
நெல்லை ஆர்
ஜெபமணி!
என் வாழ்வில் நான் சந்தித்த சுதந்திர போராட்ட வீரர்களில் முக்கியமானவர் இவர்.
இவர் பிறந்தது 1919 ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள
குரங்கணி ஆகும்.
மிசா காலத்தில் பெருந்தலைவர் மறைவுக்குப் பின் கைதானவர். அதுவும் அவருடைய பிறந்ததினம் என எண்ணுகிறேன்.
1977 சட்ட மன்ற தேர்தலில் சாத்தான்குளம் தொகுதியில் நடந்தே சென்று வாக்குகள் சேகரித்து வெற்றிப்பெற்றார்.
பெருந்தலைவர் அவர்கள் காந்தி, நேரு போன்ற தலைவர்கள் மறைந்த போது கூட கலங்காதவர், கள்ளுக்கடை திறந்த தகவல் தெரிந்த போது மிகவும் கண்கலங்கியதாக ஜெபமணிஅவர்கள் தெரிவித்தார்.
ஜெபமணி அவர்கள் 1977ல் சத்தியமூரத்தி பவன் வந்த சேதி கேட்டு அவரைப் போய் நேரில் பார்த்து நானும் ஸ்தாபன காங்கிரஸ் மாணவன் தற்போது ஜனதா கட்சி உறுப்பினராக இருப்பதாகத்தெரிவித்து ஆட்டோகிராப்பில் கையொப்பம் வாங்கினேன்.


Leave a comment
Upload