கேரளாவின் குழி மந்தி பிரியாணி...!
கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சின், எர்ணாகுளம், மலப்புரம் போன்ற நகரங்களில் உள்ள முக்கிய ரெஸ்டாரன்ட்களில் ஒரு வகை ஸ்பெஷல் பிரியாணி அனைவரின் வாயிலும் எச்சியை ஊறவைக்கும். அது தான் அரேபியன் பிரியாணியான ‘குழி மந்தி பிரியாணி’.

இந்த வாரம் விகடகவிக்காக... எர்ணாகுளம் பள்ளி புறத்தை சேர்ந்த இளம் பெண் ஆன் மேரி, ‘குழி மந்தி பிரியாணி’யை எப்படி வீட்டிலே தயாரிப்பது என்பதை நேரடியாக கற்று கொடுக்கிறார்.

இந்த குழி மந்தி பிரியாணி, அரேபியாவில் இருந்து கேரளா வந்ததாம்... பெரிய குழியில் மரக்கரி எரிக்கப்பட்டு, அந்த அனலில் பெரிய அண்டாவை குழியில் பொருத்தி, அதில் இந்த ஸ்பெஷல் குழி மந்தி பிரியாணி தயார் செய்யப்படும்... இதற்கான கிச்சன் சற்று பெரியதாகவே இருக்கவேண்டும். கேரளா செல்பவர்கள் இந்த அரேபியன் குழி மந்தி ரெஸ்ட்டாரெண்ட்டுகளுக்கு விசிட் செய்தால் சூப்பர்.
இதே குழி மந்தி பிரியாணியை எந்த குழியும் இல்லாமல் நம்ம வீட்டு கிச்சனில் சுவையாக செய்ய சொல்லி கொடுக்கிறார் ஆன் மேரி.....
குழி மந்தி பிரியாணி தயாரிக்க தேவையான பொருட்கள்....
நெய் -2 டேபிள் ஸ்பூன்,
சமையல் எண்னை -1 கப்,
லவங்கம் -2 முதல் 5,
பட்டை -2 முதல் 5,
ஏலக்காய் -5, கிராம்பு - 10 முதல் 15,
மிளகு பொடி -3 டேபிள் ஸ்பூன்,
பெரிய வெங்காயம் அளவாக 3, உப்பு-2 டேபிள் ஸ்பூன், இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட் -2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் - 6 முதல் 7, தண்ணீர் - மூன்று கப், அரிசிக்கு - 6 கப் தண்ணீர் சேர்க்கவும்.
கோழி கறி - ஒன்னறை கிலோ அல்லது 6 - 8 பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
தக்காளி - 2, எலுமிச்சை -1.
சிக்கன் ஊறவைத்து தயாரிக்கும் முறை: வர மிளகாய் - 4 முதல் 5,
மல்லி -1 டீஸ்பூன், மல்லி தூள் -1 டேபிள் ஸ்பூன்,
வர மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன், தயிர் - 1 கப், வெண்ணை -2 டேபிள் ஸ்பூன், உப்பு -1 டேபிள் ஸ்பூன், மிளகு தூள் - 1 டேபிள் ஸ்பூன்...

குழி மந்தி பிரியாணிக்கு மேலும் சுவையை கூட்டுவது மைனீஸ் சைடு டிஷ்.
முட்டை - 3, எலுமிச்சை சாறு -1 /2 டேபிள் ஸ்பூன், உப்பு -1 சிட்டிகை,
சக்கரை -1 சிட்டிகை, சமையல் எண்ணெய் -2 கப், வெள்ளைபூண்டு -2 பல்..
மேலே சொன்ன அனைத்தையும் ரெடி செய்து செய்முறையை விளக்கினார்.
குழி மந்தி பிரியாணி பெரிய குழியினுள் அண்டாவை வைத்து சமைப்பார்கள்.. ஆனால் ஆன் மேரி, சாதாரண குக்கரில் சமைத்து அசத்திவிட்டார்.
குழி மந்தி பிரியாணியை சுவைத்து திகட்டாமல் அசந்து விட்டோம்....
நீங்களும் வீட்டில் ரெடியாகுங்கள்... இந்த வாரம் உங்கள் கிச்சனில் இந்த டேஸ்ட்டி குழி மந்தி பிரியாணியை சமைக்க...

Leave a comment
Upload