ஹாய் மதன்
ஹாய் மதன்

20190813195855221.png

ஹாய் மதன் கேள்விகளுக்கு

ww.vikatakavi.in/haimadhan


20190813195929373.jpg

ஆர். சிவனேசன் - காரைக்குடி

சந்திராயன்2 கடைசிநேர தோல்வி, சிவன் அழுகை, பிரதமர் மோடி அவரை கட்டிப்பிடித்து அழுகை..எல்லாம் சரிதானா? பகுத்தறிவுக்குப் பொருந்துமா?!


அழுகை எமோஷன். அதற்கும் பகுத்தறிவுக்கும் சம்பந்தமில்லை. ஆண்கள் அழுவதில் என்ன தப்பு? டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் அழுகிற ஆண் பிரபலங்கள் போட்டோக்களை எல்லாம் போட்டிருந்தார்கள், டென்னிஸ் சேம்பியன் பெடரர் உட்பட். ஆண்கள் அழுவதில் தவறில்லை என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். நான் அழுவேன். எதற்காக அழுகிறீர்கள் என்பதுதான் முக்கியம். கடைசி நிமிடத்தில் சந்திராயன்2 நிலவில் கரெக்டாக இறங்காமல் போனபோது நான் கண் கலங்கினேன். எப்பேர்ப்பட்ட முயற்சி கடைசியில் வீணாயிற்று!


மீனாட்சி சுந்தரம் - காஞ்சிபுரம்

திருநங்கைகள் அரசு பதவிகளில் அல்லது பொறுப்பான பதவிகளில் அமர்வது வரவேற்கத்தக்கதா? அவர்களால் பெண்கள் அல்லது சாதாரண மனிதர்களைப் போல பணிகள் செய்ய முடியுமா? நிதானம் இருக்குமா?


உடல் ரீதி வேறு. மூளை வேறு. மகா புத்திசாலியான திருநங்கைகள் இருக்கக்கூடும்.பிரமாதாமக வேலை செய்வார்கள். நமக்குத்தான் அவர்களோடு பழகுவதில் ஏதோ ஒருவித தயக்கம்!


எஸ்.வல்லரசு - திருச்சி
பிரதமர் மோடி வெளிநாட்டு பயணங்களில் ஏதேனும் அரசியல் ரகசியம் இருப்பதாக நினைக்கிறீர்களா?


வெற்றிகரமாக பதவி வகிக்கும் பிரதமர்கள் நிறைய வெளிநாடுகளுக்கு பயணம் செய்வார்கள், உறவுகளை பலப்படுத்த! அதில் ஏதும் ரகசியம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. நம்மூரில் எல்லா அமைச்சர்களும் வெளிநாடு போகிறார்கள் என்று கேள்வி. அதுதான் ஏன் என்று புரியவில்லை!

20190813195955845.jpg
எல் தணிகாச்சலம்நாயுடு, செங்கல்பட்டு

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் செயல்பாடுகளில் ஏதோ பழிவாங்கும் போக்கு தெரிகிறதே?


எல்லா அரசியல் தலைவர்களும் ரகசியமாகவாவது பழிவாங்குவார்கள். சிலர் 20 வருடங்கள் கழித்துக் கூட பழி வாங்கலாம். அரசியலில் அது ஒரு பகுதி!


ஹாய் மதன் கேள்விகளுக்கு

ww.vikatakavi.in/haimadhan



டி.தெய்வசிகாமணி - பாடி, சென்னை.

வேற்று கிரகவாசிகள் உண்டா? செவ்வாய் கிரகத்தில் உயிருள்ளவர்கள் வாழ்ந்து பிறகு அது காலியாகி விட்டதா?


அதை கண்டுபிடிக்க எல்லா முயற்சிகளும் எடுத்து விட்டார்கள். இதுவரை வேற்றுகிரகவாசி இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் பூமியைப் போல கோடான கோடி கிரகங்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் செல்ல 100 அல்லது 1000 ஆண்டுகள் கூடப் பிடிக்கும். அங்கு ஏதாவது கிரகத்தில் வேற்றுக்கிரகவாசிகள் இருக்கக்கூடும்!

மாலதி - மண்ணடி, சென்னை.

பசுக்கள் மீது ஆதிகாலத்திலிருந்தே இந்தியர்கள் அன்பு காட்டிய போது, உலகின் வேறு பகுதிகளில் பசுக்கள் மதிக்கப்பட்டதா? பசுக்களை வணங்க வேண்டும் என்பது ஏன்?


எல்லா நாடுகளிலும் பசுவை கொண்டாடுவார்கள். வழிபடுவது நம் நாட்டில்தான் பசுவை லஷ்மி என்கிறார்கள். பசு ஒரு அற்புதமான பிராணி. ஆகவே இந்தியர்கள் அதன் மீது ஏகப்பட்ட பிரியம் வைத்திருக்கிறார்கள். அதற்காக அதன் சிறுநீரையெல்லாம் குடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. சிறுநீர் சிறுநீர்தான்!

20190813200043529.png
சுரேஷ் சுப்பிரமணியன், சிகாகோ

முதல்வர் எடப்பாடியார் சூட் போட்டால் அழகாக இருக்கிறார் அல்லவா? அவர்மீது உங்களுக்கு மதிப்பு அதிகமாகி விட்டதா?


நிஜமாகவே ஜோராக இருக்கிறார். யார் அவ்வளவு கச்சிதமாக அவருக்கு தைத்துக் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. எடப்பாடி ரெகுலராகவே சூட் போடலாம்!

கே என். தங்கமணி - சேலம்

கல்கியின் பொன்னியின் செல்வன் - சினிமாவாக எடுப்பது சாத்தியம்தானா? பார்த்திபன் கனவு சினிமாவில் ஓவியர் மணியம் கைவண்ணம் பிரமாதம். ஆனால் வெற்றி பெற்றதா?


பார்த்திபன் கனவு படு ஃபிளாப். அதில் பிரமாதமான ஒரே விஷயம் மணியம் அவர்களின் ஆர்ட் டைரக்ஷன்தான்! அதே சமயம் பொன்னியின் செல்வனை சுருக்கமாக எடுத்தால் கூட நன்றாக அமையும் என்பது என் கருத்து. முழு பொன்னியின் செலவனை எடுக்க முடியாது. மணிரத்னம் சுருக்கமாகத்தான் திரைக்கதை எழுதி இருப்பார் என்பது என் எண்ணம். எனக்கு அவரிடம் நம்பிக்கை இருக்கிறது!

20190813200103196.jpg
ஜெயந்தி கணேஷ் - தஞ்சை

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திணறுகிறாரா?


நம் நாட்டில் திணறாமல் கம்பீரமாக பேசுகிறவர் நிர்மலா சீதாராமன்தான் என்பது என் கருத்து. சிக்கலான இலாகாவை அவர் கவனிக்கிறார் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

20190813200137916.png
"நவோதயா" செந்தில் - புதுவை-14

தாங்கள் நேரில் சந்திக்கவேண்டும் என்று விரும்பிய நபர், ஆனால் அந்த நபரை சந்திப்பதற்குள் அவர் இறந்துவிட்டார், என்றால் யார் அந்த நபர்(கள்)?

ஒரே ஒருவரைச் சொல்ல வேண்டுமானால் அவர் பேராசிரியர் கல்கி.

20190813200152975.jpg
எந்த திரைப்படத்தை வீடியோவில் அடிக்கடி போட்டு பார்ப்பீர்கள்? என்ன காரணம்? (பழைய படமாகவும் இருக்கலாம், புதிய படங்களாகவும் இருக்கலாம்)

ஸ்பார்ட்டகஸ். அது முழுமையான சிறந்ததோர் திரைப்படம்.


நவோதயா” செந்தில், புதுவை-14
தமிழ்வாணனுக்கு தொப்பியும், கண்ணாடியும், ஆர்.கே.லட்சுமணனுக்கு மிஸ்டர் பொதுஜனம், சார்லி சாப்ளினுக்கு தொப்பி, தடி மற்றும் ஷு போன்று தங்களுக்கான ஐகானாக எதனைக்கூறலாம்?

அவர்கள் எல்லாம் பெரிய ஆட்கள். அவர்களோடு என்னை ஒப்பிடாதீர்கள். ஆனால் சிலர் என்னுடைய தாடி என்கிறார்கள். என்னைக்கேட்டால் ரெட்டைவால் ரெங்குடு என்பேன்!


ஹாய் மதன் கேள்விகளுக்கு

ww.vikatakavi.in/haimadhan