தொடர்கள்
கொடுரம்
" கண்ணீரில் தோட்டக்கலை ஊழியர்கள் " - ஸ்வேதா அப்புதாஸ்

தமிழகத்தில் உள்ள முக்கிய மலை பிரதேசங்களில் சுற்றுலாக்களை கவர்ந்து இழுப்பது அழகிய பூங்காக்கள்.
அதில் முக்கியமாக ஊட்டி பொட்டானிக்கல் கார்டன்.
இது ஆசியாவிலே மிகப்பெரிய பூங்கா.

20260728000720687.jpeg
அதை தொடர்ந்து கொடைக்கானல் பிரைன் பூங்கா, ஏற்காடு பூங்கா மற்றும் பூச்செடி பண்ணைகள் உள்ளன.
இவை அனைத்தையும் பராமரிப்பது தமிழக தோட்டக்கலை துறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஊட்டி மலர்க்காட்சி உலக பிரசித்திபெற்றது கோடை சீசன் களைகட்டுவது இந்த பூங்காக்களால் தான்.

2026072800111440.jpeg
பூத்து குலுங்கும் பூக்களை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த மலைகளுக்கு விஜயம் செய்து வருகின்றனர்.
வருடந்தோறும் இந்த பூங்காக்களில் பூத்து குலுங்கும் மலர்கள் நம்மை வரவேற்று புன்னகைத்து கொண்டிருக்கும்.
இந்த மலர்கள் பூத்து குலுங்க காரணமானவர்கள் இந்த பூங்காக்கள் மற்றும் பண்ணைகளில் பணிபுரியும் பூங்கா ஊழியர்கள் தான்.

2026072800114156.jpeg
பூங்காக்களை வருடந்தோறும் பராமரித்து
மலர்களை சிரிக்க வைக்கும் இவர்களின் கண்களில் தினமும் கண்ணீர் தான் இதற்கு காரணம் தோட்டக்கலை துறை சார்ந்த உயர் அதிகாரிகள் என்று சொன்னால் மிகையாகாது.
பூங்கா,பண்ணைகள் பராமரிப்பு பணியில் தங்களின் வேர்வையை சிந்தி உழைக்கும் பூங்கா ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களின் ஊதியம் கொடுப்பதில்லை எந்த ஊக்க தொகையும் ஊதிய உயர்வை தருவதில்லை அரசு.
இதை விட கொடுமை ஓய்வு பெரும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் எந்த பண பலனும் தருவதில்லையாம்.
இந்த கவலை மற்றும் மனஉளைச்சலில் பல ஓய்வு பெற்ற ஊழியர்கள் இறந்தே போய்விட்டனர் என்கிறார்கள் பாவப்பட்ட ஊழியர்கள்.
20260728001301664.jpeg
ஓய்வு பெற்ற பூங்கா ஊழியர் மற்றும் ஊழியர் சங்க மாவட்ட செயலர் சுப்ரமணியை தொடர்பு கொண்டு பேசினோம்,

