சர்வதேச அளவில் கடந்த 2010 முதல் 2016-ம் ஆண்டு வரையில் பல்வேறு காரணங்களுக்காக நிகழும் தற்கொலை சம்பவங்கள் குறித்து சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இதன்படி, குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் 40 விநாடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என அந்த அறிவுப்பு சொல்கிறது. அவர்களில் பலர் பொதுவாக குறைந்த வருவாய், அதிக பணிச்சுமை மற்றும் குடும்பத் தகராறினால் தங்களை துப்பாக்கியால் சுட்டுக் கொண்டும், தூக்கு மாட்டியும், விஷம் குடித்தும் தற்கொலை செய்திருக்கின்றனர்.
இலங்கை, இந்தியா, தென்கொரியா, உகாண்டா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அதிக தற்கொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இங்கு ஒரு லட்சம் பேரில், 13.7 சதவிகிதம் பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இவர்களில் 15 முதல் 29 வயதுக்கு உட்படடவர்களே அதிகம்.
பொதுவாக பெண்களைவிட ஆண்கள்தான் அதிகளவு தற்கொலை பட்டியலில் உள்ளனர். எனினும் வங்காள தேசம், மியான்மர், சீனா, மொராக்கோ நாடுகளில் ஆண்களைவிட பெண்களே தற்கொலை பட்டியலில் அதிகம் என கூறப்படுகிறது. மொத்தத்தில், இந்த நாடுகளில் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என தெரியவந்துள்ளது.
Leave a comment
Upload