தொடர்கள்
கவிதை
 நீளும் நிர்பயா மரணங்கள் - கே.ராஜலட்சுமி

2020909152845790.jpeg

நடந்து செல்லும்
பாதையில்
முட்கள் இருந்தால்
அகற்றி விட்டுச்
செல்லலாம்.

முட்களால் அமைந்த
பாதையில் அல்லவா
நடந்து சென்றேன்
சாதி வெறி பிடித்த
கயவர்க்கு இரையாவது
அறியாமல்!

குற்றுயிராய் ஆன பின்னும்
குறுகிய நாட்கள்
தக்க வைத்துக்
கொண்டிருக்கிறேன் உயிரை!

வாழ்ந்திடவா? இல்லை!..
சட்டத்தின் குரல்வளையை
கடித்து அதன் ஓட்டையில்
நீதியின் ரத்தத்தைக் குடிக்கத்
துடிக்கும் குற்றவாளிகளும்
காவலர் போர்வையில்
விலங்கினமாய் நடமாடும்
கைக் கூலிகளும்
கைவிலங்கிட.

என் வாக்கு மூலம் எனும்
ஆயுதம் கொண்டு
கழுவேற்றுவதாக
நம்பிக்கை கொள்கிறேன்.

என் சாவில் கிடைக்கும் நீதி
என் ஆன்மாவுக்கு நிம்மதி
அவ்வளவு தான்!

உடைகளில் மாற்றம் பற்றி
வாய் கிழிய பேசியோரே!
ஒரு சிறு கிராமத்தில் (ஹாத்தரஸ்) சீரழிந்த எனக்கு உமது பதில் என்ன?..

என் போல் இன்னும் பல நிர்பயாக்கள் பலி எண்ணிக்கை தொடரும் சட்டம் சரிவரத் தன் கடமையைச் செய்யும் காலம்

வரும் வரை!..

தண்டனைகள் மிகக் கடுமையாகும்
நாள் வரும் வரை!..