20260728001335265.jpeg
"தோட்டக்கலை துறை ஊழியர்களாக பல வருடங்களாக பூங்காக்கள் மற்றும் பண்ணைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கும் ஊதியம் வழங்குவதில்லை என்பது வருத்தமான விஷயம்.
தமிழ்நாடு முழுவதும் தோட்டக்கலை துறையில் 1200 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.
எங்களின் தொடர் போராட்டத்திற்கு பின் சிறப்பு கால முறை ஊதியம் வழங்க அரசு உத்தரவு பிறப்பித்தது.
Go 22/2006 அன்றைய முதல்வர் ஜெயலலிதா மாத சம்பளம் வழங்க உத்தரவு பிறப்பித்தார்.
அதிலும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு வழங்கும் ஊதியம் வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.
அதன் படி 1330 அடிப்படை ஊதியம் பின்னர் அது உயர்ந்து அடிப்படை ஊதியம் 7.700 உயர்ந்து ஒரு பூங்கா ஊழியர் மொத்தமாக 14000 தான் ஊதியம் பெறுவது வருத்தமான ஒன்று.
அரசு ஊழியர்களுக்கு வழங்கும் எந்த ஊக்க உயர்வும் கொடுப்பதில்லை.
தோட்டக்கலை துறை வருடத்திற்கு 20 கோடி வருமானத்தை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மட்டும் 54 பண்ணைகள் உள்ளன.
நீலகிரியில் மட்டும் 14 பண்ணைகள் உள்ளன.
இவை அனைத்தும் நல்ல லாபத்தில் இயங்குகின்றன.
ஊட்டி அரசு பூங்காவான பொட்டானிக்கல் கர்டெனில் 300 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
20260728001409322.jpeg
இதுவரை சம்பள உயர்வு இல்லாமல் தவித்து கொண்டிருக்கிறார்கள்.
சம்பள உயர்வை எதிர்பார்த்து போராடி ஏமாற்றத்தில் ஓய்வு பெற்று விட்டனர் பலர் அதில் நானும் ஒருவன்" என்கிறார் சுப்பிரமணியம்.
மேலும் அவர் தன் ஆதங்கத்தை கூறினார்.
" ஓய்வு பெரும் ஊழியருக்கு ஒரு வெள்ளை பேப்பரில் ' 'நீங்க ஓய்வு பெறுகிறீர்கள்' என்று எழுதி கொடுத்து விட்டு அனுப்பி விடுவது தான் நடந்து வருகிறது இந்த துறையில்.
தோட்டக்கலை துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் கொத்தடிமைகளாக தான் நடத்த படுகிறார்கள் இதற்கு முழு காரணம் இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்கள் தான்.
காவல் துறை அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க படுகிறது சம்பள உயர்வும் உண்டு.
எங்களுக்கு அவை இல்லை.
மருத்துவ உதவி தொகை, இறப்பு உதவி தொகை கூட கொடுப்பதில்லை.
பதவி உயர்வே இல்லாத துறை தோட்டக்கலை துறை என்பது ஆச்சிரியமான ஒன்று.
வாட்ச் மென், அலுவலக உதவியாளர், டைப்பிஸ்ட் எல்லா பணிகளையும் நாங்களே தான் செய்ய வேண்டும்.
தமிழகம் முழுவதும் 1200 காலி பணியிடங்கள் உள்ளன இதை பற்றி அதிகாரிகளுக்கு கவலையில்லை.
எந்த ஊக்கஉதவியும் கடந்த பத்து வருடமாக வழங்க படவில்லை.
முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி மற்றும் ஸ்டாலினிடம் மனுக்கள் கொடுத்துள்ளோம் அதிகாரிகள் முதல்வர்களிடம் மற்றும் அமைச்சரிடம் எங்களின் கோரிக்கையை மறைத்து விடுவது தான் நடந்து வருகிறது.
சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் 3500 வழங்க படுகிறது எங்களுக்கு எதுவுமே இல்லை.
எங்களின் குறைகளை தொழிலாளர் கோர்ட்டுக்கு சென்றால் நீங்க அரசு ஊழியர்கள் உயர் நீதி மன்றத்திற்கு செல்லுங்கள் என்று கூறுகிறார்கள்
ஒரு ஓய்வு பெற்ற ஊழியர் ஊட்டி பொட்டானிக்கல் கார்டன் முன் பிச்சை எடுத்து போராடி இறந்தே போய்விட்டார்.
ஓய்வு பெற்ற பலர் மனஉளைச்சலில் இறந்து விட்டனர்.
எங்கள் பூங்காக்களில் பணிபுரியும் தின கூலி ஊழியர்கள் மாதம் 18000 ஊதியம் பெறுகிறார்கள்.


அந்த ஊதியத்தை எங்களுக்கு கொடுத்தால் நல்லது என்று கூறியுள்ளோம்.
எங்களுக்கு முதியோர் ஓய்வூதியம் கூட வழங்க மறுக்கிறார் மாவட்ட கலெக்டர் காரணம் நாங்கள் அரசு ஊழியர்கள் என்று !.
அரசு ஆணையை மதிக்காத அரசு அதிகாரிகள் மேல் ஐ பி சி 166 மூலம் அவர்களை சிறையில் அடைக்கலாம் 2000 அபராதம் போடலாம்.
எங்களுக்கு உதவாத எங்களின் உரிமைகளை பறித்து கொத்தடிமைகளாக நடத்தும் இந்த தோட்டக்கலை இயக்குனர், இணைஇயக்குனர் மற்றும் அதிகாரிகள் மேல் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது.?
அந்த அதிகாரிகள் மற்றும் அரசின் அனைத்து சலுகைகளை பெற்று சந்தோஷமாக இருக்க எங்களை போல எத்தனை ஊழியர்கள் வேதனையில் உள்ளனர்.
இந்த மன உளைச்சலில் எத்தனை பேர் இறந்துள்ளனர்.
தோட்டக்கலை துறையின் பதில் என்ன ?.

20260728001738491.jpeg
வருகிற 31 ஆம் தேதி திங்கள் கிழமை சட்ட மன்றத்தில் இந்த துறையின் மானிய கோரிக்கை விவாதம் நடக்க இருக்கிறது அது சமயம் தோட்டக்கலை துறை அமைச்சர் எங்களுக்கு உதவி புரிய வேண்டும் அனைத்து ஊழியர் மற்றும் இறந்த அப்பாவி ஊழியர்
சார்பாக " என்கிறார் சுப்பிரமணியம்.
அனைத்து தோட்டக்கலை பூங்காக்கள் மற்றும் பண்ணைகளில் மலர்கள் புன்னகைத்து மலர்ந்துள்ளன
ஊழியர்கள் கண்ணீரில் நிற்கின்றனர்.