
அமெரிக்க அதிபர் தேர்தல் சூடு பிடிக்கும் வேளையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி ஒரு வாரத்திற்கு மேல் மருத்துவமனையில் உள்நோயாளியாக அதிபர் டிரம்ப் சிகிச்சை பெற்றார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரோனா வைரஸுக்கு எதிராக தனது மருத்துவதுறையினர் மற்றும் தடுப்பூசி பணி தயாரிக்கும் பணியினை தீவிர படுத்தி வந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப் முககவசம் அணிவதை ஆரம்பம் முதல் தவிர்த்து வந்தார். கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்ட பின் மருத்துவர் ஆலோசனையின் பேரில் சில நாட்கள் மட்டும் முகத்திற்கு மாஸ்க் அணிந்திருந்தார்.
எலியின் மண்ணீரலில் இருந்து எடுக்கப்பட்ட மைலோமா செல்களுடன் பாலிக்குளோனல் பி என்ற செல்களை இணைத்து மோனாக்ளோனல் ஆன் டிபாடி (mAbs) கலப்பின செல்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை நோயுற்ற மனிதர்களின் உடலில் செலுத்தும் போது உடலுக்குள் செல்லும் கலப்பின செல்கள் (hybridoma), உடலில் பல்கி பெருகி நோய் எதிர்க்கும் ஆன் டி பாடி செல் ஆன்டிஜென் செல்களாக மாறி, வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமிகளை அழிக்கும். தற்போது அமெரிக்க மருத்துவர்கள் டிரம்பிற்கு எலி மற்றும் வெள்ளெலிகளின் கல்லீரலில்(spleen) இருந்து எடுத்த செல்கள் மூலம் தயாரித்த ஆன்டிபாடியை தான், அவரது உடலில் சில மருந்துகளுடன் காக்டெயிலாக செலுத்தி உள்ளனர் என்ற தகவல் அமெரிக்காவின் பிரபல நாளேடான வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டு உள்ளது.

அமெரிக்க அதிபர் நல்ல முறையில் சிகிச்சைக்கு மருத்துவமனையில் கடந்த ஒரு வாரகாலமாக ஒத்துழைத்தார் என்று மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். சிகிச்சைக்கு பின், அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு அவருக்கு நோய்தொற்று முற்றிலும் நீங்கி விட்டது என்று நெகடிவ் ரிப்போர்ட்டை இதுவரை மருத்துவமனையோ அல்லது வெள்ளை மாளிகையோ வெளியிடவில்லை.
அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் சனிக்கிழமையன்று நடைபெறும் தேர்தல் விவாதத்தில் தான் கலந்து கொள்ள போவதில்லை என தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிடும் ஜோ பிடன் அறிவித்துவிட்டார். ஏனெனில் அதிபர் டிரம்ப், கொரோனா வைரஸ் தாக்குல் நோய் தொற்றிலிருந்து இன்னும் விடுபடவில்லை.
அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று சிஎன்என் செய்தி நிறுவனம் எடுத்தக் கருத்து கணிப்பில் கொரோனா நோய் தாக்குதலுக்கு பின் அமெரிக்க அதிபர் டிரம்ப் பின் தங்கியுள்ளார் என்று அவர்களின் கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.
கொரோனாவிற்காக டிரம்பிற்கு முழுமையாக சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் சனிக்கிழமையன்று நடைபெறும் தேர்தல் விவாதத்தில் கலந்து கொள்ள முழு உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது!
கொரோனாவுடன் வாழ பழகி கொண்டு விட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப் என்பதே அமெரிக்க முழுவதும் பேச்சாக உள்ளது!

Leave a comment
Upload