கதை
சிறுகதை - அல்ப சந்தோஷம்...! - கி.கல்யாணராமன் 

20190818123539558.jpg


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அவன் வெளியே வந்தான்.


“சார்..ஆட்டோவா? எங்க சார் போவணும்?”


“மயிலாப்பூர் போகணும்.. எவ்ளோப்பா?”


“இருநூறு ரூபா ஆகும் சார்..”


“என்னப்பா இது? நான் போன மாசம் வந்த போதும் இருநூறு ரூபாதான் ஆட்டோ சார்ஜ்! இப்பதான் பெட்ரோல் விலை, பஸ் சார்ஜ் எல்லாம் ஏத்திட்டான்களே? நீங்க ஆட்டோ சார்ஜ் இன்னும் ஏத்தலையா?”


“என்னா சார்... எல்லோரும் ஆட்டோ சார்ஜ் அதிகம்னு சொல்வாங்க.. நீங்க கம்மின்னு சொல்றிங்க..”


“போன மாசம் வந்த போது மயிலாப்பூருக்கு இருந்த பஸ் சார்ஜ், இப்போ எவ்ளோ தெரியுமா உனக்கு?”


“ஆமா சார்.. பஸ் சார்ஜ் இப்போ அதிகம். அப்போ ஆட்டோவுக்கு நீ முன்னூறு ரூபா குடு சார்..”


“இது நியாயமான வாடகை.. இப்பதான் எனக்கு திருப்தியா இருக்கு!”


“சரி சார்... போலாமா?”


“அட நீ போப்பா..! நான் எப்பவும் பஸ்லதான் போவேன்.. ஆட்டோல போகாம பஸ்ல போனா எனக்கு எவ்ளோ லாபம்னு தெரிஞ்சிக்கத்தான் ஆட்டோ சார்ஜ் எவ்ளோன்னு கேட்டேன்.. ஆட்டோ சார்ஜ் அதிகமானாதானே எனக்கும் லாபம் அதிகமாகும்?”


“போடா சாவு கிராக்கி ... அடி வாங்காம ஓடிப் போய்டு..”