தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20260728182111708.jpeg

சட்டமன்றம் சண்டை மன்றம் ஆகக்கூடாது பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்.

ஆமா கொஞ்சம் சத்தம் ஜாஸ்தியா தான் இருக்கு !!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டெல்டா மாவட்டங்களில் நாளை முற்றுகை போராட்டம்.

அவங்க வெளியிலிருந்து ஆதரிக்கிறாங்களாம், அதனால அவங்களுக்கு போராட்டம் நடத்த ரைட்ஸ் இருக்கும் !!

பாஜகவை உறுதியாக எதிர்ப்போம் அருண்ராஜ் பேட்டி.

ஆனால், மத்திய அரசை எதிர்க்க மாட்டீங்க அப்படித்தானே ?

தமிழக வெற்றிக்கழக அரசு ஆசிரியர்கள் விஷயத்தில் இரட்டை வேடம் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு.

முதல்வர் சினிமாவுல நிறைய இரட்டை வேடம் போட்டு இருக்கிறார் இல்ல அதான் ?

இரண்டு போலீசாரை கத்தியால் வெட்டிய பிரபல ரவுடி துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு !!

வெட்டினால் தான் சுடுவாங்க போல தெரியுது ?

தமிழ்நாட்டில் 1588 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு, அச்சப்பட வேண்டாம் என்று அமைச்சர் அறிவுறுத்தல்.

எத்தனை பேருக்கு பன்றிக் காய்ச்சல் என்று எண்ணிக்கொண்டு தான் இருப்பாங்க போல இருக்கு !!

லட்சக்கணக்கானோர் செய்ய தவறால் கோடிக்கணக்கானோர் துன்புறுகின்றனர் மு.க.ஸ்டாலின்.

108 பெருசா ? 59 பெருசா ?

ராகுல் காந்தி மட்டுமே இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக இருப்பார் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி.

ஆமா, பிரதமர் வேட்பாளராக மட்டும் தான் இருப்பார் !!

2029-ல் ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லை பா.சிதம்பரம்.

நீங்க சாத்தியம் இல்லைன்னு சொல்லிட்டீங்க இல்ல அப்ப பாஜக கண்டிப்பா சாத்தியம் என்று செஞ்சிருவாங்க !!

பொது மக்களுக்கு பாதிப்பு இல்லாத புதிய இடத்தில் விமான நிலையம் அமைய வேண்டும் திருமாவளவன்.

அப்படி ஒரு இடம் இருக்கான்னு நீங்க தான் சொல்லணும் !!

செந்தில் பாலாஜியிடம் மூன்று மணி நேரம் விசாரணை.

மூச்சா எல்லாம் போகல இல்லே ?

' வீ த லீடர்ஸ் ' அமைப்பின் அடுத்த மூன்று மாத செயல் திட்டம் மக்களை ஒருங்கிணைக்க அண்ணாமலை வியூகம்.

உங்க வியூகம், எல்லாம் தொண்டர்களுக்கு கொட்டாவி வர வைக்குது !!

தொண்டர்களை சில மூத்த நிர்வாகிகள் அரவணைப்பதில்லை செயற்குழுக் கூட்டத்தில் திமுக தலைவர் கண்டிப்பு.

இதை கண்டுபிடிக்கவே உங்களுக்கு இவ்வளவு நாள் ஆச்சு !!

தமிழக அரசுக்கு நாங்கள் வேண்டுமா ? அதிகாரிகள் வேண்டுமா ? மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கேள்வி .

பதிலுக்கு நாங்க வேண்டுமா ? திமுக வேண்டுமா ? என்று அவங்க கேட்பாங்க பரவாயில்லையா ?

இரண்டு கோடி பணத்தையும் விஜய் படத்தையும் வைத்தால் எங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் படத்தை தான் எடுத்துக் கொள்வார்கள் அமைச்சர் ஆனந்த்.

கார் வேண்டுமா விஜய் படம் வேண்டுமா ? என்றால் ?

ராகுல் பிரதமரானால் நீட் தேர்வு இருக்காது, அமைச்சர் ராஜேஷ்குமார்.

அப்ப நீட் தேர்வு கண்டிப்பா இருக்குன்னு சொல்றாரு அமைச்சர் !!