
பாலியல் ரீதியான நமது சந்தேகங்களுக்கு இந்த வாரமும் பதிலளிக்கிறார் பாலியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் T. காமராஜ்
தூக்க மாத்திரை பயன்படுத்தும் பழக்கம் இன்றைய தலைமுறையிடம் அதிகமாகிவிட்டது. இதனால் பாலியல் பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளதா ?
தூக்க மாத்திரைகளில் பல வகை உண்டு . சிலவற்றின் பாதிப்பு அதிகம் என்றால், சிலவற்றின் பாதிப்பு குறைவு. அவ்வளவுதான். எல்லாவித தூக்க மாத்திரைகளும் பொதுவாக பாலியல் ரீதியாக பிரச்சினையை உண்டு பண்ணும் என்பது உண்மை . பெண்களுக்கு செக்ஸ் தூண்டுதலைக் குறைத்துவிடும் என்றால் ஆண்களுக்கு விறைப்புத் தன்மையை குறைத்து விடும். சில மாத்திரைகள், மயக்க மருந்து கொடுத்தது போன்ற பாதிப்பை தரும். இத்தகைய மாத்திரைகளைத்தான் டின்னர் பார்ட்டிகளின் போது குளிர்பாணத்தில் கலந்து கொடுத்து விடுவார்கள் சில செக்ஸ் வெறியர்கள் ! அப்புறம் என்ன நடக்கிறது என்றே தெரியாத அளவிற்கு இது ஆளை மயக்க நிலைக்கு கொண்டு சென்று விடும்.
சாதாரணமாக melotonin என்ற ஹார்மோன் இரவு நேரத்தில் நமது மூளைப்பகுதியில் சுரந்து தூக்கத்தை வரவழைக்கும். இரவில் வெளிச்சம் இருக்கும்போது அது சுரக்காது . டி. வி. அல்லது கம்ப்யூட்டர் பார்த்துக்கொண்டு இரவு மூன்று , நான்கு மணி வரை சில இளைஞர்கள் விழித்திருப்பார்கள் . அவர்களுக்கு 'மெலடோனின் ' சுரக்காது .தூக்கமும் வராது . ஆக, இந்த ஹார்மோன் நமக்கு சுரக்காத போது , melotonin 10 mg தூக்க மாத்திரைகள் போடுவது பாதுகாப்பானது. இதேபோல calmpose, anxit போன்றவையும் உடம்புக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. இதுபோன்ற மாத்திரைகள் எல்லாமே தற்காலிக நிவாரணத்திற்குத்தான். 'இதை போட்டால்தான் தூக்கம் வரும் " என்ற அளவிற்கு பழக்கப்படுத்தி விடக்கூடாது. உணவுக்கட்டுப்பாடு , நடைப்பயிற்சி , யோகா போன்றவையே நித்திரைக்கு நீண்ட கால தீர்வு !
சற்று பெரிய மார்பகமுள்ள பெண்கள் செக்ஸில் வேகமாக இருப்பார்கள் என்கிற ஆண்களின் எண்ணம் சரியா ?
இதெல்லாம் ரொம்ப காலமாக இளசுகளால் பேசப்படும் கட்டுக்கதை. மார்பகங்களை பெண்மையின் சின்னமாக எப்போதுமே ஆண்கள் எடுத்துக்கொள்கிறோம். இதெல்லாம் ஆண்களின் ஆர்வத்தின் வெளிப்பாடு. இதற்கு தீனி போடுவது போன்ற சில மலையாள , தமிழ் படங்களின் காட்சிகள் அமைந்துவிடுகின்றன . மார்பகத்தின் அளவிற்கும் செக்ஸ் ஆர்வத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை ! போலி டாக்டர்களும் இந்த விஷயத்தில் தவறான எண்ணங்களை கிளப்பி விடுவது போல் பேசி வருகின்றனர்.
அண்மைக்காலமாக நடுத்தர வயதிலேயே மாரடைப்பால் இறந்து போகிறவர்கள் பற்றிய செய்திகள் அடிக்கடி வருகின்றனவே. பாலியலுக்கு ஏதாவது தொடர்பு உண்டா ?
அண்மைக்காலமாக ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் இது தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. முக்கியமான கண்டுபிடிப்பு என்ன தெரியுமா ? ஆண்மைக்குறைவு ஏற்பட்டு மூன்றாண்டுகளில் மாரடைப்பு வர வாய்ப்புள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது , ஆண்மைக்குறைவே முதல் எச்சரிக்கை மணி . ஆணுறுப்புக்கு வரும் ரத்த நாளங்கள் சிறியது . முதலில் அதுவே பாதிக்கப்படும் . இதன் பிறகே இதயத்திற்கு வரும் ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்படும். இதிலும் தப்பித்தால் மூளை பாதித்து பக்கவாதம் வரவும் வாய்ப்புள்ளது. எனவே ஆண்மைக்குறைவு போன்ற பிரச்சனை வரும்போது கடையில் ஏதாவது மாத்திரையை வாங்கிப்போட்டு அப்போதைக்கு சரி செய்யும் பழக்கம் நம்மிடம் உள்ளது . இது தவறு. முழுவதுமாக உடம்பை செக் அப் செய்து கொள்வது நல்லது. 'அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் ' அமைப்பு இது தொடர்பாக தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறது . இந்தியாவில்தான் இதுபோன்ற விஷயங்களில் அதிக அக்கறை செலுத்துவதில்லை . வெளிநாடுகளில் எச்சரிக்கையோடு செயல் படுகிறார்கள். நமக்கு எல்லாவற்றிலும் ஒரு அலட்சியம் .
ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு , மாரடைப்பிற்கான எச்சரிக்கை மணி என்றால் , பெண்களுக்கு ?
பெண்களுக்கு பாலியல் ரீதியாக எந்த தொடர்பும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை .
செக்ஸ் விருப்பம் குறைவு ?
அதற்கும் மாரடைப்பிற்கும் சம்பந்தமில்லை , பெண்களைப்பொறுத்தவரை !
(தொடரும்)

Leave a comment
Upload