சுதந்திரம் இருக்கா..?

ஒரு இந்தியனும் பாகிஸ்தானியும் பேசிக் கொண்டனர்.
இந்தியன் சொன்னான். “எங்க நாட்டுல இருக்கற சுதந்திரம் உங்க ஊர்ல இருக்காடா? நாங்க பார்லிமெண்ட் வாசல்ல நின்னு மோடி ஒழிக, பாசிச மோடி ஒழிகன்னு கத்துவோம். அவ்ளோ சுதந்திரம்.”
பாகிஸ்தானி சொன்னான். “இதென்னய்யா பெரிய பிரமாதம். நாங்களும் தான் இஸ்லாமபாத் பாராளுமன்ற வாசல்ல நின்னு மோடி ஒழிகன்னு கத்துவோம். ரொம்ப ஈசி.
விலை உசந்த கிளி..!

ஒரு மனிதன் கிளிக்கடைக்குள் சென்றான்.
மூன்று கிளிகள் இருந்தன.
மூன்றும் ஒன்று போலவே இருந்தன.
கடைக்காரர் சொன்னார்... இடது புறம் ஓரமாக இருந்த கிளியைப் பார்த்து “இந்த கிளி ஆயிரம் ரூபா”.
வாங்க வந்தவர் கேட்டார். “ஏன் இந்த கிளிக்கு இவ்ளோ விலை சொல்ற?”
கடைக்காரர் சொன்னார்.... “ஏன்னா? இந்தக் கிளிக்கு கம்ப்யூட்டரை எப்படி யூஸ் பண்றதுன்னு தெரியும்!”
வா.வந்தவர்... “ஓ... அப்ப அந்த இரண்டாவது கிளி என்ன விலை?”
கடைக்காரர்... “அது இரண்டாயிரம் ரூபாப்பா. ஏன்னா அது முதல் கிளி பண்ற எல்லாத்தையும் பண்ணும். அது மட்டுமல்ல... மொபைல் அப்ளிகேஷன்லாம் எழுதும்.. நிறைய வேலை செய்யும்..”
வந்தவருக்கு ஆச்சரியம். சரி அந்த மூணாவது கிளி என்ன விலைப்பா?
கடைக்காரர் சொன்னார். “அது ஐயாயிரம் ரூபா.”
எதிர்பார்த்தது போலவே வந்தவர் கேட்டார். “அடேங்கப்பா. இது என்ன பண்ணும் ?”
கடைக்காரர் சொன்னார்.
“உண்மைய சொல்லணும்னா.. அது எதுவுமே செஞ்சு நான் பாத்ததில்லை. ஆனா அந்த மத்த இரண்டு கிளிகளும் இதை பாஸ் அப்படின்னு தான் கூப்பிடுது. அதான் அந்த விலை.”
துரத்தல்...

இன்று என் பாஸிடம் சொன்னேன். என் பின்னாடி மூன்று நிறுவனங்கள் துரத்துகிறது, எனக்கு சம்பள உயர்வு வேண்டும் என்று.
சில நிமிடங்கள் யோசித்தவர், சரி என்று பேரம் பேச ஆரம்பித்தார். ஒரு அரைமணி நேர பேச்சுக்கு பின் ஒரு 5 சதவிகித சம்பள உயர்வு முடிவானது.
அவரது கேபினிலிருந்து வெளியே வரும் போது என்னை நிறுத்தி கேட்டார். “ஆமாம் மூன்று நிறுவனங்கள் துரத்துதுன்னு சொன்னியே அப்படி என்னென்ன கம்பெனிலேர்ந்து உன்னை துரத்தினாங்க?”
நான் சொன்னேன்... “ சீட்டுக் கம்பெனி, சிடி பாங்க் கிரெடிட் கார்டு கம்பெனி, அப்புறம் என்னோட டெலிபோன் கம்பெனி. இவுங்க தான் துரத்தறாங்க. பில்லு கட்டலையாம்.!!”
குடி மகன்...!

பாருக்குள் நுழைந்த இளைஞன் சொன்னான்.
“பிரச்சினை ஆரம்பிக்கறதுக்குள்ள ஒரு பீர் குடுப்பா...”
வந்த சில்லென்ற பீரை மடக் மடக்கென குடித்தான். திரும்பவும் சொன்னான். ‘பிரச்சினை ஆரம்பிக்கறதுக்குள்ள இன்னொரு பீர் கொடுப்பா!’
பார் ஓனருக்கு புரியவில்லை. இருந்தாலும் கொண்டு வந்தார். மடக் மடக்கென குடித்தான்.
திரும்பவும் சொன்னான். ‘பிரச்சினை ஆரம்பிக்கறதுக்குள்ள இன்னொரு பீர் கொடுப்பா!’
பார் ஓனருக்கு புரியவில்லை. இருந்தாலும் கொண்டு வந்தார். மடக் மடக்கென குடித்தான்.
திரும்பவும் சொன்னான். ‘பிரச்சினை ஆரம்பிக்கறதுக்குள்ள இன்னொரு பீர் கொடுப்பா!
பார் ஓனருக்கு புரியவில்லை. இருந்தாலும் கொண்டு வந்தார். மடக் மடக்கென குடித்தான்.
……….
ஒரு கட்டத்தில் குடிக்க முடியாமல் நிறுத்தும் போது கடைக்காரர் கேட்டார். “சரி சரி, குடிச்ச பீருக்கு எப்ப பணம் தரப் போற..”
குடிகாரன் சொன்னான். “பாத்தியா பிரச்சினை ஆரம்பிச்சுருச்சு..!”
ஒரு அசைவ ஜோக்!!
எதிரே வந்த அந்தப் பெண்ணைப் பார்த்து பிரமித்துப் போனான். அவ்வளவு பெரிய....
வேண்டாம்...
இந்த வாரம் புரட்டாசி...
வலைக்கள்ளன் சைவமாக்கும்!!

Leave a comment
Upload