்கள் வெயில் சூட்டின் தாக்கத்தில் வேர்த்து உபசத்தில் மணிகணக்கில் பணி செய்வது மிக கடினம் மின் விசிறி அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறினோம்.


பரணி அவர்கள் “ உங்களுடைய ஆதங்கத்திற்கு நன்றி கட்டாயம் நடவடிக்கை மேற்கொள்கிறோம்”என்று கூறினார்.
கடந்த செவ்வாய் கிழமை மதிய உணவு உட்கொள்ள சென்றோம் நமக்கே ஆச்சிரியம் பார்சல் செக்ஷனில் நான்கு பெரிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு பணி செய்யும் ஊழியர்களை குளிர வைத்து கொண்டிருந்தது.

20260630115823237.jpeg
அதை பார்த்து நம் உள்ளம் மெய்சிலிர்த்து குளிர்ந்து விட்டது.
பரணியை சந்தித்து தேங்க்ஸ் கூறினோம். “ சார் நீங்க உங்கள் ஆதங்கத்தை கூறினவுடன் எங்க எம் டி சாரிடம் விஷயத்தை கூற உடனே நிலைமையை உணர்ந்து நான்கு பேன் பொருத்தி கொடுத்தார் உங்களுக்கும் நன்றி”என்று கூலாக கூறினார்.

20260630120253183.jpeg
விகடகவி குடும்பம் சார்பாக கோவை கொகர்கோ உரிமையாளர் டேவிட் அவர்களுக்கு நம் உள்ளார்ந்த குளிர்ச்சியான நன்றிகள்.