தொடர்கள்
நெட் ஜோக்ஸ்
வலைக்கள்ளன்

75 மாடியும் மூன்று இயக்குனர்களும்...

2020916192920160.png

கெளதம் வாசுதேவ மேனன், மிஷ்கின், பாலா மூன்று பேரும் ஒரு சமயம் நியூயார்க் நகரத்திற்கு சென்றிருந்தார்கள்.

வெளியே சுற்றி விட்டு மீண்டும் ஹோட்டலுக்கு வரும் போது, நியூயார்க்கில் அப்போது கரெண்ட் போயிருந்த நேரம்.

ரிசப்ஷனில் வந்து கேட்கும் போது... மன்னிக்கவும் லிஃப்ட் வேலை செய்யாது. நீங்கள் உங்கள் அறைகளுக்கு நடந்து தான் செல்ல வேண்டும் என்றாள் ரிசப்ஷனிஸ்ட்.

மூவரும் தங்கியிருந்தது 75 வது மாடியில்.

மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு சரி வேறு வழியில்லை நடந்து விடுவோம் என்றார்கள். ஆனால் போரடிக்காமல் இருக்க ஒரு ஐடியா செய்து கொண்டனர்.

முதல் 25 மாடிக்கு கெளதம் வாசுதேவ மேனன் காதல் கதை சொல்ல வேண்டும்.

அடுத்து 25 மாடிக்கு மிஷ்கின் பேய்க்கதை சொல்ல வேண்டும்.

கடைசி 25 மாடிக்கு எப்பொழுதுமே சோகமான, கனமான விஷயங்களைச் சொல்லும் பாலா கதை சொல்ல வேண்டும்.

களைப்பு தெரியாமல் ஏறி விடலாம் என்று முடிவானது.

முதல் இருபத்தைந்து மாடிக்கு கெளதம் கதை சொல்லிக் கொண்டே வந்தார். அதில் ஆண்டிரியா வந்தார், சிம்பு வந்தார் ஏகப்பட்ட ரொமான்ஸ் வந்தது.. காதல் சொட்டச் சொட்ட இருவருக்கும் ஒரே கிளு கிளுப்பு தான்.

காதல் ரசத்தில் நனைந்து விட்டனர் இருவரும்.

மூச்சு வாங்கிக் கொண்டனர்.

அடுத்த 25 மாடி…..

மிஷ்கின் கதை சொல்லத் துவங்கினார்.

பேய்க்கதை. பிசாசுக் கதை. சைக்கோ கதை. பிசாசு 2,3,4. இப்படி திகில் கதையாக சொல்லிக் கொண்டே போக...

ஏகப்பட்ட ரத்தம், கொலைகள், ராத்திரி என படு பயங்கரமாக போனது கதை! ஒரு கட்டத்தில் பயத்தில் கெளதமும், பாலாவும் ஒருவரையொருவர் கட்டிக் கொண்டு நடக்கும் அளவுக்கு திகிலாக கடந்தது.

ஆச்சு 50 வது மாடி வந்தாயிற்று.

இப்போது பாலாவோட முறை.

மற்ற இருவரும் அவரையே பார்த்துக் கொண்டிருக்க.. பாலா சொல்லத் துவங்கினார்.

“நம்மோட வாழ்க்கையிலேயே ஒரு சோகமான கதையை சொல்லப் போறேன். ஒரு ஊர்ல பாலான்னு ஒருத்தன் இருந்தான். அவன் என்ன பண்ணினான், மூணு ரூம் சாவியையும் கார்லயே வெச்சிட்டு வந்துட்டான்……..”


இருமல்...

2020916193327126.gif

மருந்துக் கடை ஓனர் உள்ளே நுழைந்தார். சுவரோரமாக ஒருவன் அழுத்தமாக சாயந்து நின்று கொண்டிருந்தான். துவண்டிருந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

ஓனர், ஜூனியர் வேலையாள் ஒருவனிடம் கேட்டார்.

“என்னய்யா பண்ணிக்கிட்டுருக்காரு அந்தாளு?”

கூலாக சொன்னார் சிப்பந்தி. “அதுவா முதலாளி, காலைல பயங்கர இருமலா இருக்குன்னு வந்தாப்டி, கழுத தேடிப் பாத்தேன்.. இருமல் மருந்தே கிடைக்கல. அதனால பேதியாவற மருந்து ஒரு பாட்டில் கொடுத்துட்டேன்.

ஓனர் பயங்கர கடுப்பானார். “அடப்பாவி, ஒரு இருமலை எப்படிடா பேதி மருந்து குணப்படுத்தும்...? அறிவிருக்கா??”

சிப்பந்தி சொன்னார் “கண்டிப்பா குணப்படுத்தும் முதலாளி. அங்க பாருங்க அவனை. எங்க இருமல் வந்துருமோனு வெக்கப்பட்டு, பயந்து போய் ஓரமா நிக்கறாப்ல..”


வாலிபங்கள் போகும் வயதாக கூடும்…..

2020916193428164.jpg

சுப்புலட்சுமியும் ராகவனும் படுத்திருந்தார்கள்.

சுப்புலட்சுமிக்கு ஏதோ ரொமான்ஸ் மூடு.

“என்னங்க அப்பல்லாம் என்னோட கைய அழுத்தி புடிச்சிப்பீங்க. இப்பல்லாம் அப்படி செய்யறதே இல்லை...”

ராகவனுக்கு களைப்பு, தூக்கம் வந்தது. இருந்தாலும் கட்டிலிலிருந்து கொஞ்சம் எம்பி சுப்புலட்சிமியின் கையை பற்றிக் கொண்டார்.

கொஞ்ச நேரம் கழித்து சுப்பு சொன்னார்... “ஹுக்கும். அது மட்டுமா அப்பல்லாம் ஆசையா கிஸ் பண்ணுவீங்க.”

எரிச்சலான ராகவன். கொஞ்சம் எட்டிப் போய் சன்னமாக ஒரு முத்தம் கொடுத்து விட்டு போதுமா என்பது போல் பார்த்து விட்டு தூங்கப் போனார்.

சுப்பு விடவில்லை.

ஒரு நிமிடம் கழித்து “வெறும் கிஸ் மட்டுமா கொடுப்பீங்க. அப்படியே கொஞ்சம் அழுத்தி என் கழுத்துல கடிக்க மாட்டீங்க...?

என்று சொல்லி விட்டு திரும்பும் போது ஒரு எதிர்பார்ப்பு தெரிந்தது.

ராகவனுக்கு இப்போது கோவம் வந்து விட்டது. போர்வையை உதறி விலக்கி விட்டு படுக்கையை விட்டு எழுந்து நடக்கத் துவங்கினார்.

சுப்புலட்சுமி சிணுங்கிக் கொண்டே கேட்டார்... “எங்க எழுந்து போறீங்க..?”

ராகவன்.. “இருடி. பல்லு செட்ட எடுத்துட்டு வரேன்..